1. கூற்றினை ஆராய்க (தண்டியலங்காரம்)
1. அணிகளின் இலக்கணத்தை கூறும் நூல்களுள் முதன்மையானது தண்டியலங்காரம்
2. முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை ஆகிய செய்யுள் வகைகளை கூறுகிறது.
3. தொகைநிலை என்னும் வகை காப்பியத்தை குறிக்கிறது.
- கூற்று 1, 2, 3 சரி
- கூற்று 1, 3 சரி 2 தவறு
- கூற்று 1, 2 சரி 3 தவறு
- கூற்று 1, 2, 3 தவறு
2. சிலப்பதிகாரத்தின் பாவிகத்தில் பொருந்தாதது?
- பிறனில் விழைவோர் கிளையொடுங் கெடுப
- அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
- உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்
- ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
3. நன்னூலுக்கு உரை எழுதியவர்?
- இளம்பூரனார்
- ஒட்டக்கூத்தர்
- பரிமேலழகர்
- மயிலைநாதர்
4. சூளாமணியை சி.வை.தாமோதரனார் பதிப்பித்த ஆண்டு?
- 1895
- 1885
- 1865
- 1875
5. கூற்றினை ஆராய்க
கூற்று 1: காப்பியத்தின் சிற்றுறுருப்புகள் – காதை, சருக்கம், இலம்பகம், படலம்
கூற்று 2: காப்பியத்தின் பேருறுப்புகள் – காண்டம் (சிற்றுறுருப்புகளின் தொகுதி)
- கூற்று 1 சரி 2 தவறு
- கூற்று 1 தவறு 2 சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
6. “இந்திரா மோகனா” என்ற நாடக நூலின் ஆசிரியர்?
- வை.மு.கோதைநாயகி
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலையடிகள்
- பம்மல் சம்மந்தனார்
7. அந்தியருளாற் கருகும் உலகு கண்டேன் – பாடல் வரிகளை எழுதியவர்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- கவிமணி
8. பொருந்தாதை தேர்க
- Newsreel – செய்திப்படம்
- Multiplex Complex – ஒருங்கிணைந்த திரையரங்கம் வளாகம்
- Cinematography – ஒலிப்பதிவு
- Animation – இயங்குபடம்
9. பொருத்துக
1. எதிர்பாரத முத்தம் | கவிமணி |
2. மாங்கனி | சுத்தானந்த பாரதி |
3. பாரதசக்தி மகா காவியம் | கண்ணதாசன் |
4. மருமக்கள் மானியம் | பாரதிதாசன் |
- 4, 3, 1, 2
- 4, 3, 2, 1
- 1, 4, 3, 2
- 1, 4, 2, 3
10. விருத்தம் என்னும் ஒரே வகைச் செய்யுளில் அமைந்த நூல்கள்?
- சீவகசிந்தாமணி, கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம், கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம், மகாபாரதம்
11. கூற்றினை ஆராய்க (தொடர்நிலை)
1. ஒரு பாடலையும் மற்றொரு பாடலையும் சொல்லாலும் பொருளாலும் தொடர்பு ஏற்படுத்தும் செய்யுள் வகை
2. தொடர்நிலை பொருள் தொடர் நிலை, சொல் தொடர் நிலை என இரு வகைப்படும்
3. பொருள் தொடர் நிலை – சிலப்பதிகாரம், மகாபாரதம்
4. சொல் தொடர்நிலை – அந்தாதி இலக்கியங்கள்
- கூற்று 1, 2, 3 சரி 4 தவறு
- கூற்று 2, 3, 4 சரி 1 தவறு
- கூற்று 1, 3, 4 சரி 2 தவறு
- கூற்று 1, 2, 4 சரி 3 தவறு
12. காப்பியம் பிரித்து எழுதுக
- காப்பு + இயம்
- காப் + இயம்
- கா + இயம்
- காப்பி + இயம்
13. காப்பியத்தை குறிக்கும் சொற்களில் பொருந்தாதது?
- பொருட்டொடர்நிலைச் செய்யுள்ள
- அகலக்கவி
- தொடர்நிலைச் செய்யுள்
- விருத்தச் செய்யுள்
14. பொருந்தாதவற்றை தேர்க
நூல்கள் | உட்புரிவு |
1. பாரதம் | படலம் |
2. கந்தபுராணம் | சுருக்கம் |
3. மணிமேகலை | காண்டம் |
4. கம்பராமாயணம் | காதை |
- 2, 1, 3, 4
- 1, 2, 3, 4
- 4, 3, 2, 1
- 2, 1, 4, 3
15. வட மொழியில் __________ நூலைத் தழுவி தமிழில் எழுதப்பட்ட அணியிலக்கண நூல் தண்டியலங்காரமாகும்.
- காவ்யதரிசனம்
- மனோன்மணியம்
- தொல்காப்பியம்
- நன்னூல்
16. கூற்று A: சிலப்பதிகாரம் முதலான ஐம்பெருங்காப்பியங்களுள் சிறந்தது சீவக சிந்தாமணி
காரணம் R: பெருங்காப்பியத்திற்குரிய நான்கு வகை உறுதிப் பொருள்களும், பிற உறுப்புகளும் முழுமையாக அமையப்பெற்று விளங்கும் காப்பியம் சீவகசிந்தாமணியே ஆகும்.
- கூற்று A தவறு, காரணம் R சரி
- கூற்று A சரி, காரணம் R சரி; காரணம் R ஆனது கூற்று Aவை விளக்குகிறது
- கூற்று A சரி, காரணம் R தவறு
- கூற்று A சரி, காரணம் R சரி; காரணம் R ஆனது கூற்று Aவை விளக்கவில்லை
17. வை.மு.கோதைநாயகியால் ஜகன் மோகினி என்னும் இதழ் _______ ஆண்டுகள் நடத்தப்பட்டது
- 34
- 35
- 32
- 33
18. நாவல் ராணி, கதா மோகினி, ஏக அரசி என்றெல்லாம் அழைக்கப்பட்டவர் யார்?
- அசலாம்பிகையார்
- நீலாம்பிகையார்
- வை.மு.கோதைநாயகி
- அம்புஜத்தம்மாள்
19. பாவிகம் என்பது காப்பியப் பண்பே – எனக்குறிப்பிடும் நூல் எது?
- நன்னூல்
- தொல்காப்பியம்
- அகத்தியம்
- தண்டி