Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st November 2025

Daily Current Affairs 

Here we have updated 1st November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சதய விழா

Vetri Study Center Current Affairs - Raja Raja Cholan

  • அக்டோபர் 31-ல் இராஜராஜ சோழனின் 1040ஆம் ஆண்டு சதயவிழா தொடங்கப்பட்டுள்ளது
  • இவ்விழாவானது தஞ்சை பெரிய கோவிலில் வைத்து நடைபெறுகிறது.

இலக்கு நிர்ணயம்

  • 2070ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய இலக்கினை (கரியமில வாயு சமநிலை) அடைய  இலக்காக தமிழ்நாடு நிர்ணயித்துள்ளது.
  • நிகர பூஜ்ஜிய உமிழ்வு என்பது வளிமண்டலத்தில் உள்ள பசுமை இல்ல வாயுக்களின் அளவைக் அதிகரிக்காமல் செய்யாமல் இருப்பதை குறிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

நிகர பூஜ்ஜிய இலக்கு

  • இந்தியா – 2030ஆம் ஆண்டுக்குள் 50% வரை குறைத்தல்
  • இந்தியா – 2070ஆம் ஆண்டுக்குள் நடுநிலையடைதல்
  • உலக நாடுகள் – 2050ஆம் ஆண்டுக்குள் நடுநிலையடைதல்

விண்ட் இந்தியா விருது

  • சென்னையில் நடைபெற்ற விண்ட் இந்தியா 2025 மாநட்டில் தமிழ்நாட்டிற்கு விண்ட் இந்தியா விருது (Wind India) வழங்கப்பட்டுள்ளது.
  • காற்றாலை மற்றும் எரிசக்தி முயற்சிகளில் சிறந்த பங்களிப்பினை வழங்கியதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

புதுமைபித்தன் நினைவு விருது 2024

  • கடற்கரை காற்றாலை மின்உற்பத்தி திட்டமானது தமிழ்நாடு, குஜராத் மாநிலங்களில் ரூ.7500 கோடி முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது.
  • தமிழ்நாட்டின் தனுஷ்கோடி என்ற இடத்தில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

காற்றாலை உற்பத்தி

  • தமிழ்நாடு – 2வது இடம்
  • இந்தியா – 4வது இடம்

புதுமைபித்தன் நினைவு விருது 2024

  • அமெரிக்க தமிழர்களின் விளக்கு இலக்கிய அமைப்பு சார்பில் வழங்படும் புதுமைபித்தன் நினைவு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆண்டிற்கான விருதினை பெற உள்ளவர்கள்

  • பேராசிரியர் தமிழவன்
  • எம்.கோபாலகிருஷ்ணன்
  • ஓவியர் சந்துரு

மொழிவாரி மாநிலங்கள்

  • நவம்பர் 1-ல் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் போன்ற மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

1956ல் உருவாக்கப்பட்ட மாநிலங்கள்

  • தமிழ்நாடு (மதராஸ் மாநிலம்)
  • ஆந்திரப் பிரதேசம்
  • கர்நாடகா (மைசூர் மாநிலம்)
  • கேரளா
  • மத்தியப் பிரதேசம்
  • பஞ்சாப்

1966ல் உருவாக்கப்பட்ட மாநிலங்கள்

  • ஹரியானா (பஞ்சாபிலிருந்து பிரிக்கப்பட்டது)

2000ல் உருவாக்கப்பட்ட மாநிலம்

  • சத்தீஸ்கர் (மத்தியப்பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது)

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பட்டியல்

  • முதலிடம் – ராஜஸ்தான்
  • இரண்டாமிடம் – குஜராத்
  • மூன்றாமிடம் – கர்நாடகம்
  • நான்காமிடம் – தமிழ்நாடு

தொடர்புடைய செய்திகள்

  • உலகளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பட்டியலில் இந்தியா 4வது இடத்தினை பிடித்துள்ளது.

தேசிய பாரத திருவிழா 2025

Vetri Study Center Current Affairs - National Unity Day

  • இந்தியாவின் இரும்பு மனிதான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் விழாவானது 2025ஆம் ஆண்டில் தேசிய பாரத திருவிழா விழாவாக கொண்டாடப்பட உள்ளது.
  • இவ்விழா நவம்பர் 15வரை கொண்டாடப்பட உள்ளது.
  • ஆண்டுதோறும் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31ஆனது தேசிய ஒற்றுமை தினமாக (Rashtriya Ekta Diwas) கொண்டாடப்படுகிறது.

மின் உற்பத்தி திறன்

  • இந்தியாவின் மின் உற்பத்தி திறன் 500 ஜிகா வாட்டாக அதிகரித்துள்ளது.
  • இதில் புதுப்பிக்க தக்க எரிசக்தி பிரிவு 50% பங்களிப்பினை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2014-ல் இந்தியாவின் மின் உற்பத்தி திறன் 249 ஜிகா வாட்டாக இருந்துள்ளது.

தலைமை நீதிபதி

  • உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக (53வது) சூர்யகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நவம்பர் 24-ல் பதவியேற்க உள்ளார்.
  • இவர் அரசியலமைப்பு விதி 124 (2)ன் படி நியமிக்கப்பட்டுள்ளார்.

அணு ஆயுதங்கள் பட்டியல்

  • உலகில் அதிக அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது.
  • 2வது இடம் – அமெரிக்கா
  • 6வது இடம் – இந்தியா
  • 7வது இடம் – பாகிஸ்தான்

அணு ஆயுத சோதனை

  • முன்னாள் அமெரிக்க அதிபர் அணு ஆயுத சோதனைக்கு தடை விதித்திருந்த நிலையில் அமெரிக்கா புதியதாக அணு ஆயுத சோதனை நடத்த உள்ளது.
  • கடைசியாக 23 செப்டம்பர் 1992-ல் அமெரிக்கா அணு ஆயுத சோதனையை டிவைடர் என்ற பெயரில் நவாடா சோதனை தளத்தில் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 1998ஆம் ஆண்டிற்கு பிறகு எந்த நாடும் அணு ஆயுத வெடிப்பு சோதனையை நடத்தவில்லை (வடகொரியாவை தவிர).

கிராண்ட் மாஸ்டர்

Vetri Study Center Current Affairs - Ilamparithi

  • இந்தியாவின் 90வது கிராண்ட் மாஸ்டராக தமிழ்நாட்டினைச் சேர்ந்த இளம்பரிதி உருவெடுத்துள்ளார்
  • இவர் தமிழகத்தின் 35வது கிராண்ட் மாஸ்டர் ஆவார்.

தொடர்புடைய செய்திகள்

  • 89வது கிராண்மாஸ்டர் – ரோகித் கிருஷ்ணா
  • 88வது கிராண்மாஸ்டர் – திவ்யா தேஷ்முக்

கிளட்ச் செஸ் போட்டி

  • அமெரிக்காவில் நடைபெற்ற கிளட்ச் செஸ் போட்டியில் மேக்னஸ் கார்ல்சென் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

முக்கிய தினம்

ஹரியானா மாநில தினம்

  • 1966ஆம் ஆண்டு பஞ்சாபிலிருந்து ஹரியானா பிரிக்கப்பட்டதன் நினைவாக நவம்பர் 1  கொண்டாடப்படுகிறது.

சத்தீஸ்கர் மாநில தினம்

  • 2000ஆம் ஆண்டு மத்தியப்பிரதேசத்திலிருந்து சத்தீஸ்கர் பிரிக்கப்பட்டதன் நினைவாக நவம்பர் 1  கொண்டாடப்படுகிறது.

கூடுதல் செய்திகள்

  • மாநில மறுசீரமைப்புச் சட்டம் – 1956

Related Links

Leave a Comment