1. வெண்பா வடிவத்தில் பெரும்பாலும் தோன்றிய நூல்கள்
- நீதி இலக்கியங்கள்
- எட்டுத்தொகை
- ஐம்பெருங்காப்பியங்கள்
- ஐஞ்சிறுங்காப்பியங்கள்
2. பிழைகளை நீக்கி எழுதுக
மானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
- மானம் பாத்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன.
- வானம் பாத்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன
- வானம் பார்த்த பூமியில் பயிறு வகைகள் பயிரிடப்படுகின்றன
- மானம் பார்த்த பூமியில் பயறு வகைகள் பயிரிடப்படுகின்றன
3. பொது மொழியில் பொருந்தாத சொல்லினை தேர்க
- கோவில்
- வெங்காயம்
- தலைமை
- தாமறை
4. ஏனைய பாக்களைவிட வரையறுத்த இலக்கணக் கட்டுக்கோப்பு உடைய வெண்பாவினை ________ என்பார்கள்.
- வண்பா
- வன்பா
- வென்பா
- வெல்பா
5. கூற்றை ஆராய்க
1. வெண்பாவை இலக்கணக் கட்டுப்பாடு குலையாமல் இயற்ற வேண்டும்.
2. வெண்பா கலித்தளையால் அமைய வேண்டும் என்பது இன்றியமையாத விதி.
3. வெண்பாவிற்கான தளையே கலித்தளை.
- 3 சரி 1, 2 தவறு
- 2 சரி 1, 3 தவறு
- 1 சரி 2, 3 தவறு
- அனைத்தும் சரி
6. மா முன் நிரை – விளம் முன் நேர் – காய் முன் நேர் என்பதே ______ விற்கான எளிய தளை இலக்கணம்.
- கலிப்பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
- வெண்பா
7. காசு, பிறப்பு என்பவை ________ ஓசையோடு முடியும்
- குற்றியலிகர
- மகரகுறுக்க
- குற்றியலுகர
- ஆய்தகுறுக்க
8. தவறான கூற்றினை கூறுக
1. ஈற்று அயற்சீர் மாச்சீர் என்றால் மலர் (அ) பிறப்பு வரும்.
2. விளச்சீர், காய்ச்சீர் எனில் நாள் (அ) காசு என்னும் வாய்பாடு வரும்.
- 1 மட்டும் தவறு
- இரண்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- இரண்டுமில்லை
9. பொருத்தமான சீரினை எழுதுக
வெய்யோன் _________
- புலர்ந்திட
- காய்ந்திட
- மலர்ந்திட
- ஒளிர்ந்திட
10. வெண்பாவின் வகைகள்?
- 7
- 5
- 4
- 6
11. பொருத்துக
1. குறள் வெண்பா | 13அடியும் 13க்கு மேலும் |
2. இன்னிசைச் சிந்தியல் வெண்பா | 2 அடி |
3. நேரிசை வெண்பா | 3 அடி |
4. பஃறொடை வெண்பா | 4 அடி |
5. கலி வெண்பா | 4 முதல் 12 அடி வரை |
- 5, 3, 4, 1, 2
- 4, 3, 1, 2, 5
- 5, 1, 2, 3, 4
- 1, 2, 4, 3, 5
12. வெண்பாவிற்கான இலக்கணத்தில் பொருந்தாதது
- இயற்சீர் வெண்டளை வெண்சீர் வெண்டளை பிறழாது பா அமைய வேண்டும்.
- ஈற்றடி முச்சீராகவும் ஏனையவை நாற்சீராகவும் இருக்கும்.
- ஈரசைச்சீர்கள் மாச்சீரும் விளச்சீரும் (தேமா, புளிமா, கூவிளம், கருவிளம்) மூவசைச்சீரில் காய்ச்சீரும் (தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய்) வரும்.
- ஈற்றுச்சீர் நாள், மலர், ஆகிய வாய்பாடுகளுள் ஒன்றைக் மட்டுமே கொண்டு முடியும்.
13. அஃது எனக்குத் தெரியாது வரிகளில் அமைந்துள்ள குற்றியலிகரங்களில் பொருந்தாது
- ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
- மென்தொடர்க் குற்றியலுகரம்
- வன்தொடர்க் குற்றியலுகரம்
- உயிர்த்தொடர்
13. கூற்றினை ஆராய்க (மறைமலையடிகள்)
1. பிறமொழிக் கலப்பு இன்றி இனிய, எளிய தமிழ்ச் சொற்களைக் கொண்டே பேசவும் எழுதவும் இயலும் என்று நடைமுறைப்படுத்தினார்.
2. சுவாமி வேதாசலம் எனும் தன்பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டதோடு தம் மக்களின் பெயரையும் தூய தமிழ்ப் பெயர்களாக மாற்றினார்.
- 1 மட்டும் சரி
- 1, 2 தவறு
- 2 மட்டும் சரி
- 1, 2 சரி
14. பொருந்தியதை தேர்க
1. ஞானசாகரம் – 1902
2. Oriental Mystic Myna – 1908
3. Ocean Of Wisdom – 1935
- 1 மட்டும்
- 2 மட்டும்
- 3 மட்டும்
- அனைத்தும்
15. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலின் ஆசிரியர்
- சி.வை.தாமோதரனார்
- அ.கா.பெருமாள்
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
16. பொருந்தாவற்றை தேர்க
- Arrival – வருகை
- Passport – கடவுச்சீட்டு
- Departure – புறப்பாடு
- Conveyor Belt – வானூர்தி
17. பொருத்துக
1. நீங்களும் கவிபாடலாம் | சுரதா |
2. படைப்புக்கலை | கி.வா. ஜகந்நாதன் |
3. கவிஞராக | மு. சுதந்திரமுத்து |
4. துறைமுகம் – | அ.கி. பரந்தாமனார் |
- 4, 1, 2, 3
- 1, 4, 2, 3
- 1, 2, 3, 4
- 4, 2, 1, 3
18. நான்கு – மூன்று – தனிச்சீர் – நான்கு – மூன்று சீர்கள் என்கிற முறையில் எழுதப்படும் வெண்பா?
- இன்னிசை வெண்பா
- சிந்தியல் வெண்பா
- நேரிசை வெண்பா
- பற்றொஃடை வெண்பா