Daily Current Affairs
Here we have updated 17th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதியோர்கள் நலன்

- முதியோர்கள் நலனில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
- இந்தியாவில் 100 முதியோர் நல மருத்துவர்கள் தமிழ்நாட்டில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- முதியோர்களுக்கான கட்டணமில்லா உதவி எண்: 14567
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம்
- தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவராக ஐசரி கே.கணேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
- பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வரைவு விதிகள்
- தேசிய விளையாட்டுகள் வாரியம், தேசிய விளையாட்டுகள் தீர்ப்பாயம், தேசிய விளையாட்டுகள் தேர்தல் குழு போன்றவற்றில் சீர்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
- இந்த சீர்திருத்தம் தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் 2025ன் கீழ் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.
யானைகள் எண்ணிக்கை
- DNA அடிப்படையிலான யானை கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
- 2025-ல் இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை 22,446 ஆக உள்ளது. கடந்த 2017-ல் 27,312 யானைகள் இருந்தன.
- கர்நாடகம் (6,013), அசாம் (4,159), தமிழ்நாடு (3,136) போன்ற மாநிலங்கள் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகமாக யானைகள் உள்ளன.
லித்தியம் இருப்பு
- ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- இந்திய புவியியல் ஆய்வு மையமானது (GSI) 5.9 மில்லியன் டன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- GSI (Geological Survey of India) – 1981
பட்டினி குறியீடு
- 2025 உலக பட்டினி குறியீட்டில் இந்தியா 102வது இடம் பிடித்துள்ளது.
காமன்வெல்த் போட்டி 2030
- குஜராத்தின் அகமதாபாத் நகரில் 2030ஆம் ஆண்டுக்கான காமன்வெல்த் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
ராகுல் சச்தேவ்

- 2025ஆம் ஆண்டிக்கான காட்டுயிர் புகைப்படக் கலைஞருக்கான விருதானது ராகுல் சச்தேவிற்கு (இந்தியா) வழங்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு விதி 312
- மாநிலங்களவை மூன்றில் இருபங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றினால் அகில இந்திய நீதித்துறை சேவையை உருவாக்கலாம்.
- இதை பற்றி அரசியலமைப்பு விதி 312 கூறுகிறது.
கரியமில வாயு
- 2024-ல் காற்றில் கரியமில வாயு அதிகமாக கலந்துள்ளதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
- 1960 ஆம் ஆண்டை விட 3 மடங்கு கரியமில வாயு அதிகரித்துள்ளது.
- 2024ஆம் ஆண்டில் பசுமை வாயுக்கள் என அழைக்கப்படும் மீதேன், நைட்ரஸ் ஆக்ஸைடு போன்றவைகளும் அதிகமாக கலந்துள்ளன.
உறுப்பினராக தேர்வு
- ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் (UNHRC) உறுப்பினராக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது
- இந்தியா 7வது முறை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- UNHRC (United Nations Human Rights Council) – 15 மார்ச் 2006
- உறுப்பினர்கள் – 47 நாடுகள்
அனில் செளகான்
- Ready, Relevant and Resurgent II: Shaping a Future Ready Force என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.
கடல்சார் பயிற்சி

- தென்கொரியாவில் இந்தியா மற்றும் தென்கொரியா இடையிலான IN-ROKN கடல்சார் பயிற்சி நடைபெற்றுள்ளது.
சொற்கதிர்
- Jeep – ஈப்பு
கூடுதல் தகவல்கள்
- தேசிய கனிம ஆய்வுக் கொள்கை – 2016
- The National Critical Mineral Mission (NCMM) தேசிய முக்கியமான கனிமத் திட்டம் – 2025