Daily Current Affairs
Here we have updated 12th to 14th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
திருமலாபுரம்
தங்க மோதிரங்கள்
- தென்காசி மாவட்டம் திருமலாபுரத்தில் நடைபெற்ற அகழாய்வில் 4.8மீ விட்டமுடைய மூன்று தங்க மோதிரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மண்பாண்டங்கள்
- மேலும் கருப்பு, சிவப்பு வண்ணங்களில் மண்பாண்டங்கள் கிடைத்துள்ளது.
- இப்பாண்டங்களில் ஆதிச்சநல்லூரில் உள்ளதைப்போல் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இந்த கழுதைப்புலி, நரி, மனிதன், மலைமுகடு, ஆமை முதலியவை வரையப்பட்டுள்ளன
மேலும் அம்புமுனைகள், கத்திகள், கோடரிகள், உளிகள் போன்ற கருவிகளும் இரும்பிலான ஈட்டி, வாள், பாதாள கரண்டிகளும் கிடைத்துள்ளன.
ஆதிச்சநல்லூர், சிவகளை சம காலத்தை சார்ந்ததாகவும் கருதப்படுகிறது. இரும்பு காலத்தை சார்ந்ததாகவும் கருதப்படுகிறது.
விருதுகள்

- பாரதியார் விருது – எழுத்தாளர் த.முருகேசன்
- எம்.எஸ். சுப்புலட்சுமி விருது – கே.ஜே.யேசுதாஸ் (பின்னணி பாடகர்)
- பாலசரஸ்வதி விருது – முத்துகண்ணம்மாள்
கலைமாமணி விருது
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 90 பேருக்கு கலைமாமணி வழங்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது
- எஸ்.ஜே.சூர்யா
- சாய்பல்லவி
- லிங்குசாமி
- சூப்பர் சுப்பராயன்
- பி.கே.கமலேஷ் (சின்னத்திரை நடிகர்)
2022ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது
- விக்ரம் பிரபு
- ஜெயா வி.சி.குகநாதன்
- விவேகா (பாடலாசிரியர்)
- காயத்திரி (சின்னத்திரை நடிகை)
2023ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது
- கே.மணிகண்டன்
- ஜார்ஜ் மரியாள்
- அனிருத்
- சாண்டி (எ) சந்தோஷ்குமார் (நடன இயக்குநர்)
- ஸ்வேதா மோகன் (பின்னணி பாடகி)
தொடர்புடைய செய்திகள்
- 1955-ல் தமிழ்நாடு சங்கீத நாடக சங்கம் தொடங்கப்பபட்டது. இதன் பெயர் 1973-ல் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமென பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ஒப்பந்தங்கள்
- தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கம் மூலம் நடத்தப்பட்ட உலகப் புத்தொழில் மாநாட்டில் 23 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இம்மாநாடானது கோயம்புத்தூரில் நடத்தப்பட்டுள்ளது.
ஜி.டி.நாயுடு
- இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடு பெயரில் கோயம்புத்தூரில் தமிழகத்தின் நீள பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரு நம்ம அரசு
- கிராமசைப கூட்டத்தில் தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படும் கோரிக்கைகளுக்கு நம்ம ஊரு நம்ம அரசு திட்த்தின் கீழ் வேகமாக தீர்வு காணப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கிராமசபை நடைபெறும் நாட்கள்
- ஜனவரி 26 – குடியரசுதினம்
- மார்ச் 22 – உலக நீர் தினம்
- மே 1 – தொழிலாளர் தினம்
- ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
- அக்டோபர் 2 – காந்திஜெயந்தி
- நவம்பர் 1 – உள்ளாட்சி தினம்
தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு
- தமிழ் மொழியிலும், இலக்கியத்திலும் மாணவர்கள் அறிவினை மேம்படுத்தும் தமிழ் இலக்கிய திறனறித் தேர்வினை பள்ளிக்கல்வித்துறை அண்மையில் நடத்தியுள்ளது.
- இதில் +1 மாணவர்கள் கலந்து கொள்கின்றன.
- இதில் வெற்றிபெறும் மாணாக்கர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ் இலக்கிய திறனறித்தேர்வு – 2022
அரண் இல்லம்
- திருநங்கையர்களுக்காக ஷெனாய் நகர் (சென்னை), அண்ணா நகர் (மதுரை) ஆகிய இடங்களில் அரண் இல்லம் தொடங்கப்பட்டுள்ளது.
சங்கரலிங்கனார்
- அக்டோபர் 13-ல் சங்கரலிங்கனார் நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டது.
- மதராஸ் மாகாணத்தை தமிழகம் எனப்பெயர் மாற்றம் செய்யக்கோரி 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தார்.
தொடர்புடைய செய்திகள்
- மதராஸ் மாநில பெயர் மாற்றச் சட்டம் 14.01.1969-ல் தமிழ்நாடு என மாற்றப்பட்டது.
- ஜூலை 17, 1996இல் மதராஸ் அதிகாரப்பூர்வமாக சென்னை என மறுபெயரிடப்பட்டது.
விடியல் பேருந்து பயணம் விரிவாக்கம்
- அண்மையில் விடியல் பேருந்து பயண திட்டமானது மலைவாழ் மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
- இதன் மூலம் 40% மற்றும் அதற்கும் மேற்பட்ட பாதிப்புடைய மாற்றுதிறனாளிகள், அவர்களுடன் துணையாக வரும் நபரும் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
- விடியல் பயணத் திட்டம் – 8 மே 2021
பிரதமரின் தன தான்ய கிருஷி திட்டம்
- சமீபத்தில் பிரதமரின் தன தான்ய கிருஷி திட்டமானது தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் கீழ் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாவட்டங்களின் பயிர் உற்பத்தியினை மேம்படுத்தப்பட உள்ளது.
ஆத்மநிர்பதா மிஷன்
- பருப்பு வகைகளுக்கான ஆத்மநிர்பதா மிஷன் திட்டமானது (பருப்பு வகைகளுக்கான தற்சார்பு தேசிய திட்டம்) தொடங்கப்பட்டது.
- இத்திட்டம் 2025-26 முதல் 2030-31 வரையிலான 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
- துவரம் பருப்பு, மைசூர் பருப்பு, உளுந்தம் பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்க தொடங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2023-24ல் பருப்பு உற்பத்தி 242 லட்சம் டன்னாக உள்ளது.
- பருப்பு உற்பத்தியை 2030-31க்குள் 350 லட்சம் டன்னாக அதிகரிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2025
இப்பரிசினை பெற உள்ளவர்கள்
- ஜோயல் மோகிர்
- பீட்டர் ஹோவிட்
- ஃபிலிப் அகியோன்
பீகார்
- பீகார் மாநிலத்தில் முக்யமந்திரி மகிளா ரோஸ்கார் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- பீகாரில் பெண்களை தொழில் முனைவோக்குவதற்காக ரூ.10000 வழங்க தொடங்கப்பட்ட திட்டமாகும்.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் – தமிழ்நாடு
- மகாலட்சுமி – தெலுங்கானா
- லட்லி பெஹ்னா யோஜனா – மத்தியப்பிரதேசம்
- கர்நாடகா – க்ருஹ லட்சுமி
- மேற்கு வங்காளம் – லக்ஷ்மிர் பந்தர்
இஸ்லாமிய நேட்டோ
- இஸ்லாமிய நேட்டோ ஓப்பந்தம் சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு உறவை மேம்படுத்த உருவாக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- NATO (North Atlantic Treaty Organization) வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு – 4 ஏப்ரல் 1949
- உறுப்பினர்கள் – 32 நாடுகள்
- தலைமையகம் – பெல்ஜியம் (பிரான்ஸ் தலைநகர்)
சர்வதேச அமைதி மாநாடு
- சர்வதேச அமைதி மாநாடனது எகிப்தில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான்
- ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகமானது மீண்டும் திறக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவுடன் எல்லையை பகிரும் 7 நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.
- இந்தியா ஆப்கானிஸ்தானுடன் 106 கி.மீ. நீளத்தில் எல்லையை பகிர்கிறது.
இந்தியாவுடன் எல்லையை பகிரும் நாடுகள்
- சீனா, பூடான், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மியான்மர்
- தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் 2021-ல் ஆட்சியை பிடித்துள்ளது.
துருவப் பட்டுப்பாதை
- சீனா நாடானது துருவப் பட்டுப்பாதை திட்டத்தை (Polar Silk Road) ஆர்டிக்கடல் வழியே தொடங்கியுள்ளது.
- இத்திட்டம் உலக வர்த்தகத்தை கடல் வழியே மேம்படுத்தும் திட்டமாகும்.
AIM 120
- அமெரிக்கா நடுத்தர தூர வான்இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் AIM 120 ஏவுகணையை தயாரித்துள்ளது.
பாவனா சௌத்ரி

- BSF விமானப்பிரிவில் விமானப் பொறியாளராக பாவனா சௌத்ரி (Bhavana Chaudhary) நியமிக்கப்பட்டுள்ளார்.
- இப்பிரிவில் நியமனம் செய்யப்பட்டுள்ள முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- Border Security Force – 1 டிசம்பர் 1965
முக்கிய தினம்
சர்வதேச பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child) – அக்டோபர் 11
உலக மூட்டு வலி தினம் (World Arthritis Day) – அக்டோபர் 12
சர்வதேச பேரிடர் அபாய குறைப்பு தினம் (International Day for Disaster Risk Reduction) – அக்டோபர் 13
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (Breast Cancer Awareness Day) – அக்டோபர் 13
- உலக புற்றுநோய் தினம் – பிப்ரவரி 4
- தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் – நவம்பர் 7
உலக தரநிலை தினம் (World Standards Day) – அக்டோபர் 14
சர்வதேச மின் கழிவு நாள் (International E-Waste Day) – அக்டோபர் 14
மேலும் சில தகவல்கள்
- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் – 1948 (காரைக்குடி)
- அமைதிக்கான நோபல் பரிசினை நார்வே வழங்குகிறது
- மற்ற பிரிவுகளுக்கான நோபல் பரிசினை ஸ்வீடன் வழங்குகிறது
- ஆபரேஷன் ப்ளு ஸ்டார் – 1984
- நிர்பயா நிதி – 2013