1. Myth – கலைச்சொல் தருக
- குறியீடு
- தொன்மம்
- இறைச்சி
- தன்மை
2. சரியான மரபுத்தொடரினை கூறுக
1. கிழித்த கோட்டைத் தாண்ட மாட்டான்
2. இந்தா போறான் சகுனி
3. இவன் பெரிய அரிச்சந்திரன்
4. கர்ணன் தோற்றான் போ
- 1, 2 மட்டும் சரி
- 2, 3 மட்டும் சரி
- 1, 4 மட்டும் சரி
- அனைத்தும் சரி
3. பொருந்தாதவற்றை தேர்ந்தெடு
- அறம் – தருமன்
- வலிமை – பீமன்
- நீதி – கண்ணன்
- வள்ளல் – கர்ணன்
4. கூற்றை ஆராய்க
கூற்று 1: சில தொன்மங்கள், சமய நம்பிக்கைகளையும் சடங்குகளையும் வெளிச்சப்படுத்துகின்றன.
கூற்று 2: சில தொன்மங்கள் உவமைக் கதைகளாகவும் மெய்யியல் உருவகங்களாகவும் நின்று சமுதாயத்திற்கு வழிகாட்டுகின்றன.
கூற்று 3: தொன்மங்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்யவோ புரிந்து கொள்ளவோ முடியாது.
- கூற்று 1, 2 சரி 3 தவறு
- கூற்று 2, 3 சரி 1 தவறு
- கூற்று 1, 3 சரி 2 தவறு
- கூற்று 1, 2, 3 சரி
5. சமுதாயத்தின் ஆழ்மனத்திலிருந்து வெளிப்படுவனவாகவும் அவற்றினால் ஏற்படும்
கூட்டமைப்பின் குறியீடுகளாகவும் விளங்குகின்றன என்று புலப்படுத்தும் அகராதி
- வெப்ஸ்டார்ஸ் ப்ர்ஸ்ட் நியூ இன்டர்நேஷனல்
- வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இந்தியா
- வெப்ஸ்டார்ஸ் ப்ர்ஸ்ட் நியூ இந்தியா
- வெப்ஸ்டார்ஸ் தேர்டு நியூ இன்டர்நேஷனல்
6. தொன்மத்தை வெளிப்படுத்தும் முதன்மை கருவி
- நாடகம்
- கவிதை
- இயல்
- இசை
7. இராமாயணத்தின் அகலிகை கதையை வைத்து சாபவிமோசனம், அகலிகை ஆகிய கதைகளை எழுதியவர்
- நக்கீரர்
- ஜெயமோகன்
- புதுமைப்பித்தன்
- எஸ்.ராமகிருஷ்ணன்
8. பொருத்துக
1. வெந்தழலால் வேகாது | கே. பாலச்சந்தர் |
2. பத்மவியூகம் | எஸ்.ராமகிருஷ்ணன் |
3. அரவான் | ஜெயமோகன் |
4. நீர்குமிழி | நக்கீரர் |
- 4, 3, 2, 1
- 4, 3, 1, 2
- 1, 2, 3, 4
- 1, 2, 4, 3
9. தொன்மை தானே சொல்லுங் காலை
உரையொடு புணர்ந்த பழமை மேற்றே – பாடல் வரிகளை எழுதியவர்
- தொல்காப்பியம்
- நன்னூல்
- பதிற்றுப்பத்து
- பத்துப்பாட்டு
10. தொன்மையாவது உரையொடு பொருந்திப் போந்த பழமைத்தாகிய பொருள் மேல் வருவன. அவை இராமசரிதமும் பாண்டவசரிதமும் முதலாகியவற்றின் மேல்வருஞ் செய்யுள் – இக்கூற்றினை கூறியவர்
- அன்பழகன்
- இளம்பூரணார்
- எஸ்.இராமகிருஷ்ணன்
- ஜெயமோகன்
11. பொருந்ததாதை தேர்க
கூற்று 1: வெல்வேல் கவுரியர் தொன்முதுகோடி
முழங்கிரும் பெளவம் இரங்கும் முன்றுறை – நற்றிணை
கூற்று 2: முருகு உறழ் முன்பொடு
கடுஞ்சினம் செருக்கிப் பொருத யானை – அகநானூறு
- கூற்று 1 சரி, 2 தவறு
- இரண்டும் தவறு
- கூற்று 1 தவறு , 2 சரி
- இரண்டும் சரி
12. பொருத்துக
1. இந்திரன் | வன்கன் |
2. வருணன் | மார்ஸ் |
3. பலராமன் | டயானிசிஸ் |
4. கார்த்திகேயன் | ஊரனாஸ் |
5. விஸ்வகர்மன் | சீயஸ்பிடர் |
- 5, 4, 3, 2, 1
- 5, 4, 3, 1, 2
- 1, 2, 3, 4, 5
- 1, 2, 4, 3, 5
13. பொருந்தாதவற்றை தேர்க
- துர்க்ககை – ஜீனோ
- சரஸ்வதி – மினர்வா
- சூரியன் – சோல்
- சந்திரன் – லூனஸ்
- காமன் – அராஸ்
14. மா. இராசமாணிக்கனார் எழுதியுள்ள நூல்களில் பொருந்தாதது
- சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு
- பெரியபுராண ஆராய்ச்சி, தமிழ்நாட்டு வட எல்லை
- பத்துப்பாட்டு ஆராய்ச்சி, புதிய தமிழகம்
- சேரர் வரலாறு, பாண்டியர் வரலாறு
15. பூமிச்சருகாம் பாலையை
முத்துபூத்த கடல்களாக்குவேன் – பாடல் வரிகளின் ஆசிரியர்
- நா. காமராசன்
- சிற்பி
- முத்தரையன்
- அப்துல் ரகுமான்
16. பொருந்தியவற்றை தேர்க
- வெள்ளை இருட்டு – உமா சந்திரன்
- முள்ளும் மலரும் – இன்குலாப்
- முச்சந்தி இலக்கியம் – செந்தீ நடராசன்
- நீர்க்குமிழி – கே. பாலசந்தர்
17. கூற்றினை ஆராய்க (மா. இராசமாணிக்கனார்)
1. சங்க காலம் தொடங்கிப் பிற்காலம் வரையில் ஆண்ட சோழர் வரலாற்றை முழுமையாக ஆராய்ந்தவர்;
2. சிந்துவெளி நாகரிகம் பற்றித் தமிழில் முதன்முதலில் ‘மொஹெஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூலை இயற்றியவர்.
3. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தினர்களான வே. உமாமகேசுவரன், ந.மு.வேங்கடசாமி, ஆகியோராலும் உ.வே. சாமிநாதர் போன்ற தமிழறிஞர்களாலும் நெறிப்படுத்தப்பட்டவர்.
- கூற்று 1, 2 சரி 3 தவறு
- கூற்று 1, 2, 3 தவறு
- கூற்று 1, 2, 3 சரி
- கூற்று 2, 3 சரி 1 தவறு