12th Tamil Test 2 – முகம், இரட்சணிய யாத்திரிகம் | TNPSC Exams 2024

1. சுகந்தி சுப்ரமணியனின் கவிதை தொகுப்புகள்

  1. புதையுண்ட வாழ்க்கை
  2. மீண்டெழுதலின் ரகசியம்
  3. சுகந்தி சுப்பிமணியன் படைப்புகள்
  4. a மற்றும் b
Answer & Explanation
Answer:– a மற்றும் b

2. பாதகர் – இலக்கணக்குறிப்பு

  1. வினைமுற்று
  2. வினைத்தொகை
  3. பண்புத்தொகை
  4. வினையாலணையும் பெயர்
Answer & Explanation
Answer:– வினையாலணையும் பெயர்

3. பொருத்துக

1. வாரிதி – இகழ்ச்சியுரை
2. பழிப்புரை – கடல்
3. உன்னலிர் – வலிமை
4. வெய்துற – எண்ணாதீர்கள்

  1. 4, 3, 2, 1
  2. 4, 3, 1, 2
  3. 2, 1, 4, 3
  4. 2, 1, 3, 4
Answer & Explanation
Answer:– 2, 1, 3, 4

4. நற்போதகம் என்ற ஆன்மீக இதழில் இரட்சண்யாத்திரிகம் ____________  ஆண்டுகள் வெளிவந்துள்ளது

  1. 11
  2. 12
  3. 14
  4. 13
Answer & Explanation
Answer:– 13

5. பில்கிரிம்ஸ் புரோகிராஸ் என்ற நூலின் ஆசிரியர்

  1. எர்னஸ்ட் ஹெமிங்வே
  2. ஜான் பன்யன்
  3. எச்.ஏ. கிருட்டிணனார்
  4. த.த.சற்குணர்
Answer & Explanation
Answer:– ஜான் பன்யன்

6. இரட்சண்யாத்திரிகத்தில் இடம் பெற்றுள் பருவங்கள், பாடல்கள்

  1. 5, 3766
  2. 6, 3766
  3. 5, 3676
  4. 6, 3676
Answer & Explanation
Answer:– 5, 3766

7. கிறிஸ்துவ கம்பர் என அழைக்கப்படுபவர்

  1. த.த.சற்குணர்
  2. கண்ணதாசன்
  3. உமறுப்புலவர்
  4. எச்.ஏ. கிருட்டிணனார்
Answer & Explanation
Answer:– எச்.ஏ. கிருட்டிணனார்

8. எச்.ஏ.கிருட்டிணனார் எழுதியுள்ள நூல்களில் பொருந்தாதது

  1. போற்றித் திருஅகவல்
  2. இரட்சணிய மனோகரம்
  3. இரட்சணிய யாத்திரிகம்
  4. போற்றி அகவல்
Answer & Explanation
Answer:– போற்றி அகவல்

9. என்கொல் மேதினி கீண்டு வெடித்திலது என்பார்!
என்கொல் வானம் இடிந்து விழுந்திலது என்பார்! – பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. சிலப்பதிகாரம்
  2. இரட்சண்ய யாத்திரிகம்
  3. போற்றி திருஅகவல்
  4. இரட்சண்ய மனோகரம்
Answer & Explanation
Answer:– இரட்சண்ய யாத்திரிகம்

10. இரட்சணிய சரித படலம் அமைந்துள்ள பருவம்

  1. ஆதி பருவம்
  2. குமார பருவம்
  3. ஆரணிய பருவம்
  4. இரட்சணி பருவம்
Answer & Explanation
Answer:– குமார பருவம்

11. “இஈஐ வழி யவ்வும், உடல்மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே” – விதிப்படி அமைந்துள்ள சொல்லை எடுத்து எழுதுக

  1. பண்மொழி
  2. ஏழையென
  3. முன்னுடை
  4. கருங்கடல்
Answer & Explanation
Answer:– ஏழையென

Leave a Comment