1. பொருத்துக
1. Affidavit | தண்டனை |
2. Jurisdiction | வாதி |
3. Allegation | சாட்டுரை |
4. Plaintiff | அதிகார எல்லை |
5. Conviction | ஆணையுறுதி ஆவணம் |
- 5, 4, 3, 2, 1
- 5, 4, 3, 1, 2
- 4, 5, 1, 3, 2
- 4, 5, 1, 2, 3
2. எட்டுத்தொகை நூல்களில் அகமும் புறமும் சார்ந்த நூல்
- நற்றிணை
- புறநானூறு
- பதிற்றுபத்து
- பரிபாடல்
3. பத்துப்பாட்டு நூல்களில் உள்ள ஆற்றுப்படை நூல்களின் எண்ணிக்கை
- 2
- 3
- 5
- 4
4. 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உள்நாட்டுச் சந்தைக்குப் பொருள்களை எடுத்துச் செல்லும் சிறு வணிகர் கூட்ட ஓவியம் அமைந்துள்ள இடம்?
- சிதம்பரம்
- திருநெல்வேலி
- மகாபலிபுரம்
- திருவண்ணாமலை
5. பிறப்பினால் எவர்க்கும் – உலகில்
பெருமை வாராதப்பா! – பாடல் வரிகளின் ஆசிரியர்
- திரு.வி.க
- கவிமணி
- பாரதியார்
- பாரதிதாசன்
6. கூற்றினை ஆராய்க
கூற்று 1: படிமம் (Image) என்றால் காட்சி என்பது பொருள்.
கூற்று 2: விளக்க வந்த ஒரு காட்சியையோ,
கருத்தையோ காட்சிப்படுத்திக் காட்டுகிற உத்தி, படிமம்.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
7. மாந்தோப்பு வசந்தத்தின் பட்டாடை உடுத்தியிருக்கிறது – என்ற பாடல் வரிகளை எழுதியவர்
- தேவதேவன்
- ஆ.வே.முனுசாமி
- ந.பிச்சமூர்த்தி
- கல்யாண்ஜி
8. உவமை உருவகம் போலப் _________ வினை, பயன், மெய், உரு ஆகியவற்றின் அடிப்படையில் தோன்றும்.
- இறைச்சி
- உவமம்
- குறியீடு
- படிமம்
9. என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது என்று
வ. உ. சி. குறிப்பிடுபவர்.
- சோமசுந்தர பாரதியார்
- சுப்பிரமணிய பாரதியார்
- கவியோகி சுத்தான்ந்த பாரதியார்
- சுப்பிரமணிய சிவா
10. கூற்றினை ஆராய்க
1. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
2. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னின்று செயலாற்றியவர்.
3. தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும் முதலிய பல நூல்களை இயற்றியுள்ளார்.
- 1, 2, 3 தவறு
- 1, 3 சரி 2 தவறு
- 1, 2, 3 சரி
- 1, 2 சரி 3 தவறு
11. தொல்காப்பியப் பொருளதிகார அகத்திணையியல், புறத்திணையியல், மெய்ப்பபாட்டியல் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.
- சோமசுந்தர பாரதியார்
- புலவர் குழந்தை
- ந.பிச்சமூர்த்தி
- செய்குதம்பி பாவலர்
12. ________, ________ மீதான வழக்குகளில் அவர்களுக்காக சோமசுந்தர பாரதியார் வாதாடினார்.
- நீலகண்ட பிரமச்சாரி, அரவிந்த்கோஷ்
- பாரதியார், காமராஜர்
- வ.உ.சி., சுப்பிரமணிய சிவா
- பெரியார், ஜீவானந்தம்
13. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக.
புள்ளைக்கு உடம்பு சரியில்லை மூணு நாளா சிரமப்படுது
- புள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.
- பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூணு நாட்களாக துன்பப்படுகிறது.
- பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாளா துன்பப்படுகிறது.
- பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை. மூன்று நாட்களாக துன்பப்படுகிறது.
14. ஒரு பார்வையில் சென்னை நகரம் – நூலின் ஆசிரியர்
- தோப்பில் மீரான் முகமது
- அசோகமித்ரன்
- வைத்தியநாத்
- ஊரன் அடிகள்