Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th November 2025

Daily Current Affairs 

Here we have updated 18th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தியாகத் திருநாள் 

Vetri Study Center Current Affairs - V.O.C

  • கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.-யின் இறந்த தினமானது தியாகத் திருநாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பிறப்பு – 5 செப்டம்பர் 1872
  • சுதேசி நாவாய் சங்கம் – 1906
  • இயக்கிய கப்பல் – காலியா, லாவோ
  • ஆ.இரா.வெங்கடாசலபதி – திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908 (சாகித்ய அகாடமி விருது 2024)

பதவி நீட்டிப்பு

  • பொதுத்துறை நிறுவனங்கள் தேர்வு வாரிய (PESB) தலைவரான மல்லிகா சீனிவாசனின் பதவி ஓராண்டு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • இவர் டாஃபே நிறுவனத்தினத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
  • PESB (Public Enterprises Selection Board) – 1987

CII கூட்டாண்மை உச்சி மாநாடு

  • 2025ஆம் ஆண்டிற்கான CII கூட்டாண்மை உச்சி மாநாடானது விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுள்ளது.

கூட்டு விமானப் பயிற்சி

Vetri Study Center Current Affairs - Garuda

  • இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான கருடா கூட்டு விமானப் பயிற்சியானது பிரான்ஸில் நடைபெற்றது.

கூட்டு இராணுவப்பயிற்சி

  • இந்தியா மற்றும் யுனைடெட் கிங்டம் (UK) இடையேயான அஜய வாரியர் கூட்டு இராணுவப்பயிற்சியானது இராஜஸ்தானின் பிக்கானரில் நடைபெற்றது.

ஆழ்கடல் ஆய்வகம்

  • ஆழ்கடல் அறிவியல் மற்றும் கடல் உயிரி தொழில்நுட்பத்தினை மேம்படுத்த கடலுக்கடியில் இந்தியாவால் 6000 அடியில் ஆய்வகம் உருவாக்கப்பட உள்ளது.
  • 2047 ஆண்டுக்குள் இந்த ஆய்வகம் அமைக்கப்பட உள்ளது.
  • இது உலகின் மிக ஆழமான நீருக்கடியில் அமையும் ஆய்வகமாக அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தற்போது அமெரிக்காவின் அக்வாரிஸ்  ரீஃப் பேஸ் 19 மீ ஆழத்தில் உள்ளது.

கிருஷ்ணா குழு

  • டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தைப் பரிந்துரைப்பதற்க்காக பி.என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு 2017-ல் அமைக்கப்பட்டது.
  • டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023-ல் உருவாக்கப்பட்டது.

கோவா

  • இந்தியாவில் சைபர் குற்றங்களின் புகார்களுக்கு 100% நடவடிக்கை எடுத்த முதல் மாநிலமாக கோவா திகழ்கிறது.
  • சைபர் குற்றங்கள் புகார் எண் – 1930

கிரண் தேசாய்

  • சோனியா மற்றும் சன்னியின் தனிமை என்ற புத்தகத்தினை கிரண்தேசாய் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • The Inheritance of Loss என்ற நூலிற்காக 2007-ல் புக்கர் பரிசினை வென்றுள்ளார்.
  • 1998-ல் கிரண்தேசாய் எழுதிய Hullabaloo in the Guava Orchard, Faber and Faber பெட்டி ட்ராஸ்க் விருதினை வென்றுள்ளது.

டாம் குருஸ்

Vetri Study Center Current Affairs - Tom Cruise

  • கெளரவ ஆஸ்கார் விருதானது டாம் குருஸ்-ற்கு வழங்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பியா

  • 2027ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் சபைகளின் காலநிலை உச்சி மாநாடானது எத்தியோப்பியாவில் நடைபெற உள்ளது.

ஆசிய வில்வித்தை போட்டி 2025

  • வங்கதேசத்தில் ஆசிய வில்வித்தை போட்டி 2025 நடைபெறுகிறது.

முக்கிய தினம்

தேசிய பத்திரிக்கை தினம் (National Press Day) – நவம்பர் 16

  • இந்திய பத்திரிக்கையாளர் கவுன்சில் சட்டம் 1965-ன் கீழ் இந்திய பத்திரிக்கையாளர் கவுன்சில் 16 நவம்பர் 1966 அமைக்கபட்டதன் நினைவாக கடைபிடிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்கள்

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் (Amoebic meningoencephalitis)

  • அசுத்தமான நீரில் உள்ள அமீபாவால் மூளையில் ஏற்படும் அழற்சி – கேரளா

Related Links

Leave a Comment