Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st August 2025

Daily Current Affairs 

Here we have updated 21st August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

டிஜிட்டல் கல்வியறிவு

Vetri Study Center Current Affairs - Digital Literacy

கேரளா மாநிலம் முழுமையான டிஜிட்டல் கல்வியறிவு பெற்றுள்ளது.

  • இதன் மூலம் இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

உச்சி மாநாடு

  • பாரம்பரிய மருத்துவம் குறித்த 2வது WHO உலகளாவிய உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது.
  • நடைபெறும் நாள்: 25.12.2025
  • முதல் WHO உலகளாவிய உச்சி மாநாடு – குஜராத் (1 ஆகஸ்ட் 2023)

தொடர்புடைய செய்திகள்

  • WHO – World Health Organization – 7.4.1948

சட்டத்திருத்த மசோதா 

  • மத்திய அரசு 130வது சட்டத்திருத்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளது.
  • இதன் மூலம் ஒரு அமைச்சரோ, பிரதமரோ, முதல்வராே குற்றவழக்கில் 30 நாட்கள் ஜெயில் தண்டனை அனுபவித்தால் 31வது நாள் அவர்கள் பதவி காலியாகி விடும்.
  • இந்த சட்டத்திருத்தின் மூலம் 75, 164, 239AA விதிகள் திருத்தப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • விதி 75 – பிரதமர் நியமனம்
  • விதி 164 – முதல்வர் நியமனம்
  • விதி  239AA – யூனியன் பிரதேசமான டெல்லியில் சட்டமன்றம் மூலம் சட்டமேற்றுதல்

இஸ்ரோ

Vetri Study Center Current Affairs - ISRO

  • 75டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கா 40 மாடி கட்டட உயர கொண்ட புதிய ராக்கெட்டை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.

விண்வெளி திட்டம்

  • 2040ஆம் ஆண்டுக்குள் நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2027-ல் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
  • 2035-க்குள் சொந்த விண்வெளி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

ரூபெல்லா நோய்

  • ரூபெல்லா நோயை முழுமையாக நேபாள நாடு ஒழித்துள்ளது.

ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டி

  • கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியின் சீனியர் மகளிர் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் மனு பார்க்கர் வெண்கலம் வென்றுள்ளார்.
  • ஜூனியர் மகளிர் 10மீ ஏர்பிஸ்டல் பிரிவில் ராஷ்மிகா சாகல் தங்கம் வென்றுள்ளார்.

மகளிர் கிரிக்கெட்

Vetri Study Center Current Affairs - World CUP

  • 13வது மகளிருக்கான உலககோப்பை கிரிக்கெட் போட்டியானது இந்தியாவில் நடைபெற உள்ளது.

Related Links

Leave a Comment