Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 18th September 2025

Daily Current Affairs 

Here we have updated 18th September current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நடுகல் கண்டுபிடிப்பு

  • கிருஷ்ணகிரி மாவட்டத்தின், அலேகுந்தாணி கிராமத்தில் புலிகுத்திபட்டான் நடுகலொன்று கண்டறியப்பட்டுள்ளது.
  • இது 12ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

பூம்புகார் மாநில விருதுகள்

  • 18 கைவினைக் கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி

  • யுனஸ்கோவின் தற்காலிக உலக பாரம்பரிய பட்டியலில் திருப்பதி சேர்க்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் மேலும் ஆறு தளங்களும் இணைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • யுனஸ்கோவின் இசை நகரம் – குவாலியர்
  • இந்தியாவின் முதல் யுனஸ்கோ இலக்கிய நகரம் – கோழிக்கோடு

புதிய கடற்படை தளம்

  • இந்திய கடற்படையின் தகவல் தொடர்பு உள்கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்காக ஐ.என்.எஸ் ஆரவல்லி கடற்படை தளமானது ஹரியானாவின் குருகிராம் நகரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தோல் பொருட்கள்

  • இந்தியாவில் கடந்த 2024-ல் ரூ.62,000 கோடி அளவில் காலணி மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் 30%த்தை கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு இந்தியாவின் தோல் பொருட்கள் தயாரிப்பில் 70%த்தை கொண்டுள்ளது.
  • இந்தியாவில் தோல் பொருள்கள் ஏற்றுமதியில் வேலூர் மாவட்டம் முதன்மையாக திகழ்கிறது.
  • தோல் உற்பத்தியானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் பகுதிகளில் நடைபெறுகிறது.
  • பழுப்பு புரட்சி என்பது தோல் உற்பத்தியினை குறிக்கிறது.

ஜபாட் 2025

  • ரஷ்யா, பெலாரஸ் நாட்டுடன் இந்தியா இணைந்து ஜபாட் 2025 பயிற்சியை நடத்தியுள்ளது.
  • இப்பயிற்சியானது ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது.

கடலோர காவல்படை உச்சி மாநாடு

  • 4வது உலகளாவிய கடலோர காவல்படை உச்சிமாநாடனது இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்றுள்ளது.
  • 5வது உலகளாவிய கடலோர காவல்படை உச்சிமாநாடானது 2027-ல் சென்னையின் வைத்து நடைபெற உள்ளது.

வருண் சக்கரவர்த்தி

  • டி 20 பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி முதலிடம் பிடித்துள்ளார்.

முக்கிய தினம்

ஹைதரபாத் விடுதலை தினம் (Hyderabad Liberation Day) – செப்டம்பர் 17

  • ஆபரேஷன் போலா மூலம் ஹைதரபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட நாளின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

பயணிகள் சேவை தினம் (Yatri  Seva Diwas) – செப்டம்பர் 18

உலக மூங்கில் தினம் (World Bamboo Day) – செப்டம்பர் 18

கூடுதல் செய்திகள்

சொற்கதிர்

  • Golf – குழிப்பந்தாட்டம்
  • தேசிய கையெழுத்துப்பிரதி இயக்கம் – 2003
  • ஞான பாரத திட்டம் – 2025

Related Links

Leave a Comment