Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 1st October 2025

Daily Current Affairs 

Here we have updated 1st October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கடல்சார் உருவகப்படுத்துதல் மையம்

  • சென்னையிலுள்ள AMET பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் முதல் கடல்சார் உருவகப்படுத்துதுல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்த மையமானது கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக்காக தொடங்கப்பட்டுள்ளது.
  • AMET (Academy of Maritime Education and Training) – 1992

உயிர்கோள காப்பகம்

  • இமாச்சலப்பிரதேசத்திலுள்ள குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகத்தினை யுனெஸ்கோ உலக உயிர்கோளக் காப்பக வலையமைப்பில் சேர்த்துள்ளது.
  • இந்த வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள 13வது உயிர்கோளக் காப்பகமாக குளிர் பாலைவன உயிர்க்கோளக் காப்பகம் மாறியுள்ளது.
  • கிப்பர் வனவிலங்கு சரணாயலம், பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா, ஆல்பைன் புல்வெளிகள் ஆகியவை இதில் அமைந்துள்ளன.
  • பனிச்சிறுத்தை, இமயமலை ஐபெக்ஸ் உளளிட்ட வனவிலங்குகளும் இங்கு காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • உலக உயிர்கோள காப்பக திட்டம் – 1971
  • இந்தியாவிலுள்ள உயிர்க்கோள காப்பகம் 18ஆக உள்ளது.
  • தேசிய உயிர்கோள காப்பக திட்டம் – 1986
  • இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் – நீலகிரி (1986)
  • இந்தியாவின் மிகப்பெரிய உயிர்க்கோள காப்பகம் – கட்ச் (குஜராத்)
  • இந்தியாவின் மிகப்பெரிய உயிர்க்கோள காப்பகம் – திப்ரு சாய்கோவா (அசாம்)

ராம்சார்தளங்கள்

  • பீகாரிலுள்ள உதய்பூர் ஜீல், கோகுல் ஜலஷாய் ஆகியவை இந்தியாவின் ராம்சார் தளங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
  • இந்த இரு இடங்களையும் இப்பட்டியலில் இணைத்தன் மூலம் ராம்சார் தளங்கள் எண்ணிக்கை 93ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ராம்சார் ஒப்பந்தம் – 2 பிப்ரவரி 1971
  • சர்வதேச ஈரநில தினம் – பிப்ரவரி 2
  • உலக ராம்சார் தளங்கள் அதிகம் உள்ள நாடு – UK (176 இடங்கள்)
  • ஆசியாவில் ராம்சார் தளங்கள் அதிகம் உள்ள நாடு – இந்தியா (93 இடங்கள், உலக அளவில் 3வது இடம்)
  • இந்தியாவில் ராம்சார் தளங்கள் அதிகம் உள்ள மாநிலம் – தமிழ்நாடு (20 இடங்கள்)

புதிய இரயில் வழித்தடம்

  • இந்தியா மற்றும் பூடான் இடைய முதல் புதிய ரயில் வழித்தடம் அமைக்கபட உள்ளது.

தேசிய மத்தியஸ்த மாநாடு

  • இரண்டாவது தேசிய மத்தியஸ்த மாநாடானது ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்றது.

மனிஷா ரமேஷ்

  • ஒரே இதயம், ஒரே உலகம் என்ற நூலினை மனிஷா ரமேஷ் எழுதியுள்ளார்.

முக்கிய தினம்

Vetri Study Center Current Affairs - International Day of older Persons

சர்வதேச முதியோர் தினம் (International Day of older Persons) – அக்டோபர் 1

சர்வதேச காபி தினம் (International Coffee Day) – அக்டோபர் 1

  • காபி உற்பத்தி முதலிடம் பிடித்துள்ள நாடு – பிரேசில்
  • காபி உற்பத்தி இந்தியா – 7வது இடம்

உலக சைவ தினம் (World Vegetarian Day) – அக்டோபர் 1

Related Links

Leave a Comment