Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd and 24th November

Daily Current Affairs 

Here we have updated 23rd and 24th November current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கருப்பைவாய் புற்றுநோய்

  • தமிழகத்தில் தர்மபுரி, பெரம்பலூர் மாவட்டங்களில் கருப்பைவாய் புற்றுநோய் அதிகமாக காணப்படுகிறது.
  • கருப்பைவாய் புற்றுநோய் – Human Papillomavirus (HPV)
  • இரண்டாமிடம் – அரியலூர்
  • மூன்றாமிடம் – சென்னை

விருது வழங்கல்

Vetri Study Center Current Affairs - Gentleman Driver

  • ஜென்டில்மேன் டிரைவர் 2025 விருதானது நடிகர் அஜித்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சென்யார் புயல்

  • வங்கக்கடலில் உருவாகும் புயலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடானது சென்யார் (Lion) என பெயர் வைத்துள்ளது.

சென்டினல் 6B

  • சென்டினல் 6B செயற்கைக்கோள் Space-X நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
  • பெருங்கடல்களை கண்காணிப்பதற்காக விண்ணில் செலுத்தப்பட்டது.

தேஜஸ் MK 1A

  • துபாய் விமானக் கண்காட்சியில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது.
  • தேஜஸ் MK 1A போர் விமானத்தினை HAL நிறுவனம் தயாரித்துள்ளது.
  • HAL – Hindustan Aeronautics Limited

ஆபரேசன் சைஹாக்

  • இணைய குற்றங்களை தடுப்பதற்கான ஆபரேசன் சைகாக்கின் கீழ் 877பேர் கைது செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவில் தொடங்கப்பட்ட சில ஆபரேஷன்

  • ஆபரேஷன் கவாச் (Operation Kawch) – போதைப்பொருள் பழக்கத்திலிருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் திட்டம் (டெல்லி காவல் துறை)
  • ஆபரேசன் கருணா – மேக்கா புயல் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவும் திட்டம்
  • ஆபரேஷன் கங்கா – ரஷ்யா உக்ரைன் போரில் போது உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்க
  • ஆபரேஷன் காவேரி – சூடான் ராணுவங்களுக்கிடையே போர் மூண்டபோது இந்தியர்களை மீட்கும் திட்டம்
  • ஆபரேஷன் தோஸ்த் – துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் இந்தியா உதவும் திட்டம்
  • ஆபரேஷன் சிந்தூர் – பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடிகாக தொடங்கப்பட்டது.
  • ஆபேரஷன் சங்கல்ப் – சத்திஸ்கரில் நக்ஸல்களை ஒழிக்க CRPFஆல் தொடங்கப்பட்ட திட்டம்
  • ஆபரேஷன் சிந்து – இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலில் இந்தியர்களை மீட்டல்
  • ஆபரேஷன் திராஷி – பயங்கரவாதிகளை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை

நிதி ஆயோக்

 

  • இந்தியாவிற்கான ஆஸ்பிரேஷன் பிளாக்குகளில் தண்ணீர் அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்ள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் புவிசார் குறியீடு – டார்ஜிலிங் தேயிலை
  • தமிழகத்தின் முதல் புவிசார் குறியீடு – காஞ்சிபுரம் பட்டு

புதிய தொழிலாளர் சட்டம்

21 நவம்பர் 2025-ல் புதிய நான்கு தொழிலாளர் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

  • தொழிலாளர் ஊதிய சட்டம் (2019)
  • தொழிற்துறை தொடர்பு சட்டம் (2020)
  • தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம் (2022)
  • தொழில்துறைக்கான பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணிச்சூழலுக்கான சட்டம் (2022)

UNFCCC COP 31

  • டர்க்கி நாட்டின் அன்டால்யா நகரில் UNFCCC COP 31 நடத்தப்பட உள்ளது.
  • UNFCCC – United Nations Climate Change Conference
  • UNFCCC COP 3oஆனது பிரேசிலின் பெலம் நகரில் நடத்தபட்டு வருகிறது.

சீனா

Vetri Study Center Current Affairs -China Floating Island

  • உலகின் மிதக்கும் செயற்கை தீவை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பார்வையற்றோர் மகளிர் கிரிக்கெட்

  • இலங்கையில் நடைபெற்ற பார்வையற்றோர் மகளிர் T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தீபிகா தலையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய தினம்

NCC நிறுவன தினம் (NCC Rising Day) – நவம்பர் 23

தேசிய முந்திரி தினம் (National Cashew Day) – நவம்பர் 23

பிபனோச்சி தினம் (Fibonacci Day) – நவம்பர் 23

Related Links

Leave a Comment