1. அசையும் உருவங்களை படம் பிடிக்கும் கருவியை கண்டுபிடித்தவர்.
- தாமஸ் ஆல்வா எடிசன்
- லூமியர் சகோதர்கள்
- ஜார்ஜ் மிலி
- மார்கோனி
2. கூற்றை ஆராய்க
1. படப்பிடிப்புக் கருவியோடு திரையிடும் கருவியையும் (Projector) சேர்த்துத் திரைப்படம் என்னும் விந்தையை இவ்வுலகுக்கு அளித்தவர் – ஜார்ஜ் மிலி
2. திரைப்படத்தில் கதை சொல்வதை கண்டுபிடித்தவர் – லூமியர் சகோதர்கள்
- கூற்று 1 சரி, 2 தவறு
- கூற்று 1, 2 சரி
- கூற்று 1 தவறு, 2 சரி
- கூற்று 1, 2 தவறு
3. _______ என்பது கதை நகர்வுக்கு உதவுவது
- ஒலி
- ஒளி
- காட்சி
- கருத்து
4. கூற்றை ஆராய்க
கூற்று 1: காட்சிகள் மாறுவதை உணர்த்த ஒரு காட்சியைச் சிறிது சிறிதாக மங்கலாகக் காட்டி இருள் ஆக்கிக் காட்டுவர். இதைக் காட்சி மறைவு (Fade out) என்பார்கள்.
கூற்று 2:. அடுத்த காட்சி தொடங்கும்போது இருட்டாக இருந்த பகுதி சிறிது சிறிதாக வெளிச்சமாக மாறி முழுக்காட்சியும் வெளிப்படும். இதனைக் காட்சி உதயம் (Fade in) என்பார்கள்.
- கூற்று 1, 2 சரி
- கூற்று 2 சரி 1 தவறு
- கூற்று 1 சரி 2 தவறு
- கூற்று 1, 2 தவறு
5. Wipe – கலைச்சொல் தருக
- கலவை
- கூட்டு
- தோன்றல்
- அழிப்பு
6. திரைப்படத்தை _____________ என வகைப்படுத்துகிறோம்.
- இருபரிமாணக் கலை
- முப்பரிமாணக் கலை
- பலபரிமாணக் கலை
- ஒற்றைக் கோணக்கலை
7. பொருத்துக
1. Extreme Long Shot | நடுக் காட்சித் துணிப்பு |
2. Long Shot | மீ அண்மைக் காட்சித் துணிப்பு |
3. Close Up Shot | அண்மைக் காட்சித் துணிப்பு |
4. Extreme Close Up Shot | சேய்மைக் காட்சித் துணிப்பு |
5. Mid Shot | மீ சேய்மைக் காட்சித் துணிப்பு |
- 5, 4, 2, 3, 1
- 2, 1, 5, 4, 3
- 2, 1, 4, 3, 5
- 5, 4, 3, 2, 1
8. மாடர்ன் டைம்ஸ் திரைப்படம் வெளியான ஆண்டு
- 1937
- 1927
- 1936
- 1926
9. காட்சிகளை மாற்றி மாற்றி வைப்பதன் மூலம் வெவ்வேறு காட்சிகளை உருவாக்கிக் காட்டுவதைக் ________ என்பார்கள்.
- குலஷோவ் விளைவு
- குஸ்டோவ் விளைவு
- குஸ்ரோவ் விளைவு
- குல்டோவ் விளைவு
10. கர்நாடகா மாநிலத்தில் ________ என்னும் சிற்றூர் மக்ள திரைப்படம் பார்ததே இல்லை
- கக்காடு
- ஹெக்காடு
- சாக்காடு
- மீக்காடு
11. சார்லி சாப்ளின் தி கிரேட் டிக்டேட்டர் என்னும் திரைப்படத்தை எடுத்த ஆண்டு
- 1940
- 1939
- 1938
- 1937
12. _________ மூலம்தான் முதன் முதலாகத் தென்னிந்திய சினிமாத் தொழில் தோன்றியது.
- படங்காட்டுதல்
- படம் பிடித்தல்
- படம் ஓட்டுதல்
- a மற்றும் b
13. சார்லி சாப்ளின் வறுமைமிக்க தன் இளமை வாழ்வை _______ படம் மூலம் வெற்றி படமாக்கினார்
- தி கிட்
- லிட்டில் டிராம்ப்
- சிட்டி லைட்ஸ்
- தி கோல்டு ரஷ்
14. சார்லி சாப்ளின் தொடங்கிய பட நிறுவனம்
- தி கிட்
- லிட்டில் டிராம்ப்
- யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
- தி கோல்டு ரஷ்
15. ‘மனித குலத்திற்குத் தேவை போரல்ல; நல்லுணர்வும் அன்பும்தான்’ என்பதைப் ___________ படம் வாயிலாக சார்லி சாப்ளின் உணர்ந்தினார்.
- தி கிட்
- லிட்டில் டிராம்ப்
- யுனைடெட் ஆர்டிஸ்ட்ஸ்
- தி கிரேட் டிக்டேட்டர்
16. நாடகத்தை _____________ என்று கூறுவர்.
- இருபரிமாணக் கலை
- முப்பரிமாணக் கலை
- பலபரிமாணக் கலை
- ஒற்றைக் கோணக்கலை