Daily Current Affairs
Here we have updated 13th and 14th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நிதி ஒதுக்கீடு

- முதல்வரின் தாயுமானவர் திட்டத்திற்கு ரூ.35.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- முதல்வரின் தாயுமானவர் திட்டம் – முதியோர், மாற்றுத்திறனாளிக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- 12.08.2025-ல் சென்னையில் துவங்கப்பட்டது.
பால் உற்பத்தி
- இந்தியாவில் பால் உற்பத்தியில் உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் முறையே முதல் இரு இடங்களை பிடித்துள்ளன.
- 2023-24ஆம் ஆண்டில் இந்தியாவில் 239.3 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டெம் செல் உயிர் வங்கி
- இந்தியாவின் முதல் விலங்குகள் ஸ்டெம் செல் உயிர் வங்கியானது ஹைதரபாத்தில் துவங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான நகரம்

- உலகளாவிய பாதுகாப்பான நகர பட்டியலில் கர்நாடகாவின் மங்களூர் இடம் பிடித்துள்ளது.
- உலகளவில் 49வது இடம்
- இந்தியளவில் முதலிடம்
குறைகடத்தி ஆலை
- ஒடிசா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் குறைகடத்தி (Semiconductor) ஆலைகளானது துவங்கப்பட உள்ளது.
- குறைகடத்தி ஆலையானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக்கதின் கீழ் செயல்படுகிறது.
- இந்திய குறைக்கடத்தி திட்டம் – டிசம்பர் 2021
குழு அமைப்பு
- நீதிபதி யஷவந்த் வர்மா பதவி நீக்க ஆராய்ச்சிக்காக மூன்று பேர் அடங்கிய குழுவினை சபாநாயகர் அமைத்துள்ளார்.
- உச்சநீதிமன்ற நீதிபதி நியமனம், பதவி நீக்கம், தகுதி – விதி 124
- உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம், பதவி நீக்கம், தகுதி – விதி 217
ஒப்புதல் அளிப்பு
- அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் புதிதாக அமைய உள்ள டடோ-2 நீர் மின் உற்பத்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாதுரி தீட்சித்

- ஒடிசாவின் கைத்தறி துறையின் விளம்பர தூதராக மாதுரி தீட்சித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பத்ம ஸ்ரீ விருது 2008
அலைச்சறுக்கு 2026
- 2026ஆம் ஆண்டுக்கான அலைச்சறுக்கு போட்டி ஜப்பானில் நடைபெற உள்ளது.
முக்கிய தினம்
உலக உறுப்பு தான தினம் (World Organ Donation Day) – ஆகஸ்ட் 13
பாகிஸ்தான் சுந்திர தினம் (Pakistan Independence Day) – ஆகஸ்ட் 14
- பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கியவர் – ரஹ்மத் அலி
- பாகிஸ்தான் என்ற சொல்லை உருவாக்கப்பட்ட ஆண்டு – 1933