12th Tamil Test 13 – திருக்குறள் | TNPSC Exams 2024

1. அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை ஒரு குடிசையில் _________ உடன் வாழ்வது போன்றது?

  1. நரி
  2. புலி
  3. அரவம்
  4. மாடு
Answer & Explanation
Answer:– அரவம் (பாம்பு)

2. வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு – குறள் இடம் பெற்றுள்ள அதிகாரம்?

  1. சிற்றினம் சேராமை
  2. நட்பாக்கல்
  3. உட்பகை
  4. சூது
Answer & Explanation
Answer:– உட்பகை

3. தவறான கூற்றை தேர்க

1. ஒருவருக்கு அழிவு வராமல் காக்கும் கருவி – அறிவு
2. பகைவரால் அழிக்க முடியாத பாதுகாப்பு அரண் – நட்பு

  1. 1 மட்டும் தவறு
  2. 2 மட்டும் தவறு
  3. இரண்டும் தவறு
  4. இரண்டுமில்லை
Answer & Explanation
Answer:– 2 மட்டும் தவறு

4. திருக்குறளுக்கு வழங்கப்படும் பெயர்களில் பொருந்தாதது?

  1. பொய்யா மொழி
  2. உத்தர வேதம்
  3. வாயுறை வாழ்த்து
  4. பழமொழி
Answer & Explanation
Answer:– பழமொழி

5. திருக்குறள் _________ பாவால் இயற்றப்பட்டுள்ளது?

  1. குறள் வெண்பா
  2. கலி வெண்பா
  3. ஆசிரியப்பா
  4. விருத்தப்பா
Answer & Explanation
Answer:– குறள் வெண்பா

6. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
– இப்பாடலில் அமைந்துள்ள அணி?

  1. சொல் பின்வருநிலையணி
  2. பொருள் பின்வருநிலையணி
  3. சொற்பொருள் பின்வருநிலையணி
  4. எடுத்துக்காட்டு உவமை அணி
Answer & Explanation
Answer:– சொற்பொருள் பின்வருநிலையணி

7. பின்பு வரப்போவதை முன்பே அறிந்து காத்துக்கொள்ளும் வல்லமை கொண்ட அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வரக்கூடிய _________ ஒன்றும் இல்லை

  1. கைமை
  2. தனிமை
  3. துன்பம்
  4. முதுமை
Answer & Explanation
Answer:– துன்பம்

8. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார் – பாடலில் அமைந்துள் அணி?

  1. உவமை அணி
  2. தொழில் உவமை அணி
  3. எடுத்துக்காட்டு உவமை அணி
  4. ஏகதேச உருவக அணி
Answer & Explanation
Answer:– தொழில் உவமை அணி

9. தன் கடமை இன்னது என்று தெளிவாக அறிந்து, அதைச் செய்வதற்கு ஏற்ற காலத்தையும் தக்க இடத்தையும் ஆராய்ந்து சொல்கின்றவரே சிறந்த __________

  1. அரசர்
  2. அமைச்சர்
  3. படைத்தலைவர்
  4. தூதுவர்
Answer & Explanation
Answer:– தூதுவர்

10. கள்ளுண்பவரை வள்ளுவர் யாருடன் ஒப்பிடுகிறார்?

  1. விலங்கு
  2. இறந்தவர்
  3. புல்
  4. மரம்
Answer & Explanation
Answer:– இறந்தவர்

11. ________ எவர்க்கு எளியது. அதை ________ அரியது

  1. சொல்லுதல், சொல்லியபடி முடித்தல்
  2. சொல்லுதல், நடத்தல்
  3. சொல்லுதல், புரிதல்
  4. சொல்லுதல், கேட்டல்
Answer & Explanation
Answer:– சொல்லுதல், சொல்லியபடி முடித்தல்

12. திருக்குறள் பிரித்து எழுதுக?

  1. திருக் + குறள்
  2. திரு + க்குறள்
  3. திரு + குறள்
  4. திர் + க்குறள்
Answer & Explanation
Answer:– திரு + குறள்

13.  திண்ணியர் என்பதன் பொருள்?

  1. அறிவுடையவர்
  2. மன உறுதியுடையவர்
  3. தீக்காய்வார்
  4. அறிவினார்
Answer & Explanation
Answer:– மன உறுதியுடையவர்

Leave a Comment