Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th to 17th March 2025

Daily Current Affairs

Here we have updated 16th to 17th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழ்நாடு பட்ஜெட்

  • சுதந்திரத்திற்குப் பிறகு 1948ஆம் ஆண்டு மாநிலத்தில் முதல் பட்ஜெட்டை பி.கோபால ரெட்டி தாக்கல் செய்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் வி.நெடுஞ்செழியன் (14 முறை) ஆவார்.

அருங்காட்சியகம்

Vetri Study Center Current Affairs - Noyal Museum

நொய்யல் அருங்காட்சியகமானது ஈரோட்டில் அமைய உள்ளது.

  • இந்த அருங்காட்சியகத்தில் கொடுமணலில் கிடைத்த அகழாய்வுகளை வைக்க உள்ளன.

நாவாய் அருங்காட்சியகமானது ராமநாதபுரத்தில் அமைய உள்ளது.

  • இந்த அருங்காட்சியகத்தில் பண்டைய பாண்டியர்களின் வணிகம் சார்ந்த பொருள்களை வைக்க உள்ளன.

பூநாரை சரணாலயம்

  • பூநாரை சரணாலயமானது இராமநாதபுர மாவட்டத்தின் தனுஷ்கோடியில் அமைய உள்ளது.

செமிகண்டக்டர் பூங்கா

  • சூலூர் மற்றும் பல்லடத்தில் செமிகண்டக்டர் பூங்காவானது அமைய உள்ளது.

அன்புச்சோலை மையங்கள்

  • மூத்த குடிமக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு தமிழக அரசு 25 அன்புச்சோலை மையங்களை நிறுவ உள்ளது.

வேளாண் பட்ஜெட்

  • தமிழக வேளாண் பட்ஜெட் 2021லிருந்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • 2019-20-ல் மொத்த சாகுபடிப் பரப்பு 146.77 லட்சம் ஏக்கர் என்ற நிலையிலிருந்து 2023-24-ல் 151 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
  • 2019-20-ல் இருபோக சாகுபடிப் பரப்பு 29.74 லட்சம் ஏக்கர் என்ற நிலையிலிருந்து 2023-24-ல் 33.60 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

உற்பத்தி பட்டியல்

  • முதலிடம் – கேழ்வரகு உற்பத்தி
  • இரண்டாவது இடம் – மக்காச்சோளம், எண்ணெய் வித்துக்கள், கருப்பு உற்பத்தி
  • மூன்றாவது இடம் – நிலக்கடலை, குறுதானியங்கள்

தொடர்புடைய செய்திகள்

உற்பத்திதிறன் பட்டியல்

  • முதலிடம் – எண்ணெய் வித்துக்கள், நிலக்கடலை, கரும்பு
  • இரண்டாவது இடம் – மக்காச்சோளம்
  • மூன்றாவது இடம் -நெல்

பம்புசெட் மானியம்

  • 1,000 விவசாயிகளின் நலனுக்காக சூரிய சக்தியில் இயங்கும் பம்புசெட்டுகள் வழங்கப்பட உள்ளதாக தமிழக வேளாண் பட்ஜெட்டில் (தமிழ்நாடு விவசாய பட்ஜெட்) அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதற்காக சிறு, குறு மற்றும் SC/ST விவசாயிகளுக்கு 70% மானியமும், மற்றவர்களுக்கு 60% மானியமும் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

GI குறியீடு

கீழ்காணும் பொருட்களுக்கு GI குறியீடு வாங்க உள்ளதாக வேளாண் பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • வரகு – நல்லூர் (கடலூர்)
  • முல்லை – வேதாரண்யம் (நாகப்பட்டினம்)
  • புளி – நத்தம் (திண்டுக்கல்)
  • கொய்யா – ஆய்க்குடி (திண்டுக்கல்)
  • கரும்பு முருங்கை – கப்பல்பட்டி (திண்டுக்கல்)

முந்திரி

  • முந்திரி உற்பத்தியில் தமிழ்நாடு 4வது இடத்தில் உள்ளது.
  • முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.
  • மேலும் ரூ.10 கோடி செலவில் தமிழ்நாடு முந்திரி வாரியம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • அரியலூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தேனி ஆகிய இடங்களில் முந்திரி உற்பத்தி செய்யப்படகிறது.

விலாங்கு மீன்

Vetri Study Center Current Affairs - Ariosoma Tamilicum

  • தூத்துக்குடியில் தமிழிகம் என்னும் புதிய வகை விலாங்கு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இதன் அறிவியில் பெயர்: Ariosoma Tamilicum

கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • தமிழ்நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 26.07% உள்ளது.
  • ஒரு மாநிலம் அந்த மாநிலத்தின் GDP-லிருந்து 28% கடன் வாங்கலாமென 15வது நிதி ஆணையம் தெரிவித்துள்ளது.

Crew 10

Vetri Study Center Current Affairs - Sunita Williams

  • விண்வெளியிலுள்ள சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர Crew 10 என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • விண்வெளிக்கு சென்ற முதல் பெண் விண்வெளி வீராங்கனை – கல்பனா சால்வா (1997)
    விண்வெளிக்கு சென்ற முதல் விண்வெளி வீரர் – ராகேஷ் சர்மா (1984)

மகளிர் பிரீமியர் லீக் 2025

  • மகளிர் பிரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய தினம்

தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) – மார்ச் 16

Related Links

Leave a Comment