Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 20th August 2025

Daily Current Affairs 

Here we have updated 20th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

டாலர் சிட்டி

Vetri Study Center Current Affairs - Tiruppur

  • திருப்பூர் டாலர் சிட்டி என அழைக்கப்படுகிறது.
  • திருப்பூரிலிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஆடை ஏற்றுமதி செய்யப்படுவதால் இது டாலர் சிட்டி என அழைக்கப்படுகிறது.

விடியல் பயணம்

  • தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விடியல் பயணத்தில் பெண்கள் 51 மாதங்களில் ரூ.50,000 சேமித்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
  • விடியல் பயணம் – 8 மே 2021

பெண் தொழிலாளர்கள்

  • தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண் பட்டியலில் தமிழ்நாடு (41.4% பேர்) முதலிடம் பிடித்துள்ளது.
  • இரண்டாமிடம் – கர்நாடகம்
  • மூன்றாமிடம் – ஆந்திரா
  • முறைசாரா துறைகளில் பணிபுரியும் பெண்கள் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடம் பிடித்துள்ளது.

விக்சித் பாரத் திட்டம் (PMVBRY)

  • PMVBRY திட்டத்திற்கு ரூ.1லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • தொடங்கப்பட்ட நாள் : 1 ஆகஸ்ட் 2025
  • PMVBRY என்பதன் விரிவாக்கம் – Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana (பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம்)

வேலையின்மை விகிதம்

  • நகர்புறங்களில் பெண்களுக்கான தொழிலாளர் படை பங்கேற்பு விகிதமானது 24%லிருந்து 25.5% ஆக உயர்ந்துள்ளது.
  • இதன் மூலம் இந்தியாவின் வேலையின்மை விகிதம் 5.5%லிருந்து 5.2%மாக குறைந்துள்ளது.

பதவி நீக்கதீர்மானம்

Vetri Study Center Current Affairs - Gyanesh Kumar

  • இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையரை குடியரசுத்தலைவர் நியமனம் செய்கிறார்.
  • பதவி நீக்க செய்ய அதிகாரம் நாடாளுமன்றம் மட்டும் செயல்படுத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையம்

  • உருவாக்கப்பட்ட நாள் – 25 ஜனவரி 1950
  • தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25
  • மற்றொரு பெயர் – நிர்வச்சன் சதன்
  • முதல் தலைமை தேர்தல் ஆணையர் – சுகுமார் சென்
  • 25வது தலைமை தேர்தல் ஆணையர் – இராஜீவ் குமார்
  • தேர்தல் ஆணைய விதிகள் – 324 முதல் 329 வரை
  • தேர்தல் ஆணைய விதிகள் – XV

இந்திய மேலாண்மை நிறுவனம்

  • அசாமின் குவகாத்தியில் புதியதாக இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM) தொடங்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் 22வது இந்திய மேலாண்மை நிறுவனம் ஆகும்.

ஜன் விகாஷ் மிஷன் 2.0

  • சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்யும் ஜன் விகாஷ் மிஷன் 2.0 மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஜன் விகாஷ் மிஷன் 2023-ல் நிறைவேற்றப்பட்டிருந்தது.

மின் தகடுகள் 

  • வாரணாசியல் ரயில் தண்டவாளங்கள் இடையே சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் தண்டவாளங்களிடையே சோலார் பேனல் வைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • 70 மீட்டர் நீளத்திற்கு 28 சோலார் பேனல்கள் வைக்கப்பட்டுள்ளன.

போலியோ பரவுதல்

Vetri Study Center Current Affairs - Polio

  • பாகிஸ்தானில் தற்போது போலியோ பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் மட்டுமே போலியோ நாேய் பரவி வருகிறது.
  • போலியோ தடுப்பூசி கண்டறிந்தவர் – ஜாேனா சால்க்

முக்கிய தினம்

உலக புகைப்பட தினம் (World Photography Day) – ஆகஸ்ட் 19

  • கருப்பொருள்: My Favorite Photo

இந்திய நல்லிணக்க தினம் – ஆகஸ்ட் 20

உலக கொசு தினம் (World Mosquito Day) – ஆகஸ்ட் 20

  • 20 ஆகஸ்ட் 1897-ல் சர் ரொனால்டு ராஸ் என்பவர் அபினாஸ் என்ற பெண் கொசுவால் மலேரியா பரவுதை கண்டறிந்தார்
  • கொசுக்களால் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் இறக்கின்றனர்.

Related Links

Leave a Comment