12th Tamil Test 6 – அதிசய மலர், தேயிலைத் தோட்டப் பாட்டு, புறநானூறு | TNPSC Exams 2024

1. அதிசய மலர் என்னும் கவிதையை எழுதியவர்.

  1. கலைவாணி
  2. இராதாகிருஷ்ணன்
  3. ராமகிருஷ்ணன்
  4. கலாப்பிரியா
Answer & Explanation
Answer:– கலைவாணி

2. தமிழ்நதியின் படைகளில் பொருந்தாதது

  1. நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
  2. சூரியன் தனித்தலையும் பகல் (நாவல்)
  3. இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
  4. கானல் வரி (குறுநாவல்)
Answer & Explanation
Answer:– சூரியன் தனித்தலையும் பகல் (நாவல்)

3. புலம் பெயர்ந்து வாழும் இருப்புகளையும் வலிகளையும் சொல்லும் காத்திரமான மொழியை உடையர்

  1. வெ.இறையன்பு
  2. முகம்மது இராவுத்தர்
  3. தமிழ்நதி
  4. அ. முத்தரையன்
Answer & Explanation
Answer:– தமிழ்நதி

4. தேயிலைத் தோட்டப் பாட்டு என்னும் நூலினை எழுதியவர்

  1. வெ.இறையன்பு
  2. வைரமுத்து
  3. முகம்மது இராவுத்தர்
  4. தமிழ்நதி
Answer & Explanation
Answer:– முகம்மது இராவுத்தர்

5. *காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே;
மாநிறைவு இல்லதும், பல்நாட்கு ஆகும்; பாடல் வரிகளை எழுதியவர்

  1. ஓளவையார்
  2. கனியன் பூங்குன்றனார்
  3. தேவகுலத்தார்
  4. பிசிராந்தையர்
Answer & Explanation
Answer:– பிசிராந்தையர்

6. தப என்ற சொல்லின் பொருள்

  1. கெட
  2. சுட
  3. பட
  4. சட
Answer & Explanation
Answer:– கெட

7. பொருந்தாதவற்றை தேர்க

  1. காய்நெல் – வினைத்தொகை
  2. புக்க – பெயரெச்சம்
  3. அறியா – ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  4. செந்நெல் – உம்மைத்தொகை
Answer & Explanation
Answer:– செந்நெல் – உம்மைத்தொகை

8. கூற்றினை ஆராய்க

கூற்று 1: புறநானூறு புறம், புறப்பாட்டு எனவும் அழைக்கப்பெறுகிறது;
கூற்று 2: பண்டைத் தமிழகத்தின் அரசியல், சமூக வரலாற்றை விளக்கும் அரிய கருத்துக் கருவூலமாகத் திகழ்கிறது.

  1. கூற்று 1, 2 தவறு
  2. கூற்று 1, 2 சரி
  3. கூற்று 1 தவறு, 2 சரி
  4. கூற்று 1 சரி, 2 தவறு
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2 சரி

9. புறநானூற்றினை உ.வே.சா. அச்சில் பதிப்பித்த ஆண்டு

  1. 1894
  2. 1895
  3. 1898
  4. 1903
Answer & Explanation
Answer:– 1894

10. கூற்றினை ஆராய்க (ஜார்ஜ் எல்.ஹார்ட்)

கூற்று 1: கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்
கூற்று 2: புறநானூறினை The Four Hundred Songs of War and Wisdom : An Anthology of Poems from Classical Tamil, the Purananuru என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
கூற்று 3: ஜார்ஜ் எல்.ஹார்ட் 1998ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

  1. அனைத்தும் தவறு
  2. கூற்று 1, 3 சரி, 2 தவறு
  3. அனைத்தும் சரி
  4. கூற்று 1, 2 சரி 3 தவறு
Answer & Explanation
Answer:– கூற்று 1, 2 சரி 3 தவறு

11. பிசிர் என்பது _________ நாட்டில் இருந்த ஊர்

  1. சேர
  2. பாண்டிய
  3. சோழ
  4. பல்லவ
Answer & Explanation
Answer:– பாண்டிய

12. பிசிராந்தையரின் இயற்பெயர்

  1. ஆந்தையர்
  2. பிசிர்
  3. கூலன்
  4. திருமூலன்
Answer & Explanation
Answer:– ஆந்தையர்

13. பாண்டிய நாட்டு மன்னன் அறிவுடை நம்பிக்கு அறிவுரை சொல்லக் கூடிய உயர்நிலையில் இருந்தவர்

  1. ஓளவையார்
  2. காவற்பெண்டு
  3. கபிலர்
  4. பிசிராந்தையர்
Answer & Explanation
Answer:– பிசிராந்தையர்

14. பொருத்துக

1. செறுதழைக்கும்
2. பிண்டம்வயல்
3. நச்சின்வரி
4. நந்தும்தழைக்கும்
  1. 4, 1, 2, 3
  2. 1, 4, 2, 3
  3. 1, 2, 3, 4
  4. 1, 2, 4, 3
Answer & Explanation
Answer:– 4, 1, 2, 3

15. கல் – பொருள் தருக

  1. ஒலிக்குறிப்பு
  2. அன்பு
  3. சேர்த்து
  4. புகுந்து
Answer & Explanation
Answer:– ஒலிக்குறிப்பு

16. நூறுசெறு ஆயினும், தமித்துப்புக்கு உணினே,
வாய்புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும் – பாடல் வரிகள் இடம் பெற்றுள்ள நூல்

  1. அகநானூறு
  2. புறநானூறு
  3. பத்துபாட்டு1
  4. ஐங்குறுநாறு
Answer & Explanation
Answer:– புறநானூறு

Leave a Comment