Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 21st November 2025

Daily Current Affairs 

Here we have updated 21st November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

உடல் உறுப்பு தானம்

Vetri Study Center Current Affairs - Heart Transplant

  • உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் உடலடக்கம் செய்யப்படும்போது முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுமென 23 செப்டம்பர் 2023-ல் தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் – 2008

இலக்கிய மாமணி

இலக்கிய எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருதினை தமிழக வளர்ச்சி துறை வழங்கியுள்ளது.

  • மரபுத்தமிழ் பிரிவு – ஞானசுந்தரம்
  • ஆய்வுத்தமிழ் பிரிவு – காமராஜ்
  • படைப்புத்தமிழ் பிரிவு – சோமசுந்தரம்

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தினம் – பிப்ரவரி 19 (உ.வே.சா பிறந்த தினம்)

டிஜி அறிவு

  • தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து டிஜி அறிவு திட்டத்தினை தொடங்கியுள்ளன.
  • இத்திட்டமானது காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 10 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் STEM (Science, Technology, Engineering, Medical)-ஐ மேம்படுத்தப்பட உள்ளது.

சிறார் அறிவியல் பூங்கா

  • ரூ.80 லட்சம் செலவில் சென்னை, கோட்டூர்புரத்தில் சிறார் அறிவியல் பூங்கா நிறுவப்பட்டுள்ளது.

கடன் வரம்பு

  • கிசான் கடன் அட்டை மூலம் பெறும் கடன் தொகை உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • கிசான் கடன் அட்டை (Kisan Credit Card) – ஆகஸ்ட் 1998

தொடர்புடைய செய்திகள்

  • பி.எம். கிசான் சம்மான் நிதித்திட்டம் (P.M.Kisan Samman Nidhi) – 24 பிப்ரவரி 2019 (ஆண்டுக்கு 6000 உதவித்தொகை)
  • பிரதமரின் ஃபசல் பீமா யோஜனா (Pradhan Mantri Fasal Bima Yojana) – 18 பிப்ரவரி 2016 (பயிர் சேதத்திற்கு நிதியுதவி)
  • கிசான் அழைப்பு மையங்கள் – 21 ஜனவரி 2004

மிஷல் பசேலட்

Vetri Study Center Current Affairs - Michelle Bachelet

  • சிலியின் முன்னாள் அதிபரான மிஷல் பசேலெட்க்கு (Michelle Bachelet) அமைதி மற்றும் ஆயுதக் குறைப்பு வளர்ச்சிக்கான இந்திரா காந்தி விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில் சேவை

  • படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் சேவை 2025 டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • வந்தே பாரத் ரயில் திட்டம் – 2018
  • முதல் வந்தே பாரத் ரயில் சேவை – 2019 (டெல்லி-வாரணாசி)

புதுதில்லி

  • கொழும்பு பாதுகாப்பு மாநாடு (CSC) அமைப்பின் உறுப்பு நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மாநாடு புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பின் உறுப்பினர்கள்

  • இந்தியா
  • மாலத்தீவு
  • மொரிஷியஸ்
  • இலங்கை
  • வங்கதேசம்

ஹைதரபாத்

  • நிதி தணிக்கைக்கான சிறப்பு மையம் ஹைதரபாத்தில் தொடங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தலைமை கணக்கு தணிக்கையாளர்

  • விதி – 148
  • முதல் தலைமை கணக்கு தணிக்கையாளர் – நரஹரி ராவ்
  • தற்போதைய தலைமை கணக்கு தணிக்கையாளர் – சஞ்சய்மூர்த்தி

செமரு எரிமலை

  • இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள செமரு எரிமலை வெடித்து சிறதறியதில் 50 நபர்கள் இறந்துள்ளனர்.

ரோஜர் பெடரர்

Vetri Study Center Current Affairs - Roger Federer

  • இன்டர்நேஷனல் டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்மில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

உலக தொலைக்காட்சி தினம் (World Television Day) – நவம்பர் 21

உலக மீன்வள தினம் (World Fisheries Day) – நவம்பர் 21

கூடுதல் செய்திகள்

  • செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana) – 2015

Related Links

Leave a Comment