Daily Current Affairs
Here we have updated 16th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
விருதுகள்
சுதந்திர விழாவில் தமிழக அரசால் வழங்கப்பட்ட விருதுகள்
அப்துல் கலாம் விருது

- 2015முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- நாராயணன் – முன்னாள் இஸ்ரோ தலைவர்
தகைசால் தமிழர் விருது
- 2021முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- காதர் மொய்தின் – இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர்
- சங்கரய்யா, நல்லகண்ணு, வீரமணி முறையே தகைசால் தமிழர் விருதினை பெற்றுள்ளனர்.
கல்பனா சாவ்லா விருது
- துணிவு மற்றும் சாகச செயலுக்காக 2003 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
- துளசி முருகேசன் – இறகு பந்தாட்ட வீராங்கனை
சிறந்த மாநகராட்சி விருது
- முதல் பரிசு – ஆவடி
- இரண்டாவது பரிசு – நாமக்கல்
சிறந்த நகராட்சி விருது
- முதல் பரிசு – ராஜபாளையம்
- இரண்டாவது பரிசு – ராமேஸ்வரம்
- மூன்றாம் பரிசு – பெரம்பலூர்
தபால் முத்திரை
- தஞ்சாவூரில் காவிரி ஆற்றின் குறுக்கே கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையின் பெருமையை பறைசாற்றும் வகையில் தபால் முத்திரை வெளியிடப்பட்டுள்ளது.
- இதன் மறுபெயர் – கிராண்ட் அணைகட்
சுதந்திர தினம்
- இந்தியாவின் 79வது சுதந்திர தினம் நய பாரத் என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்பட்டது.
அதிக முறை கொடியேற்றியவர்கள்
- முதலிடம் -ஜவர்கர்லால் நேரு
- இரண்டாமிடம் – நரேந்திர மோடி
- மூன்றாமிடம் – இந்திராகாந்தி
அதிக நேர உரை
- நரேந்தி மோடி – 105 நிமிடங்கள்
குறைந்த நேர உரை
- நேரு – 14 நிமிடங்கள் (1954)
- இந்திரா காந்தி – 14 நிமிடங்கள் (1966)
மேக வெடிப்பு
- காஷ்மீரிலுள்ள கிஷ்த்வார் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
- இதன் மூலம் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் அதிக பலி ஏற்பட்டுள்ளது.
மேக வெடிப்பு
- குறிப்பிட்ட இடத்தில் குறைந்த நேரத்தில் மேகம் உருவாகி 100 மி.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்வதாகும்
தொடர்புடைய செய்திகள்
- சமீபத்தில் உத்திராகாண்டின் தாராலி பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இல.கணேசன்

- நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் நலக்குறைவால் காலமானார்.
தொடர்புடைய செய்திகள்
- மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்பு தலைவர் ஆளுநர் ஆவார்.
- ஆளுநர் பதவி பற்றியது – விதி 153
- ஆளுநர் நிர்வாக அதிகாரம் – விதி 154
- ஒருவர், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் ஆளுநராக செயல்படுதல் – விதி 158 (3A)
- ஆளுநரின் சிறப்புரிமைகள் – விதி 361 (1)
பிரனேஷ்
- சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் சேலஞ்சர் பிரிவில் தமிழ்நாட்டின் பிரனேஷ் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
வெஸ் பயஸ்
- டென்னிஸ் வீரரும், லியாண்டர் பயஸின் தந்தையான வெஸ் பயஸ் அண்மையில் காலமானார்.
- 1972 மியூனிக் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதகம் வென்றுள்ளார்.