Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 24th and 25th October

Daily Current Affairs 

Here we have updated 24th and 25th October current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அரசு நுண்கலை கல்லூரி

  • 1850ல் அலெக்சாண்டர் ஹண்டர் என்பவரால் எழும்பூரில் நிறுவப்பட்ட அரசு நுண்கலை கல்லூரி தனது 175வது ஆண்டு விழாவினை கொண்டாடியுள்ளது.
  • தொடக்கத்தில் மெட்ராஸ் கலைப்பள்ளி என அழைக்கப்பட்டது.

புயல் உருவாதல்

Vetri Study Center Current Affairs - montha cyclone

  • வங்கக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு Montha என பெயர் இடப்பட்டுள்ளது.

சென்னை

  • வெள்ள அபாயத்தை முன்கூட்டியே கணிக்க உதவும் தொழில் நுட்பமான நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடம் சார்ந்த முடிவெடுப்பு ஆதரவு அமைப்பானது சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் முதல் நிகழ்நேர வெள்ள முன்னறிவிப்பு மற்றும் இடம் சார்ந்த முடிவெடுப்பு ஆதரவு அமைப்பாக கருதப்படுகிறது.

வைக்கம் விருது 2025

  • சமூக நீதிக்காக வழங்கப்படும் வைக்கம் விருதானது அமெரிக்காவினை மையமாக கொண்ட தேன்மொழி செளந்தரராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலவச உணவு திட்டம்

  • தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.

நீரஜ் சோப்ரா

  • இந்திய ராணுவத்தின் கெளரவ பதவியான லெப்டினட் கர்னல் பதவி நீரஜ் சோப்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதி அதிகரிப்பு

  • வருடாந்திர வனப்பகுதி அதிகரிப்பில் சீனா, ரஷ்யா, இந்தியா முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • உலகளாவிய வன பரப்பில் ரஷ்யா முதலிடம் பிடித்துள்ளது.
  • வனபரப்பில் இந்தியா 9வது இடம் பிடித்துள்ளது.
  • இந்திய வனப்பரப்பு 25.17% உள்ளதாகவும் இந்திய வன நிலை அறிக்கை 2023 உள்ளதாக தெரிவித்துள்ளது.
  • இந்திய வனப்பரப்பினை 33%மாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

கேரளா

  • கேரள மாநிலமானது முற்றிலும் தீவிர வறுமை இல்லாத மாநிலமாக மாற உள்ளது.
  • இதன் மூலம் இந்த இலக்கை எட்டும் முதல் மாநிலம் என்ற பெருமையை பெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் பல பரிமாண வறுமைக்கோடு – 11.28%
  • தமிழ்நாடு பல பரிமாண வறுமைக்கோடு – 2.20%

புதுதில்லி

  • வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் புதுமை மாநாடு புதுதில்லியில் நடைபெற உள்ளது.

ஆசியான்-இந்தியா மாநாடு

Vetri Study Center Current Affairs - ASEAN-India

  • ஆசியான்-இந்தியா மாநாடானது மலேசியாவில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆசியான் (ASIAN) அமைப்பு – 8 ஆகஸ்ட் 1967
  • தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (Association of Southeast Asian Nations)

சகாரோவ் விருது

  • ஐரோப்பாவின் முக்கிய விருதான சக்ரோவ் மனித உரிமைகள் விருதானது ஆண்ட்ரெஜ் போக்ஸோபட் மற்றும் எம்சியா அமக்லோபெல் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சக்ரோவ் மனித உரிமைகள் விருதானது 1988 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

ChatGPT அட்லஸ்

  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் வலை உலாவியான (Web Browser) ChatGPT அட்லஸ் Open AIஆல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் அகாடமி புத்தக விருது 2025

  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனில் அம்ரித் என்பவரின் The Burning Earth: An Environmental History of the Last 500 Years என்ற புத்தகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

ராஜ் சுக்லா

Vetri Study Center Current Affairs - Raj Shukla

  • இந்திய ராணுவத்தின் முன்னாள் லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் சுக்லா என்பவரால் Civil-Military Fusion as a Metric of National Power and Comprehensive Security என்ற புத்தகத்தினை எழுதியுள்ளார்.

APEC உச்சி மாநாடு

  • ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாடானது தென்கொரியாவில் நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • APEC (Asia-Pacific Economic Cooperation) – 1989
  • உறுப்பினர்கள் – 21 நாடுகள்

ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி

  • பக்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025-ல் இந்திய மகளிர் அணி தங்கம் வென்றுள்ளது.
  • இந்த அணிக்கு தமிழ்நாட்டினைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் துணைத்தலைவராக செயல்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

ஐ.நா.சபை தினம் (World Animal Day) – அக்டோபர் 24

உலக போலியோ தினம் (World Polio Day) – அக்டோபர் 24

சர்வதேச கலைஞர்கள் தினம் (International Artists Day) – அக்டோபர் 25

சொற்கதிர்

Sleeper Bus – படுக்கைப் பேருந்து

Mini Bus – சிற்றுந்து

கூடுதல் தகல்கள்

  • தமிழ்நாடு பசுமை இயக்கம் – 2022

Related Links

Leave a Comment