Daily Current Affairs
Here we have updated 15th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
நடுகல்

- 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லானது சேலம், மேட்டூர் அருகே மாத நாயக்கன்பட்டியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- புறநானூறு, சிலப்பதிகாரம், மலைபடுகடாம், ஐங்குறுநூறு, அகநானூறு போன்ற நூல்களில் நடுகல் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன
- நடுகல் வணக்கம் பற்றி குறிப்பிடும் நூல் – தொல்காப்பியம்
நடுகல் நடும் 6 நிலைகள்
காட்சி:
நடுகல் வைக்க ஏற்ற கல்லைத் தேர்ந்தெடுப்பது.
கால்கோள்:
கல்லை எடுத்து வருவதற்கு முன் செய்யும் சடங்குகள்.
நீர்ப்படை:
கல்லில் நீர் ஊற்றி வழிபடுவது.
நடுதல்:
கல்லை நட்டு, வீரனின் பெயர் மற்றும் செயல்களைப் பொறிப்பது.
பெரும்படை:
நடுகல்லைச் சுற்றி செய்யப்படும் சடங்குகள்.
வாழ்தல்:
நடுகல் வழிபாடு செய்தல்.
ஏற்றுமதி பட்டியல்
- இந்தியாவின் ஏற்றுமதி பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது.
- முதலிடம் – குஜராத்
- இரண்டாமிடம் – மகாராஷ்டிரா
ஜப்பானிய மூளைக் காய்ச்சல்
- கியூலெக்ஸ் கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக் காய்ச்சலுக்கு வழங்கப்படும் தடுப்பூசி திட்டம் 15 மாவட்டங்களில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்ததப்பட்டுள்ளது.
- இது ஒரு ஜூனோடிக் வைரஸ் நோய் ஆகும்.
- விலங்குகளால் மனிதர்களுக்கு பரவக்கூடிய நோய்கள் ஜூனோடிக் நோய் என்று அழைக்கப்படுகிறது.
- 5 முதல் 15 வயது வரையுள்ள மாணாக்கர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படுகிறது.
- இத்தடுப்பூசி திட்டமானது 2007-ல் தொடங்கப்பட்டது.
ஆமா சம்மான் திட்டம்
- வேலையில்லா இல்லத்தரசிகளுக்கு ஆண்டிற்கு ரூ.40,000 வழங்கும் ஆமா சம்மான் திட்டம் (Aama Samman Diwas) சிக்கிமில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கியானது நிதித்துறையில் AI தொழில் நுட்பத்தினை ஏற்பதற்கான 7 சூத்திரங்களை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934ன் படி 1 ஏப்ரல் 1935 அன்று உருவாக்கப்பட்டது.
- 1945-ல் தேசியமயமாக்கப்பட்டது.
- தற்போதைய ஆளுநர் – சஞ்சய் மல்ஹோத்ரா
சரக்கு இரயில்

- மத்திய ரயில்வே அமைச்சகமானது நாட்டின் நீளமான சரக்கு ரயிலான ருத்ராஸ்த்ரா-வை (4.5 கி.மீ நீளம்) அறிமுகம் செய்துள்ளது.
- இது உலகின் இரண்டாவது நீளமான ரயிலாகும்.
தொடர்புடைய செய்திகள்
- உலகின் முதலாவது நீளமான ரயில் ஆஸ்திரேலியாவில் உள்ள BHP ரயில் (7.3 கி.மீ. நீளம்) ஆகும்.
வணிக செயற்கைக்கோள்
- Pixxelspace India நிறுவனமும், இஸ்ரோவும் இணைந்து வணிக செயற்கைக்கோள் விண்மீன் தொகுப்பினை உருவாக்க உள்ளது.
- இது இந்தியாவின் முதல் வணிக செயற்கைக்கோள் விண்மீன் தொகுப்பு ஆகும்.
முக்கிய தினம்
இந்திய சுதந்திர தினம் (India Independence Day) – ஆகஸ்ட் 15