Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 9th April 2025

Daily Current Affairs 

Here we have updated 9th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மாநில பல்கலைக்கழக வேந்தர்

  • மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதல்வர் செயல்படுவார்.
  • சமீபத்தில் உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகார விதியான 142-ன் கீழ் மாநில பல்கலைக்கழகங்களில் வேந்தராக மாநில முதல்வர்கள் செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளது.
  • விதி 200 – மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் பிரிவு
    • ஆளுநர் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கலாம், அல்லது வழங்காமல் குடியரசுத் தலைவருக்குஅனுப்பலாம்
  • விதி 201 – பரிசிலனைக்காக சட்டமுன் வடிவை ஒதுக்கி வைத்தல்
    • ஆளுநரால் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட ஒரு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம்.
  • விதி 142 – மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல்
    • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு, உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது.
    • இவ்விதியை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கலாம்

புலம் பெயர் தொழிலாளர்

  • Vetri Study Center Current Affairs - Migrant worker
  • புலம் பெயர் தொழிலாளர் சாராசரியாக அதிகபட்சமாக ரூ.18,696 வருமானம் ஈட்டுகின்றன.
  • சேவைத் துறையில் ரூ.14,543 வருமானம் ஈட்டுகின்றன.
  • இந்த அறிக்கையை தமிழ்நாடு மாநில திட்டக்குழு தெரிவித்துள்ளது.

இலக்கு நிர்ணயம்

  • தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை 2032-33 ஆண்டுக்குள் அடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 1 டிரில்லியன் இலக்கு 2030 ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்து ஆனால் தற்போது உள்ள பொருளாதார வளர்ச்சி விகிதத்தின்படி 2032-33 ஆண்டில் தான் எட்ட முடியும்.

வக்ஃப் வாரியம்

  • கேரள மாநிலத்தின் வக்ஃப் வாரியத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய வக்ஃப் வாரியத்தை அமைக்க உள்ளது.
  • இந்த வக்ஃப் வாரியம் அண்மையில் திருத்தப்பட்ட வக்ஃப் வாரிய சட்டத்தின்படி அமைக்க உள்ளது.

துடிப்பான அணுசக்தி நீர்மூழ்கி

  • அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான கடற்படை தளமானது ஆந்திரபிரதேசத்தின் ராம்பில்லியில் அமைய உள்ளது.
  • இத்தளமானது 2026-க்குள் அமைக்கபட உள்ளது.

புவிசார் குறியீடு

சமீபத்தில் சில பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

  • ராதுனிபகல் அரிசி – மேற்கு வங்கம்
  • கொய்யா – பருக்கூர்
  • லட்டு – பிஸ்னுபூர்
  • வெள்ளை போண்டா – காமர்புகூர்

தொடர்புடைய செயதிகள்

  • புவிசார்குறியீட்டில் முதலிடம் – உத்திரப்பிரதேசம் (79 பொருட்கள்)
  • இரண்டாமிடம் – தமிழ்நாடு (69 பொருட்கள்)

திரெளபதி முர்மு

  • சிட் கீ ஆப் ஹானர் என்னும் உயரிய விருதானது குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு-விற்கு வழங்கப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு

  • காவல்துறையில் அக்னி வீரர்களுக்கு 20% இடஒதுக்கீட்டினை ஹரியானா மாநிலம் அறிவித்துள்ளது.

அருண் பள்ளி

  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அருண் பள்ளி (Arun Palli) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விராட் கோலி

Vetri Study Center Current Affairs - Virat Kohli

  • டி20 கிரிக்கெட் 13,000 ரன் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.

Related Links

Leave a Comment