Daily Current Affairs
Here we have updated 20th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இயற்கை வேளாண் மாநாடு
- கோயம்புத்தூரில் நடைபெறும் இயற்கை வேளாண் மாநாட்டினை தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு நடத்துகிறது.
- பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்திற்காக 18 ஆயிரம் கோடி உதவித்தொகை விடுவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- PM Kisan (Prime Minister Kisan Samman Nidhi) – 24 பிப்ரவரி 2019
- இத்திட்டத்திற்கு கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது.
உதவித்தொகை
- SC, ST மாணவர்கள் வெளிநாட்டில் பயிலுவதற்கான அண்ணல் அம்பேத்கர் வெளிநாட்டு கல்வி உதவித்தொகை ரூ.65 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- பயனாளிகளின் எண்ணிக்கை 213ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம்
- ஆதரவற்ற குழந்தைகள், மனநல காப்பகத்தில் சிகிச்சை பெறும் குழந்தைகள் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தில் இணைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் காப்பீடு திட்டம் – 23 ஜூலை 2009
- முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் – ஜூலை 2011
ஹேமலதா
- தமிழ்நாடு லோக் ஆயுக்தாவின் நீதித்துறை உறுப்பினராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹேமலதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பதவிக்காலம் – 5 ஆண்டுகள் / 70 வயது
- தமிழ்நாடு – லோக் ஆயுக்தா சட்டம் – 2018
தொடர்புடைய செய்திகள்
- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டம் – 2013
மெட்ரோ இரயில் சேவை
- சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட சேவையானது 118.9 கி.மீ. நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் செயல்படுத்தப்பட உள்ளது.
- மதுரை, கோயம்புத்தூரில் மெட்ரோ இரயில் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சென்னை மெட்ரோ முதல் கட்ட சேவையானது 54 கி.மீ. நீளத்தில் செயல்படுத்தப்பட்டது.
- சென்னை மெட்ரோ இரயில் திட்டம் – 2015
- இந்தியா 24 நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவையை அறிமுகம் செய்து உலகின் 3வது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பினை கொண்டுள்ளது.
டெலி மானஸ் திட்டம்
- டெலி மானஸ் திட்டத்தில் 20 லட்சத்திற்கு மேற்பட்டோர் பயனடைந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
- டெலிமானஸ் திட்டம் – அக்டோபர் 2022
- உதவி எண்கள் – 14416, 1800 891 4476
மகாராஷ்டிரா
- மும்பையில் உள்ள மாண்டலே மெட்ரோ பணிமனை ஆசியாவின் மிகப்பெரிய மெட்ரோ பணிமனையாக திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் மெட்ரோ ரயில் சேவை – கொல்கத்தா (1984)
- முதல் நீர் மெட்ரோ – கொச்சி
- முதல் நீருக்கடியில் மெட்ரோ – கொல்கத்தா
காலநிலை மாற்ற செயல் திறன் குறியீடு 2024
- இந்தியா காலநிலை மற்றும் செயல் திறன் குறியீடு 2024-ல் 61.31 புள்ளிகளுடன் 23வது இடம் பிடித்துள்ளது.
- 4வது இடம் – டென்மார்க்
- கடைசி இடம் – சவுதி அரேபியா
தொடர்புடைய செய்திகள்
- காலநிலை ஆபத்து குறியீடு 2024-ல் 9வது இடம் பிடித்துள்ளது.
SCO தலைவர்கள் கூட்டம்

- SCO தலைவர்கள் கூட்டம் ரஷ்யாவில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- SCO (Shanghai Cooperation Organization) – 15 ஜூன் 2001
பிக்கிள் பால் லீக் தொடர்
- புதுதில்லியில் பிக்கிள் பால் லீக் தொடர் நடைபெற உள்ளது.
- இப்போட்டியினை இந்தியா முதன் முறையாக நடத்த உள்ளது.
உலக டென்னிஸ் லீக் தொடர்
- பெங்களூரில் வைத்து உலக டென்னிஸ் லீக் தொடரினை முதன் முறையாக இந்தியா நடத்த உள்ளது.
முக்கிய தினம்
உலக குழந்தைகள் தினம் (World Children’s Day) – நவம்பர் 20
- தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) – நவம்பர் 14
உலக பாரம்பரிய வாரம் (World Heritage Week) – நவம்பர் 19 – 25
அகில இந்திய கூட்டுறவு வாரம் (All India Cooperative Week) – நவம்பர் 14 – 20
- சர்வதேச கூட்டுறவு ஆண்டு – 2025