1. அய்யப்ப மாதவன் சிவகங்கை மாவட்டம் __________ சேர்ந்தவர்
- சிங்கம்புணரி
- நாட்டரசன் கோட்டை
- சிறுகூடல்பட்டி
- சின்னநாயக்கனூர்
2. அய்யப்ப மாதவன் எழுதிய கவிதை நூல்களில் பொருந்தாதது
- இன்று
- மழைக்குப் பிறகும் மழை
- நானென்பது வேறொருவன்
- நீர்வெளி
3. பிறகொரு நாள் கோடை கவிதை நூலின் ஆசிரியர்
- மா. இராசமாணிக்கனார்
- ப. ரவி
- அய்யப்ப மாதவன்
- பிரபஞ்சன்
4. பொருத்துக
1. புதுப்பெயல் | தனிமை |
2. ஆர்கலி | கன்னம் |
3. புலம்பு | புதுமழை |
4. கவுள் | வெள்ளம் |
- 3, 4, 1, 2
- 3, 4, 2, 1
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
5. பொருந்தாதவற்றை தேர்க
- குரங்குகள் – குளிரில் நடுங்கின
- விலங்குகள் – மேய்ச்சலை மறந்தன
- பறவைகள் – மரங்களிலிருந்து பறந்தன
- பசுக்கள் – கன்றுகளைத் தவிர்த்தன
6. நக்கீர் எழுதிய நூல்
- திருமுருகாற்றுப்படை
- சிறுபாணாற்றுபடை
- நெடுநெல்வாடை
- பெரும்பாணாற்றுப்படை
7. தவறான கூற்றினை எழுதுக (நெடுநல்வாடை)
- பாட்டுடைத் தலைவன் – பாண்டியன் நெடுஞ்செழியன்
- பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
- 178 அடிகளைக் கொண்டது.
- ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
8. போர்மேற் சென்ற அரசன் குளிர் காலத்தில் தங்கும் படைவீடு ______ துறை எனப்படும்
- பொருண்மொழீக் காஞ்சி
- மகட்பாற்காஞ்சி
- கூதிர்ப்பாசறை
- மறக்களவழி
9. கூதிர் பருவத்திற்குரிய மாதங்கள்
- தை, மாசி
- மார்கழி, தை
- பங்குனி, சித்திரை
- ஐப்பசி, கார்த்திகை
10. புதுப்பெயல் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத்தொகை
- வினைத்தொகை
- வினையெச்சம்
- பெயரெச்சம்