Daily Current Affairs
Here we have updated 17th and 18th August 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாமல்லபுரம்

- மாமல்லபுரத்தில் நீருக்கடியில் மீண்டும் அகழாய்வு நடைபெற உள்ளது.
- இதனை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் மேற்கொள்ள உள்ளது.
108 ஆம்புலன்ஸ் சேவை
- அவசரம் 108 செயலி மூலம் தமிழ்நாட்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையானது 11 நிமிடங்களில் அளிக்கும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
- சென்னையில் 8 நிமிடங்களில் அளிக்கப்படுகிறது.
- இச்சேவை உதவி 13 நிமிடங்களிலிருந்து 11 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது.
- 108 ஆம்புலன்ஸ் சேவை 2008-ல் தொடங்கப்பட்டுள்ளது.
வெற்றி பள்ளிகள்
- +1, +2 மாணவர்களுக்கு IIT, NEET, CLAT பயிற்சி அளிக்கவும், ஆலோசனை வழங்கவும் வெற்றி பள்ளிகள் தொடங்கப்பட்டது.
- முதன் முறையாக 236 வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
செயற்கை பவளப்பாறை
- தமிழக அரசு TNSHORE திட்டத்தின் கீழ் கரியசள்ளி தீவில் செயற்கை பவளப்பாறை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
ஃபாஸ்டேக் பயண அட்டை
- தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது தனியார் வாகனங்களுக்காக ஃபாஸ்டேக் பயண அட்டை வசதியை 15.08.2025 முதல் துவங்கியுள்ளது.
- இதன் மூலம் ரூ.3000 செலுத்தி ஓராண்டு அல்லது 200 முறையை சுங்கச்சாவடியை கடக்கலாம்.
GST முன்மொழிவு
- இந்தியாவில் புதிதாக 5%, 18% GST முன்மொழியப்பட்டுள்ளன.
- ஏற்கனவே 5%, 12%, 18%, 28% GST அடுக்குகள் இருந்த நிலையில் தற்போது 5%, 18% GST முன்மொழியப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் மறைமுக வரிகளுக்கு மாற்றானது
- GST சட்டம் – 2017 மாரச் 29
- GST நடைமுறை – 2017 ஜுலை 1
- இது ஒரு மறைமுக மற்றும் ஒருமுனை வரியாகும்.
GSTயின் மூன்று வகை
- CGST: மாநிலத்திற்குள்ளே நடைபெறுகிற விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும்.
SGST: மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனையில் மாநில அரசால் வசூலிக்கப்படுவதாகும்.
IGST: மாநில அரசுகளுக்கிடையேயான விற்பனையில் மத்திய அரசால் வசூலிக்கப்படுவதாகும்.
குறிக்கோள்
- “ஒரு நாடு-ஒரு அங்காடி-ஒரு வரி”
விக்ஸித் பாரத் ரோஸ்கார் யோஜனா
- தனியார் துறையில் முதன் முறையாக பணிபுரியும் பணியாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் ஊக்கத்தொகை வழங்க தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
- இத்திட்டத்தி்ன்படி முதல் முறை பணியாளர்களுக்கு, முதலாளிகளுக்கும் ரூ.15,000 வழங்கப்படுகிறது.
- நாள்: 15.08.2025
சுதர்சன் சக்ரா
- சுதர்சன் சக்ரா என்ற உள்நாட்டு வான் பாதுகாப்பு அமைப்பை 2035ஆம் ஆண்டுக்குள் உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- எதிரிகளின் தாக்குதல்களை நடுநிலையாக்குதல், பதிலடி கொடுத்தல் போன்றவற்றிற்காக உருவாக்கப்பட உள்ளது.
அங்கிதா தியானி

- சர்வதேச தடகள போட்டியில் மகளிருக்கான 2000 மீ ஸ்டீபிள் சேஸ் பிரிவில் அங்கிதா தியானி தங்கம் வென்றுள்ளார்.
- இவர் 6 நிமிடம் 13.92 விநாடிகளில் இந்த இலக்கை அடைந்து சாதனைபடைத்துள்ளார்