1. பகையும் வறுமையும் நோயும் தீண்டாப் பொருள்வளம் நிறைந்த மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைச் காட்சிப்படுத்தும் காண்டம்
- செலவியற் காண்டம்
- நுபுவ்வத்துக்காண்டம்
- ஹிஜிறத்துக் காண்டம்
- விலாதத்துக் காண்டம்
2. கூற்றை ஆராய்க
1. ‘சீறா’ என்பது சீறத் என்னும் அரபுச் சொல்லின் திரிபு ஆகும்.
2. இதற்கு ‘வாழ்க்கை’ என்பது பொருள்.
3. புராணம் – வரலாறு
4. நபிகள் பெருமானின் வாழ்க்கை வரலாற்றினைக் கூறும் நூல்.
- 1, 2 தவறு
- 2, 3 தவறு
- 3, 4 தவறு
- அனைத்தும் சரி
3. இசுலாமியத் தமிழ் இலக்கியத்தில் முதன்மையானதாக விளங்குவது
- சின்னச்சிறா
- சீறாப்புராணம்
- முதுமொழி மாலை
- முகுந்த மாலை
4. மலிந்த – வேர்ச்சொல் அறிக
- மலி
- மல்
- மலிவு
- மலிதல்
5. ஹிஜிறத் என்ற அரபுச் சொல்லுக்கு _______ என்பது பொருள்.
- இடம் பெயர்தல்
- பெருகுதல்
- வளர்ச்சி அடைதல்
- இடத்தை அடைதல்
6. நபிகள் நாயகம் இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகரத்திற்குத் தம் துணைவரான _________ முதலானோருடன் மதீனா நகரத்தில் நுழைந்தார்.
- கதீஜா
- பாத்திமா
- அபூபக்கர்
- அப்துல்காதர்
7. நபிகள் நாயகம் மதீனா நகரத்தில் நுழையும் போது கடந்து வந்த நிலங்கள்
- முல்லை, குறிஞ்சி
- நெய்தல், மருதம்
- மருதம், பாலை
- குறிஞ்சி, நெய்தல்
8. கூற்றும், காரணமும்
கூற்று (A) :சீறாப்புராணத்தை முடிப்பதற்கு முன்பே உமறுப்புலவர் இயற்கை எய்தினார்.
காரணம் (R) “பனி அகமது மரைக்காயர்” இதன் தொடர்ச்சியாக “சின்னச்சீறா” என்ற நூலைப் படைத்துள்ளார்.
- கூற்று A சரி, காரணம் R தவறு
- கூற்று A தவறு, காரணம் R சரி
- கூற்று A, காரணம் R இரண்டும் சரி. காரணம் R கூற்று Aவிற்கான சரியான விளக்கம்
- கூற்று A, காரணம் R இரண்டும் சரி. காரணம் R கூற்று Aவிற்கான சரியான விளக்கமல்ல
9. சீறாப்புராணத்திலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
- 5025
- 5026
- 5027
- 5028
10. முதுமொழிமாலை என்னும் நூலின் ஆசிரியர்
- உமறுப்புலவர்
- பனி அகமது மரைக்காயர்
- காசிம் மரைக்காயர்
- குணங்குடி மஸ்தான்
11. பொருந்தாவற்றை தேர்க
- கம்பலை – பேரொலி
- துன்ன – ஒதுங்கிய
- காய்ந்த – சிறந்த
- மறுவிலா – குற்றம் இல்லாத
12. ஈடன், பொன்னகர் இலக்கணக்குறிப்பு தருக
- ஈற்றுப்போலி, இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
- பெயரெச்சம், பண்புத்தொகை
- வினையெச்சம், வினைத்தொகை
- ஈற்றுப்போலி, இரண்டாம் வேற்றுமை தொகை
13. ஈறு போதல், இனமிகல் புணர்ச்சி விதிப்படி அமைந்துள்ள சொல்
- மனையென
- அரும்பொருள்
- குறிக்கோள்
- பந்தற்கொடி