12th Tamil Test 29 – இளந்தமிழே | TNPSC Exams 2024

1. செந்தமிழ் இலக்கணக்குறிப்பு தருக

  1. பண்புத்தொகை
  2. வினையெச்சம்
  3. உருவகம்
  4. பெயரெச்சம்
Answer & Explanation
Answer:-பண்புத்தொகை

2. உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே புணர்ச்சி விதிப்படி அமைந்துள்ள சொல்

  1. செம்பரிதி
  2. வானமெல்லாம்
  3. உன்னையல்லால்
  4. செந்தமிழே
Answer & Explanation
Answer:-வானமெல்லாம்

3. ஒரு கிராமத்து நதி என்னும் நூலிற்காக சாகித்திய அகாதமி விருது பெற்றவர்

  1. தமிழன்பன்
  2. நா.காமராசன்
  3. வைரமுத்து
  4. சிற்பி பாலசுப்பிரமணியம்
Answer & Explanation
Answer:– சிற்பி பாலசுப்பிரமணியம்

4. சிற்பி பாலசுப்பிரமணியன் எழுதிய கவிதை நூல்களில் பொருந்தாதது

  1. ஒளிப்பறவை
  2. சர்ப்பயாகம்
  3. சூரிய நிழல்
  4. அலையும் சுவடும்
Answer & Explanation
Answer:– அலையும் சுவடும்

5. கூற்றினை ஆராய்க (சிற்பி பாலசுப்பிரமணியன்)

1. மலையாளத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
2. சாகித்திய அகாதெமியின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார்.

  1. 1 மட்டும் சரி
  2. 2 மட்டும் சரி
  3. இரண்டும் சரி
  4. இரண்டும் தவறு
Answer & Explanation
Answer:– இரண்டும் சரி

6. செம்பரிதி மலைமேட்டில் தலையைச் சாய்ப்பான்     
    செந்நிறத்துப் பூக்காடாம் வான மெல்லாம்! பாடல் வரிகளின் ஆசிரியர்

  1. பாரதிதாசன்
  2. பாரதியார்
  3. சிற்பி பாலசுப்பிரமணியம்
  4. பிரபஞ்சன்
Answer & Explanation
Answer:– சிற்பி பாலசுப்பிரமணியம்

7. மலையாளக் கவிதை, அலையும் சுவடும் உள்ளிட்ட உரைநடை நூல்களையும் எழுதியவர்

  1. தமிழன்பன்
  2. சிற்பி பாலசுப்பிரமணியம்
  3. நா.காமராசன்
  4. வைரமுத்து
Answer & Explanation
Answer:– சிற்பி பாலசுப்பிரமணியம்

8. செந்தமிழே சொல்லில் இடம்பெற்றுள்ள புணர்ச்சி விதிகள்

  1. ஈறு போதல், முன்னின்ற மெய் திரிதல்
  2. இனமிகல், முன்னின்ற மெய் திரிதல்
  3. இனமிகல், தன்னொற்றிரட்டல்
  4. ஈறு போதல், தன்னொற்றிரட்டல்
Answer & Explanation
Answer:– ஈறு போதல், முன்னின்ற மெய் திரிதல்

Leave a Comment