1. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு என்று குறிப்பிடுகிறவர்.
- பாரதிதாசன்
- ஓளவையார்
- திருவள்ளுவர்
- நாலடியார்
2. கூற்றினை ஆராய்க (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்)
1. உதியன் சேரலாதனுக்கும் வேண்மாளுக்கும் மகனாகப் பிறந்தவன்.
2. வடக்கே இமயமலைவரை படையெடுத்துச் சென்று, வெற்றி பெற்று, இமயத்தில் வில்லினைப் பொறித்தவன்.
3. தமிழின் சிறப்பை உலகறியச் செய்தவன்.
4. கடம்பர்களை வென்று, தன் வீரர்களுக்குக் கவசமாக விளங்கியவன்.
- 1, 2, 3 சரி
- 1, 2, 4 சரி
- 2, 3, 4 சரி
- அனைத்தும் சரி
3. குமட்டூர்க் கண்ணனார் பதிற்றுப்பத்தின் ________ பத்தில் சேரலாதனின் நாடு காத்தற் சிறப்பையும், கொடைச் சிறப்பையும் புகழ்ந்துள்ளார்.
- இரண்டாம்
- மூன்றாம்
- ஆறாம்
- எட்டாம்
4. கூற்றை ஆராய்க
1. தூக்கு என்பது செய்யுள் அடிகளை வரையறை செய்வதாகும்.
2. செந்தூக்கு என்பது வஞ்சிப்பாவின் முதலடி போன்றோ, ஆசிரியவடியின் முதல் போன்றோ அமையும்.
- இரண்டும் சரியல்ல
- 1 மட்டும் சரியல்ல
- 2 மட்டும் சரியல்ல
- இரண்டும் தவறல்ல
5. பொருத்துக
1. பதி | குறையா |
2. தண்டா | நாடு |
3. கடுந்துப்பு | ஓயாத |
4. ஒடியா | மிகுவலிமை |
- 4 1 2 3
- 4 2 1 3
- 1 2 3 4
- 1 2 4 3
6. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய _________ உம்பற்காட்டில் 500 ஊர்களையும் தென்னாட்டு வருவாயுள் பாதியைும் பரிசாகப் பெற்றார்.
- கபிலர்
- பரணர்
- குமட்டூர் கண்ணனார்
- நச்செள்ளையார்
7. இளைஞர் என்ற சொல் _______ ஐ குறிக்கின்றது
- பெண்கள்
- இருபாலர்
- ஆண்கள்
- மூன்றாம் பாலினத்தவர்
8. எத்தனை உயரம் இமயமலை – அதில்
இன்னொரு சிகரம் உனது தலை! என்ற பாடல் வரிகளின் ஆசிரியர்
- பெருஞ்சித்திரனார்
- பாரதியார்
- பாரதிதாசன்
- தாரா பாரதி
9. பாட்டுக்குள்ளே புயல் வைத்தவர்
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசன்
- இராமலிங்கனார்
- பாரதியார்
10. பொருத்துக (பதிற்றுபத்து ஆசிரியர்கள்)
1. முதல் பத்து | பெருங்குன்றூர் கிழார் |
2. மூன்றாம் பத்து | கபிலர் |
3. ஐந்தாம் பத்து | பரணர் |
4. ஏழாம் பத்து | பாலைக் கொளதமனார் |
5. ஒன்பதாம் பத்து | உதியஞ் சேரலாதன் |
- 5 4 3 2 1
- 5 4 3 1 2
- 1 2 3 4 5
- 1 2 3 5 4
11. தவறானவற்றை தேர்க
- தேடுகல்வி இலாததோர் ஊரைத் தீயினுக்கு இரையாக மடுத்தல் – பாரதியார்
- நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் – பாரதி
- வீட்டிற்கோர் புத்தக சாலை வேண்டும் – அறிஞர் அண்ணா
- யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன் பூங்குன்றனார்
12. பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின் என்று குறிப்பிடுவது
- கம்பராயணம்
- திருவாசகம்
- மணிமேகலை
- கலிகத்துப்பரணி
13. விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
மானுட சமுத்திரம் நானென்று கூவு
புவியை நடத்து; பொதுவில் நடத்து! என்ற பாடலில் உலகத்தையே வீடாகக் காட்டியவர்
- பெருஞ்சித்திரனார்
- தாரா பாரதி
- பாரதிதாசன்
- பாரதியார்
14. பதிற்றுப்பத்து நூலினை பதிப்பித்தவர்
- சி.வை.தமோதரனார்
- உ.வே.சா.
- ஆறுமுக பண்டிதர்
- இராசமாணிக்கனார்
15. நன்னாடு இலக்கணக்குறிப்பு தருக
- தொழிற்பெயர்
- வினைத்தொகை
- பண்புத்தொகை
- சொல்லிசை அளபெடை