1. “உறுபுலி உருஏய்ப்பப் பூத்த வேங்கையைக்
கறுவு கொண்டு, அதன் முதல் குத்திய மதயானை – பாடல் வரியை எழுதியவர்
- கபிலர்
- ஓவையார்
- அம்மூவனார்
- ஓதலாந்தையார்
2. வரங்கள்
சாபங்கள்
ஆகுமென்றால் இங்கே
தவங்கள் எதற்காக? – பாடல் வரிகளை எழுதியவர்
- பாரதிதாசன்
- சுரதா
- அப்துல்ரகுமான்
- ந.பிச்சமூர்த்தி
3. Symbol – கலைச்சொல் தருக
- பன்மை
- குறிப்புகள்
- எளிமை
- ஒன்று சேர்
4. ________ ஆம் நூற்றாண்டில் ‘குறியீட்டியம்’ ஓர் இலக்கியக் கோட்பாடாக உருப்பெற்றது .
- 18
- 17
- 19
- 16
5. தமிழின் செல்வாக்கினாலேயே வடமொழியில் குறிப்புப் பொருள் கோட்பாடு உருவானது என்று _______ குறிப்பிட்டிருக்கிறார்.
- ஹார்ட்
- வில்லியம் ஜோன்ஸ்
- கிரிம்ஸ்
- ஆல்பர்ட் ப்ரெளன்
6. குறியீட்டியத்தை வளர்த்தவர்களில் பொருந்தாதவர்
- பொதலேர்
- ரைம்போ
- மர்லேன்
- மல்லார்மே
7. சரியான கூற்றை தேர்வு செய்க (குறியீட்டின் அடிப்படை இலக்கணங்கள்)
1. சுட்டிய பொருளுக்கும் குறியீட்டுப் பொருளுக்கும் ஏதேனும் ஒரு தொடர்பு இருத்தல் வேண்டும்
2. சுட்டும் பொருள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றாக இருத்தல் வேண்டியதில்லை
3. இத்தொடர்பின் வாயிலாகக் குறியீட்டுப்பொருள் நுண்ணிய முறையில் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
- 1, 2 சரி
- 1, 3 சரி
- 2, 3 சரி
- 1, 2, 3 சரி
8. குடும்பம் என்ற சொல் முதன்முதலில் _______ இடம் பெற்றுள்ளது.
- நாலடியார்
- திருக்குறள்
- நற்றிணை
- கலித்தொகை
9. தேசிய பேரிடர் ஆணையம் அமைக்கப்பட்ட நாள்
- 26.12.2005
- 25.12.2005
- 24.12.2005
- 23.12.2005
10. _______ இல் தென்னிந்தியாவின் முதல் தொடர் வண்டி நிலையம் ________ தில் அமைக்கப்பட்டது
- 1856, இராயபுரம்
- 1856, கொடுங்கையூர்
- 1856, சென்ட்ரல்
- 1856, எழும்பூர்
11. “யதார்த்த நிகழ்வைப் படைப்பபாளுமையுடன் வெளிப்படுத்துவதே ஆவணப்படம்” என்கிறார்
- ஈஸ்ட்மன்
- எட்வர்ட் மைபிரிட்சு
- கிரியோர்சன்
- தாமஸ் ஆல்வா எடிசன்
12. வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும் – பாடல் வரிகளை எழுதியவர்
- குமரகுருபரர்
- குணங்குடி மஸ்தாசன் சாகிபு
- திருநாவுக்கரசர்
- திரிகூட ராசப்பக் கவிராயர்
13. தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர்
- தேவநேயப்பாவணர்
- மறைமலையடிகள்
- வ.சு.மாணிக்கம்
- சோமசுந்தரபாரதி
14. பொருத்துக
1. Folder | மை பொதி |
2. Stamp pad | இழுவை முத்திரை |
3. Stapler | மடிப்புத்ததாள் |
4. Rubber Stamp | கம்பி தைப்புக் கருவி |
- 3, 4, 1, 2
- 3, 1, 4, 2
- 4, 2, 1, 3
- 4, 2, 3, 1
15. ’தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டவர்
- புலவர் குழந்தை
- சி.வை.தாமோதரனார்
- ஆறுமுக பண்டிதர்
- வ.சு.மாணிக்கம்
16. பொருத்துக
1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் | அரு. ராமநாதன் |
2. மாறுபட்டுச் சிந்திக்கலாமா? | கி.வா. ஜகந்நாதன் |
3. எழு பெருவள்ளல்கள் | சிபி கே. சாலமன் |
4. வீரபாண்டிய கட்டபொம்மன் | மயிலை சீனி. வேங்கடசாமி |
- 4, 3, 1, 2
- 3, 1, 4, 2
- 4, 3, 2, 1
- 3, 1, 2, 4
17. ராஜா வந்திருக்கிறார் என்னும் நூலின் ஆசிரியர்
- கு. அழகிரிசாமி
- கி.ராஜநாராயணன்
- கு.ப.ராஜகோபாலன்
- புதுமைபித்தன்