Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 2nd and 3rd November

Daily Current Affairs 

Here we have updated 2nd and 3rd November October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வள்ளலார் சர்வதேச மாநாடு

  • சென்னையில்  வள்ளலார் சர்வதேச மாநாடு நடைபெறவிருக்கிறது.

ட்ரெக் தமிழ்நாடு

Vetri Study Center Current Affairs - Trek Tamil Nadu

  • தமிழ்நாட்டில் வனப்பகுதிகளில் மலையேற்றத்தினை ஊக்குவிக்க தமிழக அரசு ட்ரெக் தமிழ்நாடு (Trek Tamilnadu) திட்டத்தினை துவங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 40 வழிப்பாதைகள் உள்ளன.

சுத்தமில்லா நகரம்

  • இந்தியாவின் சுத்தமில்லா நகரங்கள் பட்டியலில் மதுரை, லூர்தியானா, சென்னை முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • 2025ஆம் ஆண்டிற்கான தூய்மையான நகரங்கள் கண்கெடுப்பு (Swachh Survekahan 2025) மூலம் இத்தகவல்  தரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தூய்மையான நகரம் – இந்தூர்
  • தூய்மையான காற்று நகரம் – திருநெல்வேலி

முத்தரசி

  • தமிழ்நாடு காவல்துறையின் முதல் செய்தித் தொடர்பாளராக முத்தரசி நியமிக்கபட்டுள்ளார்.

அருணிமா குமார்

  • இங்கிலாந்து நாட்டில் வழங்கப்படும் உயரிய விருதான பிரிட்டிஷ் எம்பயர் விருதானது குச்சிப்புடி கலைஞரான அருணிமா குமார் (டெல்லி)-க்கு வழங்கப்பட்டுள்ளது.

லக்னோ

Vetri Study Center Current Affairs - Lucknow

  • யுனஸ்கோ லக்னோவினை சமையல் நகரமென அங்கீகரித்துள்ளது.
  • ஏற்கனவே ஹைதரபாத் சமையல் நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • குவாலியர், வாரணாசி, சென்னை – இசைநகரங்கள்
  • மும்பை – திரைப்பட நகரம்
  • ஸ்ரீநகர், ஜெயப்பூர் – கைவினைப்பொருட்கள் மற்றும் நாட்டுபுறக்கலைகளுக்கான நகரங்கள்

நூற்றாண்டு விழா

  • ஆரிய சமாஜம் தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதனை கொண்டாட சர்வதேச ஆரிய சம்மேளனம் நிகழ்ச்சி தில்லியில் நடத்தப்பட்டது.
  • மேலும் இவ்விழாவில் தயானந்த சரஸ்வதியின் 200வது பிறந்த நாள் விழாவும் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆரிய சமாஜம் – 1875
  • தொடங்கியவர் – தயானந்த சரஸ்வதி (12.02.1824 – 30.10.1883)
  • தலமையகம் –  லாகூர் (முதன்முதலில் பம்பாயில்)
  • குறிக்கோள் – வேதங்களை நோக்கி செல்
  • சுத்திய இயக்கம் தொடக்கம்

அரிவாள் செல் இரத்தசோகை

  • பழங்குடியினர் மற்றும் பாதிக்கக்கூடிய மக்களிடையே அரிவாள் செல் இரத்த சோகையை 2047க்குள் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய அரிவாள் செல் இரத்தசோகை ஒழிப்பு இயக்கம் – 1 ஜூலை 2023
  • உலக அரிவாள் செல் தினம் (World Sickle Cell Day) – ஜூன் 19

APEC உச்சிமாநாடு

  • தென்கொரியாவின் கியோங்ஜூவில் வைத்து APEC உச்சி மாநாடு நடைபெற்றுள்ளது.
  • இது 32வது மாநாடு ஆகும்.

அருங்காட்சியகம்

  • எகிப்து நாட்டில் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது.

ஐஸ்லாந்து

  • குளிர்காலத்தையும் தாங்கும திறன் குலிசெட்டா அன்யூலாட்டா வகையைச் சேர்ந்த கொசு கண்டறியப்பட்டுள்ளது.

ICC மகளிர் உலகக் கோப்பை 2025

Vetri Study Center Current Affairs - ICC Women's Cricket World Cup title

  • பெண்களுக்கான 50 ஓவர்கள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
  • இறுதிபோட்டியானது தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையே நடைபெற்றுள்ளது.

FIDE சதுரங்க உலகக்கோப்பை

  • FIDE நடத்தும் சதுரங்க உலகக்கோப்பை 2025ற்கு விஸ்வநாதன் ஆனந்த் பெயர் இடப்பட்டுள்ளது.

ரோஹன்  போபண்ணா

  • இந்திய டென்னிஸ் வீரரான ரோகன் போபண்ணா தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
  • கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் வயதான வீரர் (43வது வயதில்) இவராவார்

முக்கிய தினம்

சர்வதேச உயிர்க்கோள காப்பக தினம் (International Day for Biosphere Reserves ) – நவம்பர் 3

  • இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பக எண்ணிக்கை – 18
  • யுன்ஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்ட உயிர்க்கோள காப்பக எண்ணிக்கை – 13

Related Links

Leave a Comment