Daily Current Affairs
Here we have updated 23rd August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
காலை உணவுத்திட்டம்

- முதல்வர் காலை உணவுத் விரிவாக்க திட்டத்தின் சிறப்பு விருந்தினராக பஞ்சாப் முதல்வர் பவந்த் மான் கலந்து கொள்கிறார்.
- வருகிறன்ற ஆகஸ்ட் 26-ல் முதல்வர் காலை உணவுத் திட்டமானது நகர்ப்புற அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 15 செப்டம்பர் 2022 – காலை உணவுத் திட்டம்
- 25 ஆகஸ்ட் 2023 – 30922 பள்ளிகளுக்கு விரிவாக்கம்
- 15 ஜூலை 2024 – அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம்
ஆதார் அட்டை
- சட்ட விரோத குடியேற்றத்தினை தடுக்கும் வகையில் 18வயதிற்கு மேற்பட்டோருக்கு முதல் முறை ஆதார் வழங்கப்பட மாட்டாதென அசாம் மாநில முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- ஆதார் அட்டை 28 ஜனவரி 2009 முதல் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
GST விகிதம்
- புகையிலைப் பொருட்களுக்கு 40% GST விதிக்கப்பட உள்ளது.
கூட்ட நெரிசல் மேலாண்மை மசோதா
- கர்நாடாக மாநிலத்தில் கூட்ட நெரிசல் மேலாண்மை மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது.
அஜய் சிங்
- இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் புதிய தலைவராக அஜய் சிங் நியமிக்கபட்டுள்ளார்.
யானைகள் இறப்பு விகிதம்

- யானைகள் இறப்பு விகிதம் அதிகம் உள்ள நாடாக இலங்கை திகழ்கிறது.
- இலங்கையில் நிகழ்வாண்டில் 288 யானைகள் உயிர் இழந்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாட்டில் யானைள் 2,961ஆக உயர்ந்துள்ளது.
- உலக யானைகள் தினம் (World Elephant Day) – ஆகஸ்ட் 12
- இந்தியாவின் பாரம்பரிய விலங்காக 2010-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- யானைகள் திட்டம் – 1992
எல்லை வர்த்தகம் தொடக்கம்
- இந்தியா மற்றும் சீனா இடையேயான எல்லை தாண்டிய வர்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த வர்த்தகமானது உத்திரகாண்ட் மாநிலத்திலுள்ள லிபலேக் கணவாய் வழியே நடைபெறுகிறது.
யு20 உலக மல்யுத்த சாம்பியன் போட்டி
மகளிர் 72 கிலோ பிரிவு
- காஜல் – தங்கம்
மகளிர் 68 கிலோ பிரிவு
- தபஸ்யா – தங்கம்
- சிருஷ்டி – வெள்ளி
ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி
- ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டி பதக்கப்பட்டியல்
ஜுனியர் மகளிர் ஸ்கீட் போட்டி
- மான்ஸி ரகுவன்ஷி – தங்கம்
- யஷஸ்விரத்தோர் – வெள்ளி
ஜுனியர் ஆடவர் ஸ்கீட் போட்டி
- ஹர்மெஹர் சிங் – வெள்ளி
- ஜோதிராதித்ய சிங் – வெண்கலம்
10மீ ஏர் ரைஃபிள் ஆடவர் அணி பிரிவு
- இந்திய அணி (ஹிமானஷு தவான், அபிநவ் ஷா, நரேன் பிரணவ்) – தங்கம்
10மீ ஏர் ரைஃபிள் ஆடவர் பிரிவு
- அபிநவ் ஷா – தங்கம்
முக்கிய தினம்
தேசிய விண்வெளி தினம் (National Space Day) – ஆகஸ்ட் 23
- சந்திராயன் 3 நிலவின் தென் துருவத்தில் இறங்கிய நாளினை தேசிய விண்வெளி தினமாக கொண்டாடுகின்றன.