Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 23rd October 2025

Daily Current Affairs 

Here we have updated 23rd October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

விதிகள் திருத்தியமைப்பு

  • தமிழக அரசானது தமிழ்நாடு தொழிற்சாலை விதிகள் 1950-ஐ திருத்தம் செய்ய உள்ளது.
  • இதன் மூலம் ஆபத்தான வேலைகள் என கருதப்படும் 20 செயல்பாடுகளில் பெண்கள் வேலை செய்யலாம்.

பழைய வாகன அழிப்பு கொள்கை

Vetri Study Center Current Affairs - Old Vehicle Disposal Policy

  • தமிழ்நாட்டில் காற்று மாசுபாட்டினை குறைக்க பழைய வாகன அழிப்பு கொள்கையை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
  • பழைய வாகன அழிப்பு கொள்கை – 2021

PM  SHRI

  • PM SHRI திட்டத்தில் கேரளா இணைய உள்ளது.
  • PM  SHRI (Pradhan Mantri Schools for Rising India) – வளர்ந்துவரும் இந்தியாவிற்கான பிரதான் மந்திரி பள்ளிகள்
  • திட்டம் தொடங்கப்பட்ட நாள்: 7 செப்டம்பர் 2022

விமானப்படை

  • உலகில் சக்தி வாய்ந்த விமானப்படை கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
  • முதலிடம் – அமெரிக்கா
  • இரண்டாமிடம் – ரஷ்யா
  • நான்காமிடம் – சீனா

இலக்கு நிர்ணயம்

  • 200 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
  • இந்த அணு உலைகள் மூலம் கப்பல்களை இயக்க தேவைப்படும் மின்சாரம் உருவாக்கப்பட உள்ளது.
  • 2047ஆம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் 100 ஜிகாவாட் மின்சாரத்தை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வனபரப்பு

  • உலக வனபரப்பில் இந்தியா 9வது இடம் பிடித்துள்ளது

இந்தியாவின் TFR

Vetri Study Center Current Affairs - India's Fertility Rate

  • உலக மக்கள்தொகை நிலை 2025 அறிக்கையின் படி இந்தியாவின் மொத்த கருவுறுதல் நிலை 1.9 ஆக உள்ளது.
  • இந்த அறிக்கையை ஐக்கிய நாடுகளின் சபையின் உலக மக்கள்தொகை நிதியம் வெளியிட்டுள்ளது.

தாராளவாத ஜனநாயகக் கட்சி

  • ஜப்பானின் முதல் பெண் பிரதமராக தாராளவாத ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சனே தகைக்சி பதவி ஏற்றுள்ளார்.

PRSS-2 செயற்கைக்கோள்

  • அண்மையில் பாகிஸ்தான் நாடானது PRSS-2 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது.
  • PRSS – Pakistan Remote Sensing Satellite
  • Lijian-1 Y8 ராக்கெட் மூலம் சீனாவின் இரு செயற்கைகோளும், PRSS-2 செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • கடந்த ஜனவரியில் PRSS-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • கடந்த ஜூலையில் PRSC-EO1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.

FIDE செஸ் உலகக்கோப்பை 2025

  • கோவாவில் FIDE செஸ் உலகக் கோப்பை 2025 நடைபெற உள்ளது.
  • இதற்கான இலச்சினை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
  • தலேர் மெகஹந்தி இதற்கான பாடலினை பாடியுள்ளார்.

வெள்ளிப்பதக்கம்

Vetri Study Center Current Affairs - Tanvi Sharma

  • அசாமில் நடைபெற்ற உலக ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவினைச் சேர்ந்த தன்வி சர்மா வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
  • தாய்லாந்தின் அன்யாபட் பிச்சிட்பிரீச்சாஸ் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

டென்னிஸ் போட்டி

  • ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் கனடாவின் லெய்லா பெர்னாண்டஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • சீனாவில் நடைபெற்ற WUDA 500 டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானின் எலனா ரைகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

முக்கிய தினம்

சர்வதேச பனிச்சிறுத்தைகள் தினம் (International Snow Leopard Day) – அக்டோபர் 23

மோல் தினம் (Mole Day) – அக்டோபர் 23

சொற்கதிர்

  • Non Stop Bus – இடை நில்லாப் பேருந்து

கூடுதல் தகவல்கள்

  • தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சட்டம் – 1982
  • தேசிய கல்விக் கொள்கை – 2020

Related Links

Leave a Comment