Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th October 2025

Daily Current Affairs 

Here we have updated 18th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மாதவரம்

Vetri Study Center Current Affairs - Tamil Nadu Legislative Assembly

  • சென்னையிலுள்ள மாதவரத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் நிறுவ சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • கலைஞர் பல்கலைக்கழகம் கும்பகோணத்தில் நிறுவப்படுகிறது.

கடன் தொகை

  • தமிழ்நாட்டின் கடன் தொகை ரூ.9,29,956 கோடியாக மாறியுள்ளது.
  • தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் வரிபகிர்வு 32% அளவு குறைந்துள்ளதே இதற்கு காரணமாகும்.
  • 2015-16-ல் தமிழ்நாட்டின் கடன்தொகை ரூ.2,11,066 கோடி

குஜராத்

  • குஜராத் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதால் 16 அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளனர்.
  • குஜராத் சட்டமன்றம் 182 உறுப்பினர்களை கொண்டு இயங்குகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

  • 2026-ல் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 1872
  • முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு – 1881
  • நாட்டின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2011
  • 2021-ன் படி மக்கள் தொகை – 1,210,854,977
  • 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உள்ள ஆண்டு – 2026

சமுத்திர சக்தி 2025

  • இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான கடல்சார் பயிற்சியானது சமுத்திர சக்தி என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் (ஆந்திரப்பிரதேசம்) நடைபெறுகிறது.
  • இந்தியா சார்பில் INS கவரட்டி கப்பலும், இந்தோனேசியா சார்பில் KRI ஜான் லீ கப்பலும் கலந்து கொண்டது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியா & தென்கொரியா – IN-ROKN கடல்சார் பயிற்சி
  •  இந்தியா & ஜப்பான் – ஜிமெக்ஸ் (Jimex) கடல்சார் பயிற்சி
  • இந்தியா & ரஷ்யா – இந்திரா (INDRA) கடல்சார் பயிற்சி
  • இந்தியா & மலேசியா – சமுத்திர லக்ஸமனா (Samudra Laksamana) கடல்சார் பயிற்சி
  • இந்தியா & இலங்கை – SLINEX-2023 கடல்சார் பயிற்சி

பாஸ்போர்ட் தரவரிசை

Vetri Study Center Current Affairs - Passport

  • உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியா 85வது இடம் பிடித்துள்ளது.
  • கடந்த 2024 ஆண்டு 80வது இடத்தை பிடித்திருந்தது.
  • ஹென்லி நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • முதலிடம் – சிங்கப்பூர்
  • இரண்டாமிடம் – தென்கொரியா
  • மூன்றாமிடம் – ஜப்பான்

தொடர்புடைய செய்திகள்

  • பட்டினிக்குறியீடு 2025 – 102வது இடம்

சொற்கதிர்

  • Tractor – ஏருந்து

Related Links

Leave a Comment