Daily Current Affairs
Here we have updated 14th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கோயம்புத்தூர்
- நீர் மேலாண்மைக்கான தேசிய நீர் விருது 2025ல் தென்மண்டலத்தில் நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கோயம்புத்தூர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
ஊக்கத்தொகை

- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
- நான் முதல்வன் திட்டம் – 1 மார்ச் 2022
இலவசஉணவு
- தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டமானது நவம்பர் 15ல் சென்னையில் தொடங்கி வைக்கப்படுகிறது.
காலநிலை அபாய குறியீடு
- முதலிடம் – டொமினிகா
- இரண்டாவது இடம் – மியான்மர்
- இந்தியா – 9வது இடம் பிடித்துள்ளது.
- இதனை ஜெர்மன்வாட்ச் வெளியிட்டுள்ளது.
காசநோய் அறிக்கை
- உலகளாவிய காசநோய் அறிக்கையை WHO வெளியிடப்பட்டுள்ளது.
- காசநோய் பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- உலக காசநோய் தினம் – மார்ச் 24
காசநோய்க்கான திட்டங்கள்:
- நிக்ஷய் போஷான் திட்டம்
- பிரதான் மந்திரி டிபி முக்த் பாரத் திட்டம்
படகு முனையம்

- அசாமின் குவஹாத்தியில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே நவீன நதி படகு முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
- இது இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் நவீன நதி படகு முனையமாகும்.
பசுமை ஹைட்ரஜன் ஆலை
- இந்தியாவின் முதல் மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலையானது கர்நாடாகாவில் அமைக்கப்பட்டுள்ளது.
- இது தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் மற்றும் PU திட்டம் பகுதி-1ன் கீழ் தொடங்கப்பட்டது.
- தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷன் – 4 ஜனவரி 2023
பாரத் நெட் திட்டம்
- திருத்தப்பட்ட பாரத் நெட் திட்டம் முதன் முதலாக பஞ்சாபில் தொடங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- பாரத் நெட் திட்டம் – 2011
வேலையின்மை விகிதம்
- ஜூலை-செப்டம்பர் காலாண்டின் வேலையின்மை விகிதம் 5.2% மாக உள்ள தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) தெரிவித்துள்ளது.
- NSO (National Statistics Office) – 1 April 1996
இந்தியாவில் வேலைவாய்பின்மை மாநிலங்கள் பட்டியல்
- முதலிடம் – உத்திரகாண்ட்
- இரண்டாமிடம் – ஆந்திரப்பிரதேசம்
- மூன்றாமிடம் – கேரளா
தொடர்புடைய செய்திகள்
- முதல் காலாண்டு – ஏப்ரல் முதல் ஜூன்
- இரண்டாம் காலாண்டு – ஜூலை முதல் செப்டம்பர்
- மூன்றாம் காலாண்டு – அக்டோபர் முதல் டிசம்பர்
- நான்காம் காலாண்டு – ஜனவரி முதல் மார்ச்
காலித் எல் எனனி

- யுனஸ்கோவின் புதிய தலைமை இயக்குநராக எகிப்து நாட்டின் தொல்லியல் ஆராய்சியாளரான காலித் எல் எனனி (Khaled El-Enany) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- யுனஸ்கோவின் 12வதுதலைமை இயக்குநர் ஆவார்.
தொடர்புடைய செய்திகள்
- யுனெஸ்கோ என்பது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் சுருக்கமாகும்.
- இது உறுப்பு நாடுகளிடையே கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை ஊக்குவிக்க 16 நவம்பர் 1945 இல் நிறுவப்பட்டது.
- தலைமையகம்: பாரீஸ், பிரான்ஸ்
முக்கிய தினம்
உலக நீரிழிவு தினம் (World Diabetes Day) – நவம்பர் 14
தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) – நவம்பர் 14
- உலக குழந்தைகள் தினம் (World Children’s Day) – நவம்பர் 20