Daily Current Affairs
Here we have updated 15th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
செவாலியர் விருது

- சிவாஜி கணேசன் – 1993 (முதல் செவாலியர் விருது)
- கமலஹாசன் – 2016
- தோட்டா தரணி – 2025
குழு அமைப்பு
- ஆவணக் கொலைகளை தடுக்க பரிந்துரை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி பாஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- உறுப்பினர்களாக வெ.பழனிக்குமார் (ஒய்வு பெற்ற IAS அதிகாரி), எஸ்.ராமநாதன் (ஒய்வு பெற்ற IPS அதிகாரி) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன.
தோழி விடுதிகள்
- ரூ.62.51 கோடி செலவில் புதியதாக 12 தோழி விடுதிகள் தொடங்கப்பட உள்ளன.
- தமிழகத்தில் 19 விடுதிகள் உள்ளன. 14 விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
- தோழிவிடுதிகள் திட்டம்: 2023
தொடர்புடைய செய்திகள்
- அறன் இல்லம் (திருநங்கையர்களுக்காக) – சென்னை, மதுரை
- பூஞ்சோலை (சிறுவர்களுக்கான இல்லம்) – கோயம்புத்தூர்
- அன்புச்சோலை (மூத்த குடிமக்களின் நல்வாழ்வினை மேம்படுத்தல்) – 10.11.2025 (திருச்சி)
நடமாடும் மருத்துவமனை

- பெண்களுக்கு புற்றுநோயை கண்டறிய நடமாடும் மருத்துவமனை காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட உள்ளது.
மொகோலோடி இயற்கை காப்பகம்
- போட்ஸ்வானாவிலுள்ள மொகோலோடி இயற்கை காப்பகத்திலிருந்து 8 சிவிங்கிபுலிகளை இந்தியாவிற்கு கொண்டு வர ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது
குவாண்டம் வைர நுண்ணோக்கி
- இந்தியாவின் முதல் குவாண்டம் வைர நுண்ணோக்கியை IIT பம்பாய் நிறுவியுள்ளது.
காச நோய்
- உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய காசநோய் அறிக்கை 2024யின்படி இந்தியாவில் காசநோய் அளவு 21%மாக குறைந்துள்ளது.
- 2015ல் காச நோய் பாதிப்பு – 237 (ஒரு லட்சம் பேருக்கு)
- 2024ல் காச நோய் பாதிப்பு – 187 (ஒரு லட்சம் பேருக்கு)
- காசநோயை உண்டாக்கும் பாக்டீரியா – மைக்கோபாக்டீரியம் டியூபர்குளோசிஸ்
நியோமா விமானப்படை தளம்
- லடாக்கில் புதிதாக கட்டப்பட்ட நியோமா விமானப்படை தளம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
- இது கடல் மட்டத்திலிருந்து 13,700அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
- இது உலகின் மிக உயரமான விமானப்படை தளமாக கருதப்படுகிறது.
துர்கா ட்ரோன் படை
- குவாலியரில் (மத்தியபிரதேசம்) ட்ரோன் பயிற்சி பள்ளியில் எல்லை பாதுகாப்பு படையால் (BSF) பெண்களுக்கான ட்ரோன் படை உருவாக்கப்பட்டுள்ளது.
- இதற்கு துர்கா ட்ரோன் படை எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- BSF (Border Security Force) – 1 டிசம்பர் 1965
- தலைமை தளபதி – தல்ஜித் சிங் சவுத்ரி
ஜோதி சுரேகா
- வங்கதேசத்தில் நடைபெற்ற வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் மகளிர் தனிநபர் பிரிவில் ஜோதிசுரேகா தங்கம் வென்றுள்ளார்.
- காம்பவுண்ட் மகளிர் அணிகள் பிரிவில் ஜோதி சுரேகா, தீப்ஷிகா, பிரதிகா பிரதீப் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டு போட்டி
- கேலோ இந்திய பல்கலைக்கழக விளையாட்டு போட்டியானது ராஜஸ்தானில் நடைபெற உள்ளது.
உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்

- கத்தாரில் நடைபெற்ற உலக ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாட்டினைச் சேர்ந்த அனுபமா ராமச்சந்திரன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
முக்கிய தினம்
பழங்குடிகள் பெருமை தினம் (Tribal Pride Day) – நவம்பர் 15
- 2021 முதல் பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாளானது பழங்குடிகள் பெருமை தினமாக கொண்டாடப்படுகிறது.
ஜார்க்கண்ட் மாநில தினம் – நவம்பர் 15
- 2000 நவம்பர் 15-ல் பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் பிரிக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில் ஜார்க்கண்ட் மாநில தினம் கடைபிடிக்கப்படுகிறது.
- இந்தியாவின் 28வது மாநிலமாக ஜார்கண்ட் உருவாகியுள்ளது.
கூடுதல் தகவல்கள்
- தேசிய மின் இயக்கத் திட்டம் – 2020