1. தென்னிந்தியாவின் நுழைவாயில் என்று அழைக்கபடும் நகரம்
- மதுரை
- கோயம்புத்தூர்
- சென்னை
- திருநெல்வேலி
2. சென்னைக்கு அருகே அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
- பல்லாவரம், அத்திரம்பாக்கம்
- குடியம், அத்திரம்பாக்கம்
- பல்லாவரம், தாம்பரம்
- குடியம், தாம்பரம்
3. கூற்றினை ஆராய்க
கூற்று 1: கொற்றலையாற்றுப் படுகை மனித நாகரிகத்தின் முதன்மையான களங்களில் ஒன்று எனலாம்.
கூற்று 2: பல்லாவரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கோடரி, இந்திய அகழ்வாய்வுத்துறை வரலாற்றில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கூற்று 3: மயிலாப்பூர், பொ.ஆ. 3ஆம் நூற்றாண்டில் ’தாலமி’ என்பவரால் ‘மல்லியர்பா’ எனும் துறைமுகமாகச் சுட்டப்பட்டுள்ளது.
- கூற்று 1, 2 தவறு 3 சரி
- கூற்று 2, 3 தவறு 1 சரி
- கூற்று 2, 3 சரி 1 தவறு
- கூற்று 1, 2 சரி 3 தவறு
4. கி.பி. _______ இல் எழுதப்பட்ட பத்திரம் ஒன்றில் “தொண்டமண்டலத்துப் புழல் கோட்டத்து ஞாயிறு நாட்டுச் சென்னப்பட்டினம்” என்று காணப்படும் குறிப்பு, குப்பம் நகரமாக மாற்றம் பெற்ற வரலாற்றைக் கூறுகிறது.
- 1648
- 1650
- 1647
- 1646
5. கூற்றினை ஆராய்க
கூற்று 1: மயிலாப்பூருக்கு வடக்கே சில குப்பங்கள் மட்டுமே இருந்த மணல்வெளியைக் கிழக்கிந்திய வணிக நிறுவனத்தின் அலுவலர் ‘பிரான்சிஸ்டே’ ஆங்கிலேயர் குடியேற்றத்துக்கான இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
கூற்று 2: அன்று அப்பகுதியில் இருபுறமும் ஓடிக் கொண்டிருந்த கூவ ஆற்றினை ‘மயிலை ஆறு’ என்று அழைத்தனர்.
- கூற்று 1 சரி 2 தவறு
- கூற்று 1 தவறு 2 சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
6. பொருந்தாததை தேர்க
- வடசென்னைப் பகுதிகள் – மதராசப்பட்டினம்
- தென்சென்னைப் பகுதிகள் – சென்னைப்பட்டினம்
- வெள்ளையர் நகரம் – செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு உள்ளே வீடுகள் இருந்த பகுதி
- கருப்பர் நகரம் – கோட்டைக்குள் இருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆங்கிலேயர்கள்
7. சென்னை மாகாணத்தின் முதல் தலைவர்
- தாமஸ் பிட்
- எலி யேல்
- கானிங் பிரபு
- தாமஸ் மன்றோ
8. பொருத்துக
1. 1715 | பிரசிடென்சி பள்ளி |
2. 1812 | கிறிஸ்தவக் கல்லூரி |
3. 1837 | சென்னைக் கோட்டைக் கல்லூரி |
4. 1840 | புனித மேரி தேவாலய தர்மப் பள்ளி |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 2, 1, 4, 3
- 2, 1, 3, 4
9. சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
- 1856
- 1855
- 1857
- 1858
10. கூற்றினை ஆராய்க
கூற்று A: ஆவணங்களை முறையாகக் கையாளும் பழக்கம் கொண்ட ஆங்கிலேயர் உருவாக்கிய
‘மெட்ராஸ் ரெக்காட் ஆபிஸ்’ சாரசனிக் கட்டட முறையில் அமைந்தது.
காரணம் R: இது, இன்று தமிழ்நாடு ஆவணக் காப்பகம் என்று வழங்கப்படுகிறது.
- கூற்று A, காரணம் R சரி, காரணம் R கூற்று A-வை விளக்குகிறது.
- கூற்று A தவறு, காரணம் R சரி
- கூற்று A சரி, காரணம் R தவறு
- கூற்று A, காரணம் R சரி, காரணம் R கூற்று A-வை விளக்கவில்லை
11. பொருத்துக
1. சென்னை இலக்கியச் சங்கம் | 1860 |
2. கன்னிமாரா நூலகம் | 1812 |
3. கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் | 2010 |
4. அண்ணா நூற்றாண்டு நூலகம் | 1869 |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 2, 1, 4, 3
- 2, 1, 3, 4
12. இந்தோ-சாரசனிக் கட்டக்கலை முறையில் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம்
- சேப்பாக்கம் அரண்மனை
- சென்னை பல்கலைக்கழகம்
- விக்டோரியா அரங்கு
- ரிப்பன் கட்டடம்
13. ________-ன் ஆட்சிக் காலத்தை சென்னையின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.
- எலி யேல்
- மவுட்பேட்டன்
- செம்ஸ்போர்டு
- தாமஸ் பிட்
14. சென்னை நகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு
- 1688
- 1689
- 1687
- 1686
15. பொருந்தாதை தேர்க
- வட சென்னை – கொற்றலையாறு
- மத்திய சென்னை – கூவம்
- தென் சென்னை – அடையாறு
- தென் கிழக்கு சென்னை – பாலாறு
16. சென்னையில் ______ பெரிய ஓடைகளும், _______ க்கும் மேற்பட்ட சிறிய ஓடைகளும் இயற்கையாய் அக்காலத்தில் இருந்தது.
- 18, 540
- 19, 550
- 17, 530
- 16, 520
Good