1. அணியிலக்கணத்தை மட்டுமே கூறும் இலக்கண நூல்
- தொல்காப்பியம்
- வீரசோழியம்
- முத்துவீரியம்
- குவலயானந்தம்
2. காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலினை தழுவி எழுதப்பட்ட நூல்
- மாறனலங்காரம்
- தண்டியலங்காரம்
- குவலயானந்தம்
- தொன்னூல் விளக்கம்
3. கூற்றினை ஆராய்க
1. வம்சமணி தீபிகை என்ற நூல் எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றியது.
2. இந்நூலினை கவிகேசரி சாமி தீட்சிதர் என்பவர் 1879இல் வெளியிட்டார்.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
4. கூற்றினை ஆராய்க (பரலி சு.நெல்லையப்பர்)
1. பாரதிதாசன் நடத்திய சூரியோதயம், கர்மயோகி ஆகிய இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றியுள்ளார்.
2. லோகோபகாரி, தேசபக்தன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகவும் பிறகு துணையாசிரியராகவும் பணியாற்றியவர்.
- 1 மட்டும் சரி
- 2 மட்டும் சரி
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
5. பின்வருபவர்களில் யாருக்கு பாரதி தன் மறைவிற்கு முன் கடிதம் எழுதினார்?
- நெல்லையப்பர்
- சாமி தீட்சிதர்
- குந்திகேசவர்
- இளசை மணி
6. வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்?
- மாணிக்கவாசகனார்
- இராசமாணிக்கனார்
- பரலி சு.நெல்லையப்பர்
- தி.சு. நடராசன்
7. பரலி சு.நெல்லையப்பர் எழுதிய கவிதை நூல்களில் பொருந்தாது?
- நெல்லைத்தென்றல்
- தேசபக்தன்
- பாரதி வாழ்த்து
- உய்யும் வழி
8. ஆணும் பெண்ணும் ஓருயிரின் இரண்டு தலைகள் என்றெழுது எனக் கூறியவர்
- பாரதிதாசன்
- பாரதியார்
- ந.பிச்சமூர்த்தி
- வண்ணதாசன்
9. ஓங்கலிடை வந்து உயர்ந்ததோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் பாடலில் அமைந்துள்ள அணி
- ஏகதேச உருவக அணி
- உவமை அணி
- வேற்றுமை அணி
- பொருள் பின்வரு நிலையணி
10. கூற்றினை ஆராய்க (தண்டி)
1. ஆசிரியர் – தண்டி
2. காலம் – கி.பி. 12ஆம் நூற்றாண்டு
3. பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது;
- 1, 2 சரி 3 தவறு
- 1, 3 சரி 4 தவறு
- 2, 3 சரி 1 தவறு
- அனைத்தும் சரி
11. இலாத இலக்கணக்குறிப்பு தருக
- வினைத்தொகை
- இடைக்குறை
- பண்புத்தொகை
- வினையாலணையும் பெயர்
12. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்று கூறியவர்
- பாரதிதாசன்
- சுரதா
- பாரதியார்
- வண்ணதாசன்
13. __________ என்பவரை பாரதியார் தன் தம்பியாக எண்ணி கடிதம் எழுதியுள்ளார்.
- பரலி சு.நெல்லையப்பர்
- சாமி தீட்சிதர்
- குந்திகேசவர்
- இளசை மணி