Daily Current Affairs
Here we have updated 19th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உடனடி பயிர் கடன் திட்டம்

- தர்மபுரியில் அதியமான் கோட்டை பகுதியில் உடனடி பயிர் கடன் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- இத்திட்டத்தில் இணையவழி மூலம் பயிர்கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- விவசாயிகள் இணையவழி விண்ணப்பித்த உடனே பயிர்க்கடன் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு
- உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழகத்திலுள்ள ஊராட்சிகளின் எண்ணிக்கை: 12,482
நுகர்வோர் குறை தீர்க்கும் பணி
- நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் தமிழ்நாடு, ராஜஸ்தான் தெலுங்கானா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
HAWK அமைப்பு
- வனவிலங்கு குற்றங்களை தடுப்பதற்காக HAWK அமைப்பினை தமிழ்நாடு அறிமுகம் செய்துள்ளது.
சபாசார்
- மத்திய அரசு கிராம சபை கூட்டங்களின் கட்டமைக்கப்பட்ட நிமிடங்களை உருவாக்குவதற்காக சபாசார் என்னும் AI கருவி உருவாக்கியுள்ளது.
ஆபரேஷன் பால்கன்

- ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை காப்பாற்றுவதற்காக ஆபரேஷன் பால்கன் (Operation Falcon) அமைப்பினை அசாம் மாநிலம் அறிமுகம் செய்துள்ளது.
- ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் உள்ள சரணாலயம் – காசிரங்கா வனவிலங்கு சரணாலயம் (அசாம்)
இடப்பெயர்வு திட்டம்
- துவாலு என்ற நாடு தன் மக்களை இடப்பெயர்வு திட்டத்தின் கீழ் இடமாற்றம் செய்ய உள்ளது.
- இது உலகின் முதல் காலநிலை மாற்ற இடப்பெயர்வாக கருதப்படுகிறது.
- துவாலு நாடானது ஹவாய் தீவுக்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் உள்ளது.
அஜய்குமார் பல்லா
- நாகலாந்து ஆளுநராக அஜய்குமார் பல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- மணிப்பூர் ஆளுநராக செயல்படும் இவர் கூடுதல் பொறுப்பாக நாகலாந்து ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- ஒரு மாநில ஆளுநர் – விதி 153
- ஆளுநர் நிர்வாக அதிகாரம் – விதி 154
- ஆளுநர் நியமனம் – விதி 155
- ஆளுநர் பதவிக்காலம் – விதி 156
- ஆளுநர் தகுதி – விதி 157
கிராண்ட் மாஸ்டர்

- இந்தியாவின் 89வது கிராண்ட் மாஸ்டராக ரோகித் கிருஷ்ணா உருவாகியுள்ளார்.
முக்கிய தினம்
உலக மனிதாபிமான தினம் (World Humanitarian Day) – ஆகஸ்ட் 19
ஆப்கானிஸ்தான் சுதந்திர தினம் (Afghanistan Independence Day) – ஆகஸ்ட் 19
- 19.08.1919-ல் ஆப்கானிஸ்தான் சுதந்திர பெற்றதை தொடர்ந்து ஆகஸ்ட் 19-ல் ஆப்கானிஸ்தான் சுதந்திர கொண்டாடப்படுகிறது.