12th Tamil Test 11 – மெய்ப்பாட்டியல், நடிகர் திலகம் | TNPSC Exams 2024

1. ”என்னைப் போல் சிவாஜி நடிப்பார் . ஆனால் என்னால் தான் சிவாஜி போல் நடிக்க முடியாது” – என்ற கூற்றினை கூறியவர்

  1. ஜானி டெப்
  2. ரொபேர்ட் டி நீரோ
  3. மார்லன் பிராண்டோ
  4. வில் சுமித்
Answer & Explanation
Answer:– மார்லன் பிராண்டோ

2. _________ எனக்கு இயற்கையாக எழும் உணர்ச்சி நாடக முடிவில் எத்தகைய
களைப்பை, சிரமத்தை உண்டாக்குகின்றது என்பதை நினைக்க எனக்குப் பயமாகவே இருக்கிறதென சிவாஜிகணேசன் கூறுகிறார்

  1. கர்ணன்
  2. பராசக்தி
  3. மனோகரா
  4. கட்டபொம்மன்
Answer & Explanation
Answer:– கட்டபொம்மன்

3. சிவாஜிகணேசன் பெற்ற விருதுகளில் பொருந்தாதது

  1. கெய்ரோ விருது
  2. கலைமாமணி விருது
  3. பாரதரத்னா விருது
  4. செவாலியர் விருது
Answer & Explanation
Answer:– பாரதரத்னா விருது

4. சிதம்பர ஸ்மரண என்னும் நூலின் ஆசிரியர்

  1. பாலச்சந்திரன் பள்ளிக்காடு
  2. பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
  3. பாலச்சந்திரன் அல்லிக்காடு
  4. பாலச்சந்திரன் நள்ளிக்காடு
Answer & Explanation
Answer:– பாலச்சந்திரன் சுள்ளிக்காடு

5. சிதம்பர ஸ்மரண என்னும் நூலினை சிதம்பர நினைவுகள் என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்

  1. கே.வி.சைலஜா
  2. பாலச்சந்திரன்
  3. வை.மு.கோதைநாயகி
  4. யூமா வாசுகி
Answer & Explanation
Answer:– கே.வி.சைலஜா

6. மெய்பாட்டியல் பற்றி தொல்காப்பியர் கருத்து

1. சொற்கேட்டார்க்குப் பொருள் கண் கூடாதல்” என்பார் தொல்காப்பிய உரையாசிரியரான பேராசிரியர்.

2. ‘கவி கண்காட்டும்’ என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

  1. கூற்று 1, 2 சரி
  2. கூற்று 1, 2 தவறு
  3. கூற்று 1 சரி, 2 தவறு
  4. கூற்று 1 தவறு, 2 சரி
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2 சரி

7. இலக்கியத்தைப் படிக்குந்தோறும் அதன் பொருளை ஆழப்படுத்தும் வகையில் காட்டப்படும் உணர்ச்சி வெளிப்பாடே ______ எனப்படுகிறது.

  1. படிமம்
  2. குறியீடு
  3. மெய்ப்பாடு
  4. இறைச்சி
Answer & Explanation
Answer:– மெய்ப்பாடு

8. பொருந்தாதை தேர்க

  1. நகை – சிரிப்பு
  2. இளிவரல் – சிறுமை
  3. வெகுளி – சினம்
  4. மருட்கை – மகிழ்ச்சி
Answer & Explanation
Answer:– மருட்கை – மகிழ்ச்சி

9. மெய்ப்பாடு ______ வகைப்படும்

  1. 6
  2. 8
  3. 4
  4. 2
Answer & Explanation
Answer:– 8

10. ஈட்டுபுகழ் நந்தி பாணநீ! எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்  – பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. நந்திக்கலம்பகம்
  2. புறநானூறு
  3. சிலப்பதிகாரம்
  4. குறிஞ்சிபாட்டு
Answer & Explanation
Answer:– புறநானூறு

11. சிறையில் தண்ணீர் கேட்டு, காலம் தாழ்த்தித் கொடுத்ததால் அதை அருந்தாமல் தவிர்த்தவர்

  1. கணைக்காலிரும்பொறை
  2. செங்குட்டுவன்
  3. இளமாறன்
  4. கரிகாலன்
Answer & Explanation
Answer:– கணைக்காலிரும்பொறை

12. ஞமலி என்பதன் பொருள்

  1. மான்
  2. புலி
  3. நாய்
  4. சிங்கம்
Answer & Explanation
Answer:– நாய்

13. மஞ்சை என்பதன் பொருள்

  1. குயில்
  2. காகம்
  3. நாகணவாய்ப்பறவை
  4. மயில்
Answer & Explanation
Answer:– மயில்

14. பொருந்திய நூலினை தேர்க

1. தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல்

2. பழந்தமிழரின் நாகரிகச் செம்மையினைத் தெள்ளத்தெளிய விளக்கும் ஒப்பற்ற பெருநூலாகும்.

  1. புறநானூறு
  2. தொல்காப்பியம்
  3. அகநானூறு
  4. நன்னூல்
Answer & Explanation
Answer:– தொல்காப்பியம்

15. தொல்காப்பியத்தின் ஆசிரியரான தொல்காப்பியரைத் தமிழ்ச் சான்றோர் __________ என பாராட்டுகின்றனர்

  1. ஒல்காப் சிறுபுகழ்த் தொல்காப்பியன்
  2. ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்
  3. ஒல்காப் தனிபுகழ்த் தொல்காப்பியன்
  4. ஒல்காப் புகழ்த் தொல்காப்பியன்
Answer & Explanation
Answer:– ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன்

16. தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர்

  1. இளம்பூரணார்
  2. தர்மர்
  3. தாமத்தர்
  4. பரிமேலழகர்
Answer & Explanation
Answer:– இளம்பூரணார்

Leave a Comment