Daily Current Affairs
Here we have updated 14th and 15th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அன்பு கரங்கள்

- பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்க அன்பு கரங்கள் திட்டமானது சென்னையில் தொடங்கப்படுகிறது.
- தமிழக முதல்வர் இத்திட்டத்தினை தொடங்கி வைக்கிறார்.
- இத்தொகையானது பள்ளிப்படிப்பிற்காக 18வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தொடங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல்வரின் காலை உணவுத்திட்டம் – 15 செப்டம்பர் 2022
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் – 15 செப்டம்பர் 2023
முந்திரி வாரியம்
- கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் முந்திரி வாரியத்தின் தலைமையகம் அமைய உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முந்திரி உற்பத்தியில் கடலூர் முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழ்நாட்டின் முந்திரி தலைநகரம் – கடலூர்
- தமிழ்நாடு முந்திரி உற்பத்தி – 4வது இடம்
- தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதி – 2வது இடம்
- இந்தியாவில் மகராஷ்டிரா முந்திரி உற்பத்தியல் முதலிடம் பிடித்துள்ளது.
- உலகளவில் இந்தியா முந்திரி உற்பத்தியில் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
அடல் புதுமை மையம்
- இந்தியாவின் முதல் வெளிநாட்டு அடல் புதுமை மையமானது அபுதாபியில் அமைய உள்ளது.
உலக ஸ்டாப்அப் உச்சி மாநாடு
- வருகின்ற அக்டோபர் மாதத்தில் உலக ஸ்டாப்அப் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
உலகளாவிய உச்சி மாநாடு
- 2027ஆம் ஆண்டிற்கான கடலோர காவல்படை உலகளாவிய உச்சி மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
- இது ஐந்தாவது கடலோர காவல்படை உலகளாவிய உச்சி மாநாடு ஆகும்.
மெட்ரோ ரயில் கட்டமைப்பு
- மிப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பு பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – சீனா
- இரண்டாமிடம் – அமெரிக்கா (1400 கி.மீ.)
- மூன்றாமிடம் – இந்தியா (1065 கி.மீ.)
லோக் அதாலத்
- சமீபத்தில் மக்கள் நீதிமன்றம் என அழைக்கப்படும் லோக் அதாலத் நடைபெற்றுள்ளது.
- லோக் அதாலத் ஆண்டிற்கு நான்கு முறை நடைபெறுகிறது.
- முதல் லோக் அதாலத் நடைபெற்ற இடம்: குஜராத் 1982)
குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 உரு
- பாஸ்போர்ட் சட்டம் 1920, வெளிநாட்டினர் பதிவு சட்டம் 1939, வெளிநாட்டினர் சட்டம் 1946, மற்றும் குடியேற்ற சட்டம் 2000 ஆகியவற்றிற்கு பதிலாக குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 உருவாக்கப்பட்டுள்ளது.
AI அமைச்சர்

- அல்பேனியாவில் ஊழல் தடுப்பு துறை அமைச்சராக முதல் AI அமைச்சர் டியெல்லா (சூரியன்) என்ற பெயரில் பணியமர்த்தப்பட்டுள்ளது
தொடர்புடைய செய்திகள்
- முதல் AI செய்தி வாசிப்பாளர் – லிசா (ஒடிசா)
- முதல் AI ஆசிரியர் – ஐரிஸ் (கேரளா)
- முதல் AI பள்ளி – கேரளா
- AI ஆசிரியர் – மார்க்ரெட் (இராமேஸ்வரம்)
ஆயுர்வேத தினம்
- செப்டம்பர் 23-ல் 10வது ஆயுர்வேத தினமானது கோவாவில் நடைபெற உள்ளது.
ஞான பாரத போர்டல்
- பழங்கால ஓலைச்சுவடிகள் மூலம் இந்தியாவின் அறிவுசார் மரமரபை மீட்டெடுப்பதற்கான ஞானபாரதம் சர்வதேச மாநாடு (International Conference Gana Bharat) தில்லியில் நடைபெற்றுள்ளது.
- இம்மாநாட்டில் ஓலைச்சுவடிகளை எண்மமயமாக்க ஞான பாரத போர்டல் தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டி
- தேசிய கடல் சாகச விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற உள்ளது
உலக குத்துச்சண்டை போட்டி

- இங்கிலாந்தில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை போட்டியில் மீனாட்சி ஹூடா என்பவர் 48கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார்
- ஜெய்ஸ்மேன் லம்போரியா என்பவர் 57கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளார்
முக்கிய தினம்
தேசிய ஹிந்தி தினம் (National Hindi Day) – செப்டம்பர் 14
- ஹந்தி மொழி இந்தியாவில் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
- உலக ஹிந்தி தினம் – ஜனவரி 10
சர்வதேச ஜனநாயக தினம் (International day of Democracy) – செப்டம்பர் 15
தேசிய பொறியாளர்கள் தினம் (National Engineer’s Day) – செப்டம்பர் 15
- Deep Tech and Engineering Excellence: Driving India’s Techade