12th Tamil Test 5 – இலக்கியத்தில் மேலாண்மை | TNPSC Exams 2024

1. ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதற்கு _________ அதிகாரத்தின் வழியே திருவள்ளுவர் கூறியுள்ளார்.

  1. குற்றங்கடிதல்
  2. செங்கோன்மை
  3. கொடுங்கோன்மை
  4. மடியின்மை
Answer & Explanation
Answer:– மடியின்மை

2. துஞ்சல் எதிர்ச்சொல் தருக

  1. சோம்பல்
  2. சுறுசுறுப்பு
  3. புறங்கூறுதல்
  4. வலியுறுத்தல்
Answer & Explanation
Answer:– சுறுசுறுப்பு

3. 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சுவரோவியமான ஆணையிடும் அரசனும் அடக்கத்துடன் கேட்டும் பணியாளரும் ஓவியம் உள்ள இடம்

  1. திருநெல்வேலி
  2. திருச்சி
  3. மகாபல்லிபுரம்
  4. தஞ்சாவூர்
Answer & Explanation
Answer:– திருநெல்வேலி

4. வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தவர்

  1. பரதன்
  2. தசரதன்
  3. ராமன்
  4. வாலி
Answer & Explanation
Answer:– தசரதன்

5. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பன்னாட்டு வணிகம் நிகழும் இடமாக ________ திகழ்ந்தது.

  1. ஆந்திரப்பிரதேசம்
  2. கர்நாடாகம்
  3. கேரளம்
  4. தமிழ்நாடு
Answer & Explanation
Answer:– தமிழ்நாடு

6. கடல் – குறிக்காத சொல்

  1. அளம்
  2. ஈண்டுநீர்
  3. அலயம்
  4. புணர்ப்பு
Answer & Explanation
Answer:– அலயம்

7. உரோமாபுரி சிப்பாய்கள் பாண்டியப் போர்ப்படையில் இடம் பெற்றிருந்தார்கள் எனக் குறிப்பிடும் நூல்

  1. பட்டினப்பாலை
  2. பதிற்றுப்பத்து
  3. சிலப்பதிகாரம்
  4. பரிபாடல்
Answer & Explanation
Answer:– சிலப்பதிகாரம்

8. “நீரின் வந்த நிதிர்பரிப் புரவியும்” என்ற பாடல் வரிகள் மூலம் குதிரைகள் இறக்குமதியை குறிப்பிடும் நூல்

  1. பட்டினப்பாலை
  2. பதிற்றுப்பத்து
  3. சிலப்பதிகாரம்
  4. பரிபாடல்
Answer & Explanation
Answer:– பட்டினப்பாலை

9. காவிரிப் பூம்பட்டிண துறைமுகத்திலிருந்து வெளியே செல்லும் பொருட்களுக்கு ________ சின்னத்தை பொறித்து வெளியே அனுப்பினர்

  1. புலி
  2. இரட்டை மீன்
  3. வில்
  4. யானை
Answer & Explanation
Answer:– புலி

10. சங்க இலக்கியத்தின் வாயிலாக மிகப் பெரிய துறைமுகமாகவும், யவனர்களின் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் இடமாகவும் அறியப்படும் இடம்

  1. கொற்கை
  2. காந்தளூர்
  3. பூம்புகார்
  4. முசிறி
Answer & Explanation
Answer:– முசிறி

11. கூற்றினை ஆராய்க

கூற்று 1: ஸ்ட்ரேபோ என்பவர், அகஸ்டஸ் சீசரைப் பாண்டிய நாட்டுத் தூதுக்குழு ஒன்று கி.மு. 20ஆம் ஆண்டு சந்தித்ததைப் பற்றித் தெரிவிக்கிறார்.

கூற்று 2: தமிழர்களுக்கும் கிரேக்கர்களுக்கும்
ரோமானியர்களுக்குமிடையே இருந்த வணிக உறவு இலக்கியம் மூலமும் தெரிகிறது .

  1. கூற்று 1, 2 தவறு
  2. கூற்று 1 சரி, 2 தவறு
  3. கூற்று 1 தவறு, 2 சரி
  4. கூற்று 1, 2 சரி
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2 சரி

12. கூற்றினை ஆராய்க

கூற்று 1: இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் யவனரை அரண்மனைத் தொழிலாளர்களாக்கிக் கட்டுப்படுத்தினான்.

கூற்று 2: பகை நாட்டுச் செல்வங்களளைக் கொண்டு வந்து தன் நாட்டு மக்களுக்கு வழங்கினான் என்ற செய்திகள் பதிற்றுப்பத்து மூன்றாம் பத்தில் இடம் பெற்றுள்ளன.

  1. கூற்று 1, 2 தவறு
  2. கூற்று 1 சரி, 2 தவறு
  3. கூற்று 1 தவறு, 2 சரி
  4. கூற்று 1, 2 சரி
Answer & Explanation
Answer:– கூற்று 1 சரி, 2 தவறு

13. “கல்லாரே யாயினும் கற்றாரைச் சேந்ந்ததொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின்” பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. அறவுரைக்கோவை
  2. நீதிச்சாரம்
  3. திருவாரூர் நான்மணிமாலை
  4. நாலடியார்
Answer & Explanation
Answer:– நாலடியார்

14. 126 ஒற்றை வரிகளில் எழுதிய துளிகள் என்னும் நூலின் மூலம் உலகப்புகழ் பெற்றவர்

  1. ஹிராக்ளிடஸ்
  2. ஷேக்ஸ்பியர்
  3. எர்னஸ் ஹெமிங்வே
  4. கால்டுவெல்
Answer & Explanation
Answer:– ஹிராக்ளிடஸ்

15. வெ.இறையன்பு எழுதிய நூல்களில் பொருந்தாதது

  1. வாய்க்கால் மீன்கள்
  2. ஐ.ஏ.எஸ் வெற்றி படிக்கட்டுகள்
  3. ஏழாவது அறிவு
  4. உள்ளொலிப் பயணம்
Answer & Explanation
Answer:– உள்ளொலிப் பயணம்

16. பொருத்துக

1. அதிசய மலர்வெ.இறையன்பு
2. மூளைக்குள் சுற்றுலாதமிழ்நதி
3. தேயிலைத் தோட்டப் பாட்டு ஐராவதம் மகாதேவன்
4. சங்க காலக் கல்வெட்டுகளும் என் நினைவுகளும்முகம்மது இராவுத்தர்
  1. 2, 1, 4, 3
  2. 1, 2, 3, 4
  3. 4, 3, 2, 1
  4. 4, 3, 1, 2
Answer & Explanation
Answer:– 2, 1, 4, 3

Leave a Comment