1. 2014இல் அஞ்ஞாடி என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்.
- சுரதா
- ம.பொ.சி.
- ஈரோடு தமிழன்பன்
- பூமணி
2. தவறானவற்றை தேர்க
- இடைச்சொல்லுடன் சொற்களைச் சேர்த்தே எழுத வேண்டும்.
- இரட்டைக்கிளவிச் சொற்களைச் சேர்த்து எழுத வேண்டும்.
- உம்மைத்தொகைச் சொற்களை பிரித்து எழுத வேண்டும்.
- பன்மையை உணர்த்தும் ‘கள்’ விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுத வேண்டும்.
3. அடவி என்ற சொல்லின் பொருள்
- கடல்
- தலைவன்
- உயர்ந்த
- பெருகுதல்
4. பொருத்துக
1. Lobby | ஓய்வறை |
2. Tips | சிற்றுணவு |
3. Checkout | வெளியேறுதல் |
4. Mini meals | சிற்றீகை |
- 1, 4, 3, 2
- 1, 2, 3, 4
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
5. கம்பர் யார்? என்னும் நூூலின் ஆசிரியர்
- பூமணி
- இராஜாஜி
- வ.சுப. மாணிக்கம்
- சுந்தர ராமசாமி
6. எங்களுக்கும் ஓர் ஆறுண்டு
வெறுமணல் பரப்பாய் விரிந்துகிடக்க பாடல் வரிகளின் ஆசிரியர்
- இளங்கோ கிருஷ்ணன்
- நாமக்கல் கவிஞர்
- பூ.மாணிக்கவாசகனார்
- பரிதிமாற்கலைஞர்
7. பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்?
- மாயூரம் வேதநாயகம்
- ஜார்ஜ் ஹெரால்ட்
- ஜி.யு. போப்
- சுத்தானந்த பாரதியார்
8. கூற்றினை ஆராய்க (பரிதிமாற் கலைஞர்)
1. ரூபாவதி, கலாவதி ஆகிய நாடக நூல்களையும் களவழி நாற்பது நூலைத் தழுவி மான விஜயம் என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
2. ஆங்கில நாடக இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நாடகவியல் என்னும் நாடக இலக்கண நூலையும் இயற்றினார்.
- 1 மட்டும் சரி
- இரண்டும் தவறு
- இரண்டும் சரி
- 2 மட்டும் சரி
9. பொருத்ததுக
1. வசி | அறிவு |
2. மகுடன் | உயர்ந்த |
3. திரவியம் | தலைவன் |
4. மதி | செல்வம் |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
10. பொருந்தியவற்றை தேர்க
- அனயம் – வேண்டாத
- கெராமுனுசு – கிராம நிர்வாக அலுவலர்
- தெகஞ்சத – உரசுதல்
- ரோசி – முடிந்ததை
11. கருவேலம்பூக்கள் என்ற திரைப்பத்தினை இயக்கியவர்
- பூமணி
- கண்ணன்
- சுபாஷ்
- மணிசேகரன்
12. சுந்தர ராமசாமி எழுதிய நூல்
- சக்கரவர்த்தித் திருமகன்
- ஒரு புளிய மரத்தின் கதை
- வயிறுகள்
- சிறை
13. நடுவண் அரசு தமிழ்மொழியை உயர்தனிச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு
- 2008
- 2014
- 2004
- 2005
14. கூற்றினை ஆராய்க
1. மு.சி. பூர்ணலிங்கனாருடன் இணைந்து பரிதிமாற் கலைஞர் ஞானபோதினி என்னும் அறிவியல் இதழை நடத்தியுள்ளார்.
2. சூரியநாராயண சாஸ்திரி என்ற பெயரைத் தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று பெயர்மாற்றம் செய்தார்.
3. ‘திராவிட சாஸ்திரி’ என்று சி.வை. தாமோதரனாரால் போற்றப்பட்டவர்.
- 1, 2 சரி 3 தவறு
- 1, 3 சரி 2 தவறு
- 2, 3 சரி 1 தவறு
- 1, 2, 3 சரி
15. பெற்றெடுத்த தமிழ்த்தாயைப் பின்னால் தள்ளி
பிறமொழிக்கு சிறப்பளித்த பிழையை நீக்க பாடல் வரிகளின் ஆசிரியர்
- நாமக்கல் கவிஞர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- இளங்கோ கிருஷ்ணன்