1. நான் என்பாய் அது நீயில்லை – வெறும்
நாடக வசனம் பேசுகிறாய் என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்
- சாகுல் அமீது
- அப்துல் ரகுமான்
- சுந்தரனார்
- இன்குலாப்
2. கூற்றை ஆராய்க
1. காக்கை குருவி எங்கள் ஜாதி – இன்குலாப்
2. கூவும் குயிலும் கரையும் காகமும் விரியும் எனது கிளைகளில் அடையும் – பாரதியார்
- இரண்டும் சரி
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் தவறு
3. பொருத்துக
1. அயம் | துறவு |
2. தோட்டி | ஆடு |
3. அண்டயோனி | பாய் |
4. சாடு | ஞாயிறு |
- 1, 2, 4, 3
- 2, 1, 4, 3
- 1, 2, 3, 4
- 2, 1, 3, 4
4. தமிழ் நாடக இலக்கண நூல்களில் பொருந்தாது
- அகத்தியம்
- குணநூல்
- கூத்தநூல்
- தொல்காப்பியம்
5. தமிழின் முதல் பா வடிவ நாடக நூல்
- மனோன்மணீயம்
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தமணி
- பட்டினப்பாலை
6. லிட்டன் பிரபு எழுதிய நூல்
- மறைந்து போகும் காயங்கள்
- இரகசிய வழி
- வலியின் வலிமை
- சுந்தரன் அழகு
7. மனோன்மணீயத்தின் கிளைக்கதை
- சிவகாமியின் சரிதம்
- சிவகாமியின் சரித்திரம்
- சிவகாமியின் சபதம்
- சிவகாமியின் சந்தம்
8. கூற்றினை ஆராய்க (சுந்தரனார்)
1. திருவிதாங்கூரில் உள்ள ஆலப்புழையில் 1885-ல் பிறந்தார்.
2. திருவனந்தபுரம் அரசுக் கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார்
3. மத்திய அரசு இவருக்கு “ராவ்பகதூர்” என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.
4. தமிழக அரசு இவருக்குப் பெருமை சேரக்கும் வகையில் இவர் பெயரால் திருநெல்வேலியில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவியுள்ளது.
- 1, 2 சரி
- 2, 4 சரி
- 1, 4 சரி
- 2, 3 சரி
9. மனோன்மணீயம் _______ அங்கங்களும் ______ களங்களும் கொண்டது.
- 4, 20
- 6, 22
- 5, 20
- 3, 22
10. ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
- சாகுல் அமீது
- அப்துல் ரகுமான்
- சுந்தரனார்
- இன்குலாப்
10. கூற்றை ஆராய்க (மௌலானா ரூமி)
1. ஆப்கானிஸ்தானில் 1207இல் பிறந்தார்
2. ஆன்ம ஞானியாக மாறி சூூஃபி பிரிவைத் தழுவினார்.
3. இவருடைய மஸ்னவி என்ற உலகப்புகழ் பெற்ற சமஸ்கிருத ஞான காவியம்.
- 2, 3 சரி
- 2, 4 சரி
- 1, 2 சரி
- 1, 2, 3 சரி
11. இன்குலாபின் சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்
- வெள்ளை இருட்டு
- கூக்குரல்
- காந்தள் நாட்கள்
- புலிநகச்சுவடுகள்
12. பொருத்துக
1. நல்லூண் | இலக்கணப்போலி |
2. வாய்க்கால் | பண்புத்தொகை |
3. நெறுநெறு | அடுக்குத்தொடர் |
4. உழுதுழுது | இரட்டைக்கிளவி |
- 1, 2, 4, 3
- 2, 1, 4, 3
- 1, 2, 3, 4
- 2, 1, 3, 4
13. ___________ கவிதைகள் ‘ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்’ என்ற பெயரில் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
- கந்தர்வன்
- அப்துல் ரகுமான்
- சுந்தரனார்
- இன்குலாப்