1. தென் ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை என்னும் கட்டுரை எழுதியவர்
- திரு.வி.க
- பாரதிதாசன்
- காந்தியடிகள்
- பாரதியார்
2. ஆரட்டோரியா இசை வடிவில் இளையராஜா வெளியிட்ட பாடல்கள்
- திருவெம்பாலை
- திருவாசகம்
- திருப்பாவை
- திருவருட்பா
3.ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படத்திற்காக இசை அமைத்தற்கு ஏ.ஆர்.இரஹ்மான் கோல்டன் குளோப் விருதினை பெற்ற ஆண்டு
- 2007
- 2008
- 2009
- 2006
4. திலிப்குமார் என்ற இயற்பெயரினை உடையவர்
- ஏ.ஆர்.ரகுமான்
- இளையராஜா
- வாலி
- கண்ணதாசன்
5. இளையராஜா இசை அமைப்பாளராக அறிமுகமாகிய திரைப்படம்
- அழகி
- ஜென்டில் மேல்
- ரோஜா
- அன்னக்கிளி
6. Subsidy தமிழாக்கம் தருக
- கையூட்டு
- சன்மானம்
- நல்கை
- வருமானம்
7. தாய்மொழி வழியில் _________ அறிவியல் தொழில்நுட்பப் பாடங்களைக் கற்பதால் அங்கே நாள்தோறும் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன.
- இந்தியர்கள்
- சீனர்கள்
- எகிப்தியர்கள்
- ஜப்பானியர்கள்
8. Antibiotics என்பதன் கலைச் சொற்களில் பொருந்தாதது
- எதிர் உயிர்ப்பொருள்
- நுண்ணுயிர்க் கொல்லிகள்
- உயிர் எதிர் நச்சுகள்
- நல்லுயிர்க் கொல்லிகள்
9. கூற்றை ஆராய்க
1. நோதிறம், பாலையாழ், காந்தாரம் முதலிய பண்கள் காணப்படும் நூல் – பரிபாடல்
2. சைவத் திருமுறைகளில் காரைகக்கால் அம்மையார் நட்டபாடையிலும் இந்தளத்திலும் பாடியுள்ளார்.
- 1 மட்டும் தவறு
- 2 மட்டும் தவறு
- இரண்டும் சரி
- இரண்டும் தவறு
10. மரணத்தின் பின் மனிதர் நிலை நூலின் ஆசிரியர்
- நீலாம்பிகை அம்மையார்
- பரிதிமாற்கலைஞர்
- மறைமலையடிகள்
- பிச்சமூர்த்தி
11. செவ்வாழை என்னும் சிறுகதை எழுதியவர்
- அறிஞர் அண்ணா
- கலைஞர் கருணாநிதி
- காமராசன்
- சுந்தரனார்
12. கூற்றை ஆராய்க
1. தேவாரத்தில் 23 பண்களில் பாடல்கள் உள்ளன.
2. தேவாரத்தில் இல்லாது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் மட்டும் காணப்படும் பண்கள்: நைவளம், அந்தாளி, தோடி, கல்வாணம், பியந்தை, குறண்டி, முதிர்ந்த இந்தளம் ஆகியவை.
3. சாளரபாணி என்ற பண் எட்டாம் திருமுறையான திருவிசைப்பாவில் காணப்படுகிறது.
- அனைத்தும் தவறு
- 3, 4 சரி
- 1, 2 சரி
- அனைத்தும் சரி
13. நம்ரதா கே சாகர் என்னும் பாடலினை எழுதியவர்
- ஜவகர்லால் நேரு
- மகாத்மா காந்தி
- வல்லபாய் படேல்
- இராஜாஜி
14. சமரச சன்மார்க்க சபை என்னும் நாடகக்குழுவை உருவாக்கினார்.
- சங்கரதாஸ் சுவாமிகள்
- பம்மல் சம்பந்தனார்
- பரிதிமாற்கலைஞர்
- ஆபிராகம் பண்டிதர்
15. சங்கரதாஸ் சுவாமிகள் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை என்னும் நாடக அமைப்பை உருவாக்கிய ஆண்டு
- 1916
- 1915
- 1917
- 1918
16. தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம்
கொண்டல்கள் முழவின் ஏங்க என்ற பாடலின் ஆசிரியர்
- கபிலர்
- கம்பர்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
17. பொருந்தாததை தேர்க
- நுண்கலை – Fine Arts
- தானியக் கிடங்கு – Grain Warehouse
- ஆவணப்படம் – Documentary
- பேரழிவு – Strom
18. சிவானந்த நடனம் நூலின் ஆசிரியர்
- ஆனந்த குமாரசுவாமி
- பாலசுப்பிரமணியன்
- மதுசூதனன்
- பசுவய்யா
19. சமணர் படுகை அமைந்துள்ள இடம்
- தருமபுரி
- சேலம்
- திருத்தணிகை
- மதுரை
20. பிங்கல நிகண்டு என்னும் நூலில் ______ பண்கள் காணப்படுகின்றன.
- 101
- 103
- 102
- 104