1. கூற்றினை ஆராய்க
1. உரைநடை: என்பது மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது.
2. கவிதை: எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைவது.
- இரண்டும் தவறு
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரி
2. பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் தன் பெயரை மாற்றி அமைத்தவர்
- ராதாகிருஷணன்
- இராசகோபாலன்
- துரை மாணிக்கம்
- சி.மணி
3. பொருந்தாதவற்றை தேர்க
1. முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட நடை என்ற இதழை நடத்தினார்.
2. இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்;
3. இவர் கலைமாமணி விருது, பாரதியார் விருது, இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 2, 3 மட்டும்
- 1, 3 மட்டும்
4. தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட நூல்களைப் படைத்தவர்.
- பாரதிதாசன்
- சுரதா
- பாரதியார்
- இரா.பி.சேது
5. குதிரை வரையக் குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம் பாடல் வரிகளின் ஆசிரியர்
- சுரதா
- பெருஞ்சித்திரனார்
- சி.மணி
- உடுமலை நாரயணகவி
6. ______ ஆம் ஆண்டு முதல் எழுத்து இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன.
- 1958
- 1959
- 1960
- 1961
7. வே. மாலி, செல்வம் என்ற புனைபெயர்களிலும் தனது படைப்புகளை படைத்தவர்?
- சி.பழனிச்சாமி
- சுரதா
- நகுலன்
- அப்துல்காதர்
8. சரியான கூற்றை தேர்க (சி.மணி)
1. மலையாளப் பேராசிரியரான சி.மணி தாவோ தே ஜிங் எனும் சீன மெய்யியல் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
2. இவர் புதுக் கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப் பயன்படுத்தியவர்.
3. இருத்தலின் வெறுமையைச் சிரிப்பும் கசப்புமாகச் சொன்னவர்.
4. அகல்விளக்கு விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக விருது, ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
- 1, 2 சரி
- 2, 4 சரி
- 1, 4 சரி
- 2, 3 சரி
9. இதில் வெற்றி பெற கவிதையின் ஆசிரியர்
- சி.மணி
- உ.வே.சா
- பாரதி
- சுரதா
10. சாமான்ய மக்களுக்கும் விளங்கும் வண்ணம்
தமிழ்க்கவிதை தரவேண்டும் இந்த நாளில் பாடலில் அமைந்துள்ள பாவகை
- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
- எண்சீர்க் கழிநெடிலடி வெண்சீர் வெண்டளை
- அறுசீர்க் கழிநெடிலடி வெண்சீர் வெண்டளை
11. வினாதல் விசொல்ல விரும்பிய தெல்லாம்
சொல்லில் வருவதில்லைபாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்
- கந்தர்வன்
- இராமலிங்கனார்
- சி.மணி
- ஜெகதீசன்
12. கூற்றினை ஆராய்க (சி.பழனிச்சாமி)
1. யாப்பும் கவிதையும் – இலக்கண நூல்
2. ஒளிச்சேர்க்கை – கவிதைத் தொகுப்பு
- 1 சரி, 2 தவறு
- 1, 2 சரி
- 1, 2 தவறு
- 1 தவறு, 2 சரி