Daily Current Affairs
Here we have updated 13th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய பாலம்

- விருதுநகரில் கட்டப்பட்ட புதிய பாலத்திற்கு சங்கரலிங்கனார் பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- மதராஸ் மாகாணத்தை தமிழகம் என பெயர் மாற்றக் கோரி தியாகி சங்கரலிங்கனார் 27.07.1956 முதல் 13.10.1956 வரை 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.
- மதராஸ் மாநில பெயர்மாற்றச் சட்டம் 14 ஜனவரி 1969 ஆண்டு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
நீலக்கொடி சான்றிதழ்
- தமிழ்நாட்டின் கோவளம் கடற்கரையானது தொடர்ச்சியாக 5வது முறையாக நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
- நீலக்கொடி சான்றிதழ் பெற்ற முதல் தமிழக கடற்கரை – கோவளம் கடற்கரை (21 செப்டம்பர் 2021)
வணிக சீர்திருத்த செயல் திட்டம்
- தமிழ்நாடு வணிக சீர்திருத்த செயல் திட்டத்தில் (BRAP) Top Achiever தரவரிசை உள்ளது. இதனால் தொழில்முனைவதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் வணிக சீர்திருத்த செயல் திட்டம் 2014-15 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- BRAP – Business Reforms Action Plan
செவாலியே விருது
- பிரான்ஸ் அரசின் உயரிய செவாலியே விருதானது இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ் வாட்சன்

- டிஎன்ஏ ஹெலிக்ஸ் இரட்டை மாதிரியை வெளியிட்ட ஜேம்ஸ் வாட்சன் அண்மையில் காலமானார்
- 1962ல் வாட்சன் உள்பட கிரிக், மாரிஸ் வில்கின்ஸ் ஆகியோருக்கு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
பசுமை இல்ல வாயு
- பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடும் நாடுகள் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
- முதலிடம்: அமெரிக்கா
- இரண்டாமிடம் : சீனா
தொடர்புடைய செய்திகள்
- கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன், நீராவி, நைட்ரஸ் ஆக்சைடு மற்றும் ஓசோன் ஆகியவை பசுமை இல்ல வாயுக்கள் ஆகும்.
- இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும்போது, புவி வெப்பமடைதல் ஆகிய காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.
சட்டமன்ற தேர்தல்
- பீகாரில் உள்ள 243 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
- இதில் 67% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மகிழ்ச்சி நகரங்கள் பட்டியல்
ஆசிய அளவில்
- முதலிடம் – மும்பை
- இரண்டாமிடம் – பெய்ஜிங்
- மூன்றாமிடம் – ஷாங்காய்
உலகஅளவில்
- முதலிடம் – அபுதாபி
- இரண்டாமிடம் – மெடலின் (கொலம்பியா
- மூன்றாமிடம் – கேப்டவுண் (தென்னாப்பிரிக்கா)
தொடர்புடைய செய்திகள்
- மிக அசுத்தமான நகரம் – மதுரை
- தென்மண்டல தேசிய நீர் விருது 2025 – திருநெல்வேலி
- சுத்தமான காற்று நகரம் – திருநெல்வேலி
சர்வதேச சுற்றுலா சந்தை
- சிக்கிம் மாநிலத்தில் 13வது சர்வதேச சுற்றுலா சந்தை நடைபெற்றுள்ளது.
VINBAX
- இந்தியாவிற்கும் வியட்நாமிற்கு இடையே VINBAX கூட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.
ஓமன்
- யுனெஸ்கோவின் மனிதன் மற்றும் உயிர்க்கோள கவுன்சிலிற்கு ஓமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்

- ஆடவர் 50மீ ரைபிள் பிரிவில் ஐஸ்வரி பிரதாப் சிங் வெள்ளிப்பதக்கம் வென்று உலகச்சாதனை படைத்துள்ளார்
- ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் ஈஷாசிங், சாம்ராட் ராணா இணை வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.
முக்கிய தினம்
உலக கருணை தினம் (World Kindness Day) – நவம்பர் 13