1. இரட்டை அர்த்தங்கள் மாண்டுபோகவில்லை நூலின் ஆசிரியர்
- காளமேகப்புலவர்
- அ.கா. பெருமாள்
- அழகிய சொக்கநாதபுலவர்
- தமிழன்பன்
2. தவறானவற்றை தேர்க
1. வித்யாரம்பம் – கல்வி தொடக்கம்
2. வித்யாப்பியாசம் – கல்விப் பயிற்சி
3. உபாத்தியாயர் – ஆசியர்
4. அக்ஷராப்பியாயசம் – எழுத்துப்பபயிற்சி
- 1, 2 தவறு
- 3, 4 தவறு
- அனைத்தும் தவறு
- அனைத்தும் சரி
3. ஊர்தோறும் பொதுவான இடத்தில் ஒரு பெரிய மரத்தினடியே மேடையொன்று அமைக்கப்பட்டிருக்கும். அதனை _______
எனக் கூறுவர்.
- மன்றம்
- மையம்
- அம்பலம்
- பிராயம்
4. ஜைன மடங்களுக்கும், பாடசாலைகளுக்கும் பொதுவான பெயர்
- திண்ணை
- மாடம்
- வீதி
- பள்ளி
5. கூற்று (A): சுவடிகளிலுள்ள எழுத்துக்கள் செவ்வனே தெரிவதற்காகச் சுவடியில் வசம்பு, மஞ்சள், மணத்தக்காளியிலைச்சாறு அல்லது
ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி, தர்ப்பைக்கரி முதலியவற்றைக் கூட்டிச் செய்த மையை அதில் தடவுவார்கள்.
காரணம் (R): மை தடவிப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் அக்ஷராப்பியாசத்தை ‘மையாடல் விழா’ என்று சொல்வார்கள்.
- கூற்று (A) சரி காரணம் (R) தவறு
- கூற்று (A)யும் காரணம் (R)யும் சரி, கூற்று (A) காரணம் (R)விற்கான சரியான விளக்கத்தை தருகிறது.
- கூற்று (A)யும் காரணம் (R)யும் சரி, கூற்று (A) காரணம் (R)விற்கான சரியான விளக்கத்தை தரவில்லை.
- கூற்று (A) தவறு காரணம் (R) சரி
6. கூற்றினை ஆராய்க
1. ஐயாண் டெய்தி மையாடி அறிந்தார் கலைகள் – சிந்தாமணி.
2. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் – தமிழ்விடு தூது
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1 சரி, 2 தவறு
7. இரட்டைத் துளையுள்ள ஏடுகளில் ஒரு துளையில் செப்புக்
கம்பி அல்லது மூங்கிற் குச்சியைச் செருகிக் கட்டுவதற்கு ________ என்று பெயர்.
- பாசுரம்
- நாராசம்
- துலாபாரம்
- தலாராசம்
8. __________ என்னும் பழைய இலக்கண நூலிலும் பிறவற்றிலும் பிரியுங் காலம் ஓதற் பிரிவென்று சொல்லப்பட்டிருக்கின்றது.
- நனனூல்
- தண்டியலங்காரம்
- அகத்தியம்
- தொல்காப்பியம்
9. பொருந்தாதவற்றை தேர்க
- தமிழ் தாத்தா -உ.வே.சா.
- புலமைப் பெருங்கடல் – ஜி.யு.போப்
- தமிழ் பதிப்புலகின் தலைமகன் – சி.வை.தாமோரனார்
- வசனநடை கைவந்த வல்லாளர்’ – ஆறுமுக நாவலர்
10. உ.வே.சா-விற்கு சென்னை மாநிலக் கல்லூரி டாக்டர் பட்டம் வழங்கிய ஆண்டு
- 1932
- 1942
- 1922
- 1952
11. வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை
கடனாக் கொளினே மடநனி இகக்கும் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- அகநானூறு
- தொல்காப்பியம்
- நாலடியார்
- நன்னூல்
12. கூற்றினை ஆராய்க
1. சுவடிகளை வைப்பதற்கும் எடுத்துச் செல்வதற்கும் உபயோகப்படும் கருவிக்குத் தூக்கு என்று பெயர்
2. அதனை அசை என்றும் சொல்வதுண்டு.
- 1 சரி, 2 தவறு
- 1, 2 சரி
- 1, 2 தவறு
- 1 தவறு, 2 சரி
13. எழுத்தாணிகளின் வகைகளில் தவறானவற்றை தேர்க
- மடக்கெழுத்தாணி
- வாரெழுத்தாணி
- குண்டெழுத்தாணி
- வன்னெழுத்தாணி
14. புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை ______ எழுத்தின் உறுப்புக்கள்.
- வரி
- ஓவிய
- ஒலி
- கோட்டு
15. _______ பிராயத்தில் வித்தியாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள்.
- நான்காம்
- ஐந்தாம்
- ஆறாம்
- மூன்றாம்
16. நவத்வீபம் என்பது ________ உள்ள ஓர் ஊர்
- வங்காளம்
- மகாராஷ்டிரம்
- குஜராத்
- கேரளா
17. கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் பாடமாக வேண்டுமென்று சொல்வதை காணும் முறை
- தலமேல்ப்பாடம்
- தலகீழ்ப்பாடம்
- கணிதப்பாடம்
- அறிவுப்பாடம்
18. சீதாள பத்திரம் என்பதன் பொருள்
- சித்திர மடல்
- தாழை மடல்
- எழுத்து மடல்
- கடித மடல்
19. வரலாற்றாய்வாளரும் தமிழறிஞருமான டாக்டர் மா. இராசமாணிக்கனார் ___________விடம் திண்ணைப்பள்ளி படித்திருக்கிறார்.
- மௌனகுரு
- மகாவித்துவான் சபாபதி
- உ.வே.சா
- மறைமலையடிகள்
Vazhthukkal sir