Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st August 2025

Daily Current Affairs 

Here we have updated 1st August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நூற்றாண்டு விழா

Vetri Study Center Current Affairs - m.s. swaminathan

  • பசுமை புரட்சியின் தந்தையென அழைக்கப்படும் M.S. சுவாமிநாதனின் நூற்றாண்டு விழா டெல்லியில் ஆகஸ்ட் 7-ல் நடைபெற உள்ளது.
  • கருப்பொருள்: ஆண்டு முழுவதும் பசுமை புரட்சி உயிரி அடிப்படையிலான மகிழ்ச்சிக்கான பாதை

கணக்கெடுப்பு

  • ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு வந்த வீட்டு நுகர்வு செலவின் (HFCE)  கணக்கெடுப்பு காலம் குறைக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இக்கணக்கெடுப்பு காலமானது 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட உள்ளது.
  • HFCE – Household Final Consumption Expenditure

மொத்த உள்நாட்டு உற்பத்தி

  • மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான (GDP) புதிய அடிப்படை ஆண்டு 2022-23ஆக திருத்தப்பட்டுள்ளது.
  • இதற்கு முன் இதற்கான அடிப்படை ஆண்டு 2011-12 ஆக இருந்துள்ளது.
  • 27 பிப்ரவரி 2026-ல் திருத்தப்பட்ட அடிப்படை ஆண்டின் அடிப்படையில் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தியானது வெளியிடப்பட உள்ளது.

CMS-02 செயற்கைக்கோள்

  • LMV03 M5 ராக்கெட் மூலம் CMS-02 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • NISAR செயற்கைக்கோள் GSLVI F 16 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
  • இது நாட்டின் 102வது ராக்கெட் ஆகும்.
  • 29 ஜனவரி 2025-ல் நாட்டின் 100வது ராக்கெட்டான GSLVI F 15 விண்ணில் செலுத்தப்பட்டிருந்தது.

பாரத் மாலா திட்டம்

Vetri Study Center Current Affairs - Bharatmala Project

  • பாரத் மாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 45 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 1,478 கி.மீ சாலைகள் போடப்பட உள்ளன.
  • சாலை உட்கட்டமைப்பை மேற்கொள்ள சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தால் 31.07.2015-ல் தொடங்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • சாகர்மாலா திட்டம் – 31.07.2015
  • நாட்டில் துறைமுகங்கள் சார்ந்த வளர்ச்சியை ஊக்குவிக்க துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது.

புள்ளிவிவர அமைச்சகம்

  • புதிய தேசிய வீட்டு பயண கணக்கெடுப்பு, புதிய உள்நாட்டு சுற்றுலா செலவின கணக்கெடுப்பு ஆகிய இரண்டினையும் புள்ளிவிவர  அமைச்சக வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

புலிகள் இறப்புகள்

Vetri Study Center Current Affairs - Tiger Reserve

  • இந்தியாவிலே மகராஷ்டிராவில் மாநிலத்தில் தான் அதிக புலிகள் இறப்புகள் நிகழ்ந்துள்ளது.
  • புலிகள் இறப்பில் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் முறையே முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • உலகிலுள்ள புலிகளில் 75% இந்தியாவில் தான் வாழ்கின்றன.
  • புலிகள் தினம் – ஜூலை 29

புலிகள் எண்ணிக்கை அதிகம் உள்ள மாநிலங்கள்

  • 1வது இடம் – மத்தியப்பிரதேசம்
  • 2வது இடம் – கர்நாடகம்
  • 3வது இடம் – உத்திரகாண்ட்
  • 4வது இடம் – மகாராஷ்டிரா
  • 5வது இடம் – தமிழ்நாடு

பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்

  • டைம் பத்திரிக்கையின் கணக்கெடுப்பின்படி உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்தியா 2வது இடத்தை பிடித்துள்ளது.

Youtube தடை

  • Youtube, Facebook போன்ற இணைய தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த ஆஸ்திரேலியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரி விதிப்பு

  • இந்தியாவிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25%வரி விதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

  • அண்மையில் ரஷ்யாவில் 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக நுரையீரல் புற்றுநோய் தினம் (World Lung Cancer Day) – ஆகஸ்ட் 1
  • உலகளாவிய வலை தினம் (World Wide Web Day) – ஆகஸ்ட் 1
  • உலக தாய்ப்பால் வாரம் (World Breastfeeding Week) – ஆகஸ்ட் 1-7

Related Links

3 thoughts on “Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st August 2025”

  1. Thank you so much….sir please update daily, It was very useful……last 3 months lot of struggle to learn current affairs…

    Reply

Leave a Comment